...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 11, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .

மாமியார் உடைத்தால் மண் குடம் ! மருமகள் உடைத்தால் பொன் குடமா ?

கணக்குகளை SPLITசெய்து தொடங்கக்கூடாது என்கின்ற இலாகா விதிகளை காற்றிலே பறக்கவிடும் ,உப கோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் ...

.SB LOGIN DAY என்றால் அன்று தான் கிளை அஞ்சலகங்கள் தோறும் நூற்றுக்கணக்கான கணக்குகளை தொடங்கவேண்டுமா ? அதுவும் நமது GDS பெயரிலே பலநூறு கணக்குகளை தொடங்கவேண்டுமா ?மூன்று வேளை சாப்பாட்டை ஒரே நேரத்தில் உண்ண சொல்லி கட்டளையிடம் உபகோட்ட அதிகாரிகளை என்ன செய்வது ?

அஞ்சல் வாரியம் மிக தெளிவாக சொல்லியிருக்கிறது .தேவையில்லாமல் கணக்குகளை SPLITசெய்து தொடங்கவேண்டாம் என்று  .அதனால் நிர்வாக செலவுகள் தான் அதிகமே தவிர வேறு எந்த பயனும் இல்லை என்று உத்தரவுகளை பிறப்பித்தும் கூட இலாகா உத்தரவுகளை காலில் போட்டு மிதித்துவிட்டு SPLITகணக்குகளை தொடங்கி எப்படியாவது நிர்ணயித்த இலக்குகளை தங்களது உபகோட்டம் அடைந்திடவேண்டும் என்கின்ற நோக்கத்தில் கிளை /துணை அஞ்சலக ஊழியர்களை கொடுமைப்படுத்தும் போக்கிற்கு முடிவுகட்டிடுவோம் .

உதாரணமாக கடந்த 09.09.2021 SB LOGIN DAY என்று பலநூறு கணக்குகளை SPLITசெய்து தொடங்கப்பட்டதன் விளைவு களக்காடு மற்றும் நான்குனேரி அலுவலக ஊழியர்கள் இரவு 10மணி வரை பணியாற்றிய அவலம் நமது கோட்டத்தில் அரங்கேறியிருப்பது சகிக்கமுடியாத ஒன்று .உண்மையிலே துறைமீது விசுவாசம் உள்ள அதிகாரிகள் ஏன் லாகின் தினத்தில் மட்டும் போலி கணக்குகளை தொடங்கி போலி புள்ளிவிவரங்களை மேல்மட்டத்திற்கு அனுப்பி போலியான வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்று என்ன செய்ய போகிறார்கள் .

ஆகவே இலாகா விதிகளை மீறி இலாகாவிற்கு தேவையில்லாத செலவுகளை ஏற்படுத்தும் உபகோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நமது மாநில சங்கம் மூலம் மண்டல /மாநில அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்ல முடிவெடுத்துள்ளோம் .இலாகா விதி என்பது ஊழியர்களுக்கு தனியாகவும் /அதிகாரிகளுக்கு தனியாகவும் எழுதப்பட்ட புதிய வேதமா ?

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment