...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 4, 2021

 அன்பு தோழர் அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் கண்ணன் அவர்களுக்கு ஒரு மனம் திறந்த மடல் .....

உங்களது அண்டைக்கோட்டம் என்ற ஆரம்பஅறிமுகம்  ,இருவரும் சக கால கோட்ட செயலர்கள் மேலும்  எதிரெதிர் கருத்துக்களை ஒரே மேடையில் பல கோட்டங்களில்  வீசிச்சென்ற அணிமேல் காட்டிய தீவிரம் காலம் கொடுத்த கட்டளை சில காலம் ஒத்த கருத்தோடு உலா வந்த நேரம்   என்கின்ற அடிப்படையில் ஒருசில வரிகளை வலிகளோடு பதிவிடுகிறேன் ..

தனித்திரு ..விலகியிரு என உங்கள் சகாக்களின் பதிவுகளை பார்த்தேன் 

ஆம் தனித்திருப்போம் விலகியிருப்போம் அவரவர் மாநாடுகளில் நிச்சயம் தனித்திருப்போம் .ஆனால் இன்றைய போராட்ட நேரங்களில் தனித்திருப்பது ஏற்புடையதுதானா ?எட்டுசங்கங்கள் அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளை சேர்த்து வலுவான இயக்கங்கள் நடத்திட முன்வரும்போது டார்கெட் பிரச்சினையை முதன்மை படுத்தி நடத்திடுவோம் என நீங்கள் முன்மொழிந்திருக்கவேண்டும் ..மாறாக முடிவெடுத்ததை மாற்றமாட்டேன் என விலகியிருப்பது ஆரோக்கியம் தானா ? ஒற்றுமையை குறித்து எங்களைவிட அதிகமாக நீங்கள் தான் கொட்டி முழங்கக்கூடியவர்கள் .....இன்று அந்த ஒன்றுபட்ட போராட்டம் நடத்திட தடுப்பது யார் ?தயக்கம் ஏன் ?நாங்கள் ஒருநாளும் நீங்கள் ஒருநாளும் தனித்தனி போராட்டங்களை பார்த்தால் நிர்வாகம் இன்னும் வேகமாகவே நம் மீது தாக்குதல்களை தொடுப்பது உறுதியல்லவா ?ஒற்றுமையை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் சில வரிகளை உங்களுக்காக ?உங்கள் முடிவை மறுபரீசீலினை செய்திடுங்கள் ..தனிமனித தாக்குதலை தவிர்த்திடுங்கள் ...இன்குலாப் ஜிந்தாபாத் 

ஒற்றுமையே உன் 

விலை என்ன ?

நீ இல்லாத இடத்தில 

ஊழியர்களின் நிலை என்ன ?.


தனித்திரு !விலகி இரு 

தேர்தலுக்கு தேவைதான் 

போராட்டத்திற்கு ஒற்றுமை வேண்டாமா ?


என்ன கொடுத்தாலும் ஒற்றுமை 

என்னை கொடுத்தாவது ஒற்றுமை என 

முழங்கிய தலைவனின் சங்கமல்லவா ?


அதிகார வர்க்கத்தை 

அசைத்து பார்க்கும் ஆற்றல் 

ஒற்றுமைக்கு உண்டல்லவா ?


வர்க்க வேறுபாடுகளை கடந்து 

வெற்றி செய்தி தரும் 

வல்லமை உண்டல்லவா ?.


ஒருமுறை உடைத்தாலும் -

மறுமுறை சேர்ந்துகொள்ளும் 

ஆற்றல் ஒற்றுமைக்கு உண்டு !


அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு 

எதிராக தொழிலாளி 

ஏந்திநிற்கும் நம்பிக்கை 

ஆயுதம் தான் ஒற்றுமை ..


ஊழியர்களுக்காக போராட்டத்தை 

முன்னெடுக்கும் போதே 

புது போராட்ட பாதை தேவைதானா ?

எத்தனை நாட்கள் என்றாலும் 

நடத்துவோம் ---ஒன்றுபட்ட 

போராட்டமாக மாற்றுவோம் !

ஒற்றுமை ஒருவழி பாதையல்ல !

இரு கைகளை தட்டி கொள்கை ஓசை 

முழங்கிடுவோம் !

நன்றி .தோழமையோடு SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 












0 comments:

Post a Comment