...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, March 31, 2017

                                    நெல்லை செய்திகள் 
நமது அஞ்சல் நான்கின் உறுப்பினரும் மஹாராஜநகர் அஞ்சலக தபால் காரரு மான தோழர் தர்மா அவர்கள் புதுடெல்லியில் நடைபெற்ற  சிவில் சர்வீஸ் தடகள போட்டியில் (800 மீட்டர் )பிரிவில் 
மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார் .தோழர் தர்மா அவர்களை நெல்லை NFPE வாழ்த்துகிறது .
(நன்றி தோழர் சாக்ரடிஸ் NFPE விளையாட்டு வீரர்கள் பிரிவு )
            டிஜிட்டல் இந்தியா -திட்டத்தின் கீழ் பணமில்லா பரிவர்த்தனை தொடர்பான சிறப்பு கூட்டம் பாளை தலைமை அஞ்சலகத்தில்  நேற்று நடைபெற்றது .நிகழ்ச்சியின் இறுதியில் நமது கண்காணிப்பாளர் எழுதிய பாடல் ஒன்றுக்கு உடனே மெட்டு கெட்டி பாடி அசத்தினார் நம் கரிசல் குயில் 

              தோழர் KVS அவர்களின் விதி அறிவோம் என்ற நூல் நேற்று நமக்கு கிடைத்தது .மிகவும் பயனுள்ள நூல் .முதல் கட்டமாக 10நூல் வந்தது அனைத்தும் விநியோகிக்கப்பட்டது .மேலும் பல தோழர்கள் நூல் வேண்டி கேட்கிறார்கள் .ஆகவே மேலும் நூல் வேண்டுவோர் கோட்ட சங்கத்தை அனுகவும் ( 9442123416)அனைத்து விதிகளையும் தொகுப்பது எளிதல்ல அதைவிட அதை தமிழ்மொழியில் தந்திருப்பது என்பது மிக சிறந்த பணி --பாராட்டுதலுக்கு உரியது .தோழர் KVS அவர்களின் தொழிற்சங்க பணிகளோடு இந்த பணிகளும் தொடர நெல்லை NFPE வாழ்த்துகிறது .
    வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் 

0 comments:

Post a Comment