...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, March 10, 2017

திருநெல்வேலியில் சூடு பிடிக்கிறது டார்கெட் --

          டார்கெட் விஷயங்களில் நமது தோழர்கள் எந்த அளவிற்கு நிர்வாகத்தோடு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் என்பதனை நாமும் அறிவோம் .நிர்வாகமும் அறிந்ததே     
ஒரே இரவுக்குள் 
 ATM CARD அனைத்தையும் கொடுக்கவேண்டும் என்றார்கள் .அதிகாலை தொடங்கி இரவு வரை இருந்து நிறைவேற்றி கொடுத்தோம் .
தங்கபத்திரம் வாங்கியாக வேண்டும் என்றார்கள் .கடனோடு கடனாக வாங்கி வைத்தோம் .
கல்வி நிறுவனங்கள் ,மருத்துவமனைகள் ,காவலர் குடியிருப்பு என சளைக்காமல் செயலாற்றினோம் .
கணக்குகளை சந்தோசமாக தொடங்கி கொண்டு இருக்கிறோம்.
 மார்ச் முடியும் வரை யாருக்கும் லீவு கிடையாது என்றார்கள் ஏற்று கொண்டோம் .சொந்த RD கணக்கை மூணு வருடத்திற்கு முன்னாடி போட்டதை CLOSE செய்யலாம் என்றால் உங்களை CLOSE செய்வோம் என்கிறார்கள் பொறுத்து கொண்டோம் ..அலுவலகம் அலுவலகமாக தொலைபேசியில் இன்று என்ன உங்கள் அலுவகத்தில் ஒரு கணக்கு கூட தொடங்க முடியாமல் சும்மா இருக்கிறீர்கள் என விசாரிப்பு --போஸ்ட்மேன் அனைவரும் ஆளுக்கு 25 கணக்குகள் தொடங்க வேண்டும் என தினமும் அர்ச்சனை இதையெல்லாம் தாண்டி ஒரு அலுவலகத்திற்கு கோட்ட அலுவலகத்தில் இருந்து வந்திருக்கும் எச்சரிக்கை கடிதத்தை பாரீர் ! இதற்கு என்ன பதில் கொடுக்க ?

Sub:Poor performance in opening of accounts--reg
Ref:Fresh
       It is observed that net new accounts in your officeis very poor.Time and again you are instructed to openmore number of accounts to achieve the target .Whenever accounts are closed at least twice the number of accounts closed should be opened.But you have failed to take efforts fruitfully which results in poor performance.
                      As such you are hereby directed to send your explanationwith in 3 days and to initiate the strategy to achive the target assinged before 31.03.2017 

                                                                    Sr .Supdt .of Postoffices
                                                                     Tirunelveli Division
நாம் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறோம் .ஊழியர்களை MOTIVATE பண்ணி BUSINESS களை  வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுவது தான் ஆரோக்கியமே தவிர நீங்களும் நாங்களும் தான் பலி ஏற்பது நல்லதல்ல .SSA கணக்கில் நமது கோட்டம் நமது மண்டலத்தில் சிறப்பான நிலையில் இருக்கிறது .இது எங்களது பங்களிப்பால் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
      அதிகாரிகளின் டார்ச்சர் குறித்து  வெளிப்படையாக தெரிவியுங்கள் -மனதுக்குள்ளேயே வைத்து புலம்பாதீர்கள் -மன அழுத்தம் எல்லா நோய்களுக்கும் ஆரம்பம் .  
                           விதிகளை தாண்டி அவர்கள் வேட்டையாட 
                        அஞ்சல் துறை ஒன்றும் வேட்டை காடல்ல 
                         அவர்கள் வேட்டையை வேடிக்கை பார்க்க 
                        நாம் ஒன்றும் குருவி  கூட்டமுமல்ல !
                        
                              தோழமை வாழ்த்துக்களுடன் 
             SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 








0 comments:

Post a Comment