...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 21, 2018

அஞ்சல் எழுத்தர்களின் பிரத்யோக பிரச்சினைகள் -சவால்களை சந்திப்போம் 

  ஒரு பக்கம் டார்கெட் -ஒருபக்கம் CSI அமுலாக்கம் -இதற்கிடையில் தற்காலிகமாக மறந்துபோன கேடர் சீரமைப்பு இரண்டாம் பட்டியல் என நம்மை துரத்தும் துயரங்கள் குறைந்தபாடில்லை .டார்கெட்டையை பொறுத்தவரை மற்ற கோட்டங்களை ஒப்பிட்டு பார்க்கையில் நமக்கு தனிப்பட்ட முறையில் அதிகாரிகளின் அர்ச்சனைகள் -கோபதாபங்கள் -விடுப்பு மறுப்பு -MACP நிறுத்திவைப்பு -குற்ற பத்திரிக்கை -உருட்டல் -மிரட்டல் -என சிரமங்கள் இல்லை என்பது உண்மைநிலை 
சுழல் மாறுதலுக்கான ஆரம்பப்பணிகள் நடந்துகொண்டிருந்தாலும் கேடர் சீரமைப்பு இரண்டாம் பட்டியல் வெளிவருவதை பொறுத்துத்தான் RT இருக்கும் என்று சில கருத்துக்கள் நிலவுகின்றன .கேடர் சீரமைப்பின் இரண்டாம் பட்டியலில் மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி என்ற புதிய முறையினால் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன .உண்மையை சொன்னால் சுமார் 600 ஊழியர்களுக்கான சான்றிதழ்களை கண்டுபிடிக்க முடியவில்லையாம் .அப்படி கேடர் வருவதற்கு தாமதித்தால் அதற்கு முன்பு RT முடிந்தாலும் செப்டெம்பரிலோ அல்லது அக்டோபரிலோ கேடர் (சீனியாரிட்டி சரிபண்ணாமலே ) வந்தால் மீண்டும் ஒரு இடமாற்றங்கள் பெருமளவில் இருக்கத்தான் செய்கிறது .மாநிலநிர்வாகம் இது குறித்து என்ன முடிவுகள் எடுக்கப்போகிறது என்பதனை பொறுத்துதான் ஊழியர்களின் அச்சஉணர்வை நாம் முழுமையாக போக்கிட முடியும் .
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment