அன்பார்ந்த தோழர்களே !
தொழிற்சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுத்திட நிர்வாகத்திற்கு என்ன உரிமை ?என்ன கடமை இருக்கிறது ?தொழிலார்களின் குரலை அடக்கிட வேண்டும் தொழிற்சங்க சலுகையை முடக்கிடவேண்டும் என்கின்ற எண்ணத்தில் அஞ்சல் வாரியம் DOPT உத்தரவினை தனது இஷடத்திற்கு அதை செயல்படுத்திட முனைந்துள்ளது கண்டிதத்தக்கது .மண்டல அளவிற்குள் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்திட PMG யிடம் அனுமதி பெறவேண்டும் என்பதும் OFFICER BEARERS என்றால் 15 பேரை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கவும் நாம் மண்டல அலுவலகம் நோக்கி காவடி எடுக்கவேண்டுமா ? இரண்டு முறை அல்லது 5வருடம் என்றால் ஒவ்வொரு கோட்டத்திலும் 15 நிர்வாகிகளை அடையாளம் காட்டுவதே சிரமமாகிவிடும் .இதுகுறித்து நமது சம்மேளனம் ஆரம்பத்திலேயே எதிர்த்து போராடவேண்டும் (கடிதம் மட்டுமே எழுதிவிட்டு காத்திருக்க கூடாது )என்றும் வெறும் SR பிரிவில் உள்ள ஊழியர்கள் தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்ற அற்ப காரணங்களை சொல்லாமல் இந்த உத்தரவில் DOPT யின் வழிமுறையை மாற்றி கீழ்மட்ட நிர்வாகிகள் என மாற்றியமைத்ததில் அஞ்சல் வாரிய தலைமைக்கு தான் பெரும்பங்கு உண்டு என்பதை உணர்ந்து இலாக்காவிற்கு எதிரான போராட்டத்தை அறிவித்திடவேண்டும் .இதுதான் தீர்வே தவிர .SECTION ஊழியர்களை மாற்றுங்கள் என்பது மட்டுமே மத்திய /சம்மேளன தலைமைக்கு அழகல்ல ....நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment