அன்பார்ந்த தோழர்களே !
திருநெல்வேலியில் CSI அமுலாக்கம் 27.03.2018 என நமக்கும் நாள் குறித்திருக்கீறார்கள் .மற்ற கோட்டங்களை ஒப்பிடுகையில் நமக்கு நமது மண்டலத்தில் கடைசிக்கு முந்தைய கோட்டமாக அறிவித்திருக்கீறார்கள் .ROLLOUT க்கு முந்தைய பிரச்சினைகளை சரி செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு ROLLOUT திட்டமிட்ட நாட்களில் நடைபெற்று வருகின்றன .DSM கள் தவிர இதர USERCHAMPION பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமின்றி எடுக்காதவர்களும் மற்ற கோட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் .இந்த சூழலில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் -கணினிகளின் வேகம் -பாட்டரி களின் செயல்பாடு -ஜெனரேட்டர் இயக்கம் -நெட்ஒர்க் இவைகளை சரிசெய்யவேண்டியது கோட்டநிர்வாகத்தின் கடமை என்றாலும் அதை கோட்ட சங்கத்திற்கும் கோட்டநிர்வாகத்திற்கும் கொண்டு செல்வது நம் ஒவ்வொருவரின் கடமை .அந்த அடிப்படையில் கோட்ட சங்கம் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகளை கேட்டு அதில் பதில் பெற்றுள்ளோம் .பதில் வராத கேள்விகளுக்கு மேல்முறையிடு செய்ய இருக்கிறோம் .3 தலைமை அஞ்சலகங்கள் 92 துணை அஞ்சலகங்கள் கொண்ட நம் கோட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள லேசர் பிரின்டர்கள் -பாஸ்புக் பிரின்டர்கள் -ஜெனெரேட்டர் குறித்த உங்கள் அலுவலக எதார்த்த தன்மையை கோட்ட அலுவலகத்திற்கு இன்றே எழுதிவிட்டு அதன் நகலை கோட்ட சங்கத்திற்கு அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம் .வருகிற 23.02.2018 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் விவாதிக்க ஏதுவாக 19.02.2018 குள் தகவல் தெரிவிக்கவும் .நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை .
0 comments:
Post a Comment