அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
நாம் யாருக்கும் அடிமைகளல்ல ! நமக்கு யாரும் எஜமானாரும் அல்ல !
கணக்குப்பிடி ! பாலிசி பிடி ! AEPS நடத்து ! IPPB கொடு ! தங்க பத்திரம் வாங்கு அல்லது விற்றுக்கொடு !சரி இவைகளைக்கூட சகித்துக்கொண்டு நமது தபால்காரர்கள் மனச்சுமையோடு செல்வது போதாதென்று ஒவ்வொருநாளும் கண்டிஷன் பெயிலில் வந்த குற்றவாளி காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்து போடுவதைபோல் உபகோட்ட அலுவகத்திற்கு சென்று ரிப்போர்ட் கொடுக்கவேண்டும் என்று எந்த சட்டம் சொல்லுகிறது ! தபால்காரர் /MTS விடுப்பு கேட்டால் ஆளை(GDS) ப்பிடித்துக்கொண்டு வா !இல்லையென்றால் விடுப்பு கிடையாது அல்லது COMBINED DUTY பார் என கட்டளைபோடுவது சரியா ? OFFICIATING பார்க்கின்ற GDS ஊழியர்களை அடிமைகளின் வாரிசுகளைப்போலவும் OUTSIDER களை கட்டாயப்படுத்தி கண்ணீர்வரவைப்பது ஏற்புடையது தானா ? அவர்களே பிழைக்க வழியின்றி அன்றாட கூலியைப்போல வறுமையின் விளிம்பில் நமதுஅலுவலகம் தேடி அண்டி கிடக்கின்றனர் உங்கள் இலக்கு பாவம் அவர்களையும் விட்டுவைக்கவில்லையே ?ஒரு தலைமை அஞ்சலகத்தில் பணிபுரிகின்ற தபால்காரர்களை கண்காணிப்பது தலைமை அஞ்சல் அதிகாரியா ?அல்லது அதையும் தாண்டி உபகோட்ட அதிகாரிகளா ? விரைவில் இதுபோன்ற குட்டி அதிகாரிகளின் அதிகார மீறல்களை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்திட அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது .இதர சங்கங்களிடமும் கலந்தாலோசித்து நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டங்களை மிகப்பெரும் இயக்கமாக நடத்திக்காட்டுவோம் .
இதுபோன்ற தாக்குதல்கள் ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்ட போதெல்லாம் NFPE எனும் நமது பேரியக்கம் வீறுகொண்டெழுந்து ஒற்றுமை எனும் கவசம் தரித்து எங்கள் தோழர்களை பாதுகாத்து தந்திருக்கிறோம் ..பழைய வரலாறு மீண்டும் படிக்கவேண்டிய அவசியம் அதிகரிகளுக்கும் பழைய வரலாறு மீண்டும் படைக்கவேண்டிய கட்டாயத்தில் நாங்களும் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதே உண்மை .அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போராடாது அநீதி களைய முடியாது .தேவையில்லை அனுதாபம் தேவையெல்லாம் நீதியும் சுதந்திரமும் தான் ...ஒன்றுபடுவோம் ..வென்று காட்டுவோம் ..ஆம் தோழர்களே நம்மில் யாரும் அடிமைகளல்ல ! நமக்கு யாரும் எஜமானாரும் அல்ல !
இன்குலாப் ஜிந்தாபாத் ! தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment