அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே 1
நேற்று நமது அஞ்சல் மூன்று சார்பாக விடுக்கப்பட்ட அறைகூவலை ஏற்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் /தோழியர்க்ளுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .டார்கெட் நெருக்கடியால் தோழர்கள் சந்தித்த நெருக்கடிகளை ஆர்ப்பாட்ட கூட்டத்தில் அவர்கள் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தனர். .ஆர்ப்பாட்ட முடிவில் கீழ்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது .
1.கோட்ட அலுவலகதின் மூலம் இயக்கப்படும் TVL DIVISION வாட்ஸாப்ப்யில் கேட்டகப்படும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டியதில்லை .உங்கள் PERFORMANCE குறித்தும் உடனுக்குடன் பதிவிடவும் தேவை இல்லை
2.சில உபகோட்ட அதிகாரிகள் டார்கெட் மற்றும் லாகின் குறித்து தொலைபேசியில் அழைத்து மரியாதைக்குறைவாக பேசினால் /நடந்தால் அந்த நிகழ்வை ரெகார்ட செய்து கோட்ட சங்கத்திற்கு அனுப்புங்கள்
3..டார்கெட் குறித்து அறிவிக்கப்படும் வாய்மொழி உத்தரவுகளை புறக்கணியுங்கள்
4.எந்த கிளை அஞ்சலத்திலாவது LOGIN DAY அன்று தான் மொத்தமாக கணக்குத்தொடங்கவேண்டும் என வற்புறுத்தினால் அவர்களுக்கு உரிய அறிவுரையை கூறுங்கள்
.5.உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் எந்த கணக்கினையும் தொடங்கிட கிளை அஞ்சலகங்களில் OUTSIDER மற்றும் GDSஊழியர்களை அனுமதிக்காதீர்கள்
6.டார்கெட் குறித்து எந்த ஊழியர்களும் அச்சப்பட தேவையில்லை .நமது ,மனச்சாட்சிக்கு உட்பட்டு இலாகா பணிசெய்வோம் .நமக்கு யாரும் எஜமானர் அல்ல !நாம் யாருக்கும் அடிமைகள் அல்ல
நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் CPMG அலுவலகம் முழுமையாக முற்றுகையிடப்பட்டது .பல கோட்டங்களில் எழுச்சிமிகு ஆர்பாட்டங்கள் நடைபெற்றது .ஆம் ஒற்றுமையின் ருசியை நேற்றைய ஆர்ப்பாட்டம் நமக்கு உணர்த்தியது .தனித்து போராடுவது தான் தனக்கு பெருமை என எந்த சங்கமும் இனி நினைக்காமல் வருகின்ற நாட்களில் ஒன்றுபட்ட இயக்கத்தை மாநிலம் முழுவதும் நடத்திட முன்வரவேண்டும் ...இந்த கோரிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் ! வெற்றிபெறுவோம் 1
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment