அன்பார்ந்த தோழர்களே !
16.03.2017 வேலைநிறுத்தத்தை வெற்றி பெற செய்வீர் !
கடந்த ஜூன் 16 இல் அறிவிக்கப்பட்ட ஊதியக்குழு -புதிய அலவனசுகளை மட்டும் நிறுத்திவைத்தது . கமிட்டி ஒன்று ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றது .எட்டுமாதங்கள் போயாச்சு நாம் ஏன் இன்னும் நமது சலுகைகளை பெற மௌனித்திருக்க வேண்டும் .அரசாங்கத்திற்கும் ஆள்பவர்களுக்கும் அச்சத்தை ஊட்டக்கூடிய ஒரே செயல் வேலைநிறுத்தம் மட்டும் தான் .கேளா காதுகலாய் இருக்கும் மத்திய அரசின் செவிப்பறையை கிழிக்கும் ஒரே வாசகம் இன்குலாப் ஜிந்தாபாத் --உயர் வர்க்கத்திற்கும் உழைப்பாளிகளுக்கு இருக்கும் வேறுபாட்டை களைய ,பதவி உயர்வில் இருக்கும் தடைகளை தகர்க்க ,புதிய பென்ஷன் உள்ளிட்ட சமூக பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க
பங்கேற்பீர் ! பங்கேற்பீர் !
நிமிரும் பொழுதெல்லாம்
நசுக்க படுவதற்கு -தொழிலாளிகள்
சாக்கடை புழுக்கள் அல்ல
சரித்திர சக்கரங்கள்
நம்மால் நிர்வாகத்தை
முடுக்கவும் முடியும்
முடக்கவும் தெரியும்
போராட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -நெல்லை
0 comments:
Post a Comment