...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 9, 2021

அன்பார்ந்த தோழர்களே 1தோழியர்களே 1வணக்கம் .

 நமது போராட்டங்களினால் மற்றுமொரு மகத்தான வெற்றி 

மத்திய அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட மூன்று தவணை பஞ்சபடியை நமது தொடர் இயக்கங்களினால் பஞ்சபடியை நாம் பெற்றோம் .அப்பொழுது இந்த இடைப்பட்ட  காலத்தில் அதாவது 01.01.2020முதல் 30.06.2021வரை ஓய்வு பெற்றவர்களுக்கு கிடைக்கவேண்டிய விடுப்பு கால ஊதியம் மற்றும் கிராஜூட்டி இவைகளில் உள்ள வேறுபாடுகளையும் சேர்த்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை மத்திய அரசு ஏற்று இன்று உத்தரவாக வெளியிட்டுள்ளது .இவைகள் எல்லாம் தானாக வந்து அவரவர் கைகளில் தேனாக சொட்டியதா இல்லை .தொடர்ச்சியான நமது போராட்டம் .அசராமல் நமது தலைவர்களின் பேச்சுவார்த்தை அரசாங்கத்தின் அலட்சியத்தை பொருட்படுத்தாமல் அரசாங்கத்தின் இறுக்கத்தை மெல்ல மெல்ல தளர்த்த வைத்த பெருமை நமது மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்திற்கு உண்டு .அதில் நாம் NFPE ஒரு அங்கம் என்பது மற்றுமொரு பெருமை மகிமை ...களம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment