அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
இலாகா தேர்வின் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு MACP பதவி உயர்வுகளில் அதை சரிகட்ட கூடாது என்ற நமது துறையின் 06.09.2021தேதியிட்ட உத்தரவு குறித்து பல தோழர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை போக்கும் வகையில் சில பயனுள்ள தகவல்களை சிவகங்கை கோட்ட சங்கத்தின் முன்னாள் கோட்ட செயலரும் ஓய்வுபெற்ற சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசரும் ஆன தோழர் சேர்முகபாண்டியன் அவர்கள் தயாரித்துள்ள மாதிரி விண்ணப்ப படிவங்கள் தேவைப்படுவோர் கோட்ட சங்கத்தை அனுகவும் .அதன்படி இப்போது பணியில் இருக்கும் ஊழியர்கள் /01/09/2008க்கு பிறகு பணிஓய்வு பெற்ற ஊழியர்கள் விடுபட்ட MACP கிடைத்திட உடனடியாக விண்ணப்பிக்கவும்
*2002 மற்றும் 2003அம் ஆண்டுகளில் நோட்டிபிகேஷன் செய்யப்பட்ட இடங்களில் 2004க்கு பிறகு இலாகா ஊழியர்கள் ஆனவர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொடுக்கலாம் என்கின்ற புதிய நீதிமன்ற உத்தரவினை சுட்டிக்காட்டி நமது மூத்த வழக்கறிஞர் திரு .மலைச்சாமி அவர்களின் ஆலோசனைப்படி ஏற்கனவே வழக்கு தொடுத்தவர்கள் புதிதாக விண்ணப்பம் ஒன்று கொடுத்துள்ளார்கள் .
மேலும் தொடர்புக்கு கோட்ட செயலரை அனுகவும் .94421-23416
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment