...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 2, 2017

அன்பார்ந்த தோழர்களே !
         மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் சார்பாக --வருகிற 06.03.2017 அன்று வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய  மத்திய அரசை கண்டித்து கருப்பு தினம் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
கடந்த ஜூலை வேலைநிறுத்த அறிவிப்பின் போது மந்திரிகளின் குழு நம்மிடம் கொடுத்த வாக்குறுதிகள் வழக்கம் போல் காற்றிலே பறக்கவிடப்பட்டது .குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவேண்டும் .பிட்மேன் பார்முலா மாற்ற பட வேண்டும் என்ற நமது கோரிக்கையும் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது .கிடைக்கவேண்டிய இதர படிகள் அனைத்தும் முடக்கப்பட்டு 01.01.2016 முதல் தர வேண்டும் என்ற நமது கோரிக்கையும் அலட்சியப்படப்பட்டு வருகிறது என்பதனை நீங்கள் அறீவீர்கள் .
கடந்த ஏப்ரல் 2016 இல் நாம் போராட முனைந்த போதும் மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களை காரணம் காட்டி தள்ளிவைக்கப்பட்ட போராட்டம் --இப்பொழுதும் உபி உள்ளிட்ட 5மாநில தேர்தல்களை காரணம் காட்டி நம்மை ஏமாற்றி வரும் மைய அரசு --இந்த போக்கை எதிர்த்து  நாம் வலுவான ஒரு போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் .அதற்காகத்தான் வருகிற 16.03.2017 அன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யவும் மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனம் முடிவெடுத்துள்ளது .அதற்கு முன்னோட்டமாக ஊழியர்களை திரட்ட மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்திட 06.03.2017 அன்று கருப்புதினம் கடைபிடிக்க அழைப்பு வந்துள்ளது .ஆகவே தோழர்கள் அனைவரும் இன்றே தங்களை தயார் படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
                                           கருப்புதின ஆர்ப்பாட்டம் 
நாள் 06.03.2017 திங்கள் 
நேரம் மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை 
வெல்லட்டும்          வெல்லட்டும் 
வேலைநிறுத்தம் வெல்லட்டும் 



                                                   தோழமையுடன் 

SK .ஜேக்கப் ராஜ்                                                                                    SK பாட்சா 
கோட்டசெயலர்    P 3                                                        கோட்டசெயலர் P 4









0 comments:

Post a Comment