அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம்
மத்திய அரசே !அஞ்சல் நிர்வாகமே !
குரல்வளையை நெறிப்பதால் எங்கள் குரல்கள் என்ன ஓய்ந்தா போகிவிடும் ? தொழிலாளி இயக்கம் கோடிக் கால் பூத்தமடா ! கோரிக்கைகளின் ரூபமடா ?
வணக்கம் ..தொழிற்சங்கங்களில் ஒருவர் இரண்டுமுறை அல்லது 5 ஆண்டுகள் தான் நிர்வாகிகளாக இருக்கமுடியும் .போட்டியிடும் நிர்வாகிகளும் மண்டல அளவு வரை மண்டல தலைவரிடம் (PMG ) அவர்களிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்கின்ற ஒரு உத்தரவினை அஞ்சல் வாரியம் DOPT உத்தரவை மேற்கோள்கட்டி சுற்றுக்கு விட்டுள்ளது .உடனே பல மாநிலங்களில் அவ்வாறு தொழிற்சங்க பொறுப்புகளில் உள்ளவர்க்ளின் பெயர் பட்டியல் சேகரிக்க போர்க்கால அடிப்படையில் அஞ்சல் நிர்வாகம் களம் இறங்கியிருக்கிறது .
NFPE என்பது ஒரு ஜனநாயக அமைப்பு .இந்த அமைப்பில் கோட்ட அளவில் /கிளை மட்டங்களில் யாரை நிர்வாகிகளாக கொண்டுவருவது என்பது தலைவர்களின் முடிவல்ல மாதாந்திர பேட்டிகொடுக்கும் அதிகாரிகளின் விருப்பமுமல்ல .மாறாக தலமட்டத்தில் ஆண்டு சந்தா செலுத்துகின்ற ஊழியர்கள் ஒன்றுகூடி தங்களுக்குள் ஒருவரை தங்களின் பிரதிநிதியாக தேர்ந்தடுக்கும் பேரியக்கம் NFPE . வெவ்வேறு குழுக்களாக கொள்கையளவில் செயல்ப்பட்டு வந்த தோழர்களும் கூட தங்களுக்குள் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஒரு ஆரோக்கியமான ஜனநாயக முறையை கையாண்டுவந்தார்கள் .மாநாடு முடிந்த மறுகணமே தங்களுக்குள் ஏற்பட்ட போட்டியை மறந்து ஒற்றுமையாக நிர்வாகத்திற்கு எதிராக ஓரணியில் செயல்பட தொடங்கிவிடுவார்கள் .
அதைப்போலத்தான் மாநில /அகில இந்திய அளவிலும் கோட்ட /கிளைகளில் தேர்ந்தெடுக்கப்படும் சார்பாளர்கள் ஒன்றுகூடி மாநில /அகிலஇந்திய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துவருகிறார்கள் .எந்த அதிகாரிகளின் ஆசியோ அல்லது அனுமதியோ தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க தேவை பட்டத்திலை .
ஆனால் அஞ்சல் வாரியம் இவ்வாறு தலமட்டங்கள் தொடங்கி அகிலஇந்தியா வரை ஒரு உயிரோட்டமாக செயல்பட்டுவரும் அமைப்பினை சீர்குலைத்திடவும் தங்களது கைபாவைகளாக இருக்கும் ஊழியர்களை நிர்வாகிகளாக செயல்பட அனுமதித்தால் நிர்வாக முடிவுகளை எந்த சிரமமும் இன்றி நிறைவேற்றிவிடலாம் என்கின்ற அற்ப ஆசைகளினால் DOPT உத்தரவை அதாவது விளையாட்டு மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இவைகளில் அதிகஅளவு பணப்புழக்கம் உள்ளதால் தொடர்ந்து ஒருவரை நிர்வாகியாக நீட்டிக்ககூடாது என்கின்ற உத்தரவை இயக்குனரகத்தில் உள்ள சில அதிகாரிகள் தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் இந்த உத்தரவை தொழிற்சங்கங்களுக்கு நீட்டிக்க உத்தரவிட்டதை நமது சம்மேளனம் முதல் சாதாரண ஊழியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை .
இவைகளை எதிர்த்து நமது சம்மேளனம் விடுத்துள்ள அறைகூவலை ஏற்று வருகிற 24.09.2021 அன்று கோட்ட மட்டங்களில் நடைபெறும் ஆர்பாட்டத்தையும் அத்னை தொடர்ந்து தபால்கார்டு
1. SECRETARY DEPARTMENT OF POST NEWDELHI
2. CABINET SECRETARY DOPT NEWDELHI மற்றும்
3.SECRETARY DOPT NEWDELHI அனுப்பிடவும் கேட்டுக்கொள்கிறோம் .
தபால் கார்டில் இருக்கவேண்டிய வாசகம்
WITHDRAW DRACONIAN ORDERS ISSUED BY DEPARTMENTOF POSTS UNDER F .NO.18-01/2017-SR DTD 15.09.2021FOLLOWED BY DOPT INSTRUCTIONS DOPT F-NO1101./1/2016-ESTT-A-IIIDTD 27.02.2020 PUTTING SO MANY RESTRICTIONS ON UNIONS AND UNDUE INTERFERENCE OF ADMINSTRATION
தோழர்களே !நமது அடிப்படையை உரிமைகளின் மீது கைவைக்கும் நிர்வாக முடிவுகளுக்கு எதிராக அணிதிரள்வோம் ! வெற்றிபெறுவோம் !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை