...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 16, 2018

                                       முக்கியசெய்திகள்
நெல்லை கோட்டத்தில் இன்று MACP பதவியுயர்விற்கான DPC கூடுகிறது .கன்னியாகுமரி -ராமநாதபுரம் கோட்டத்தில் உள்ள அதிகாரிகள் இதில் உறுப்பினராகவும் நமது கண்காணிப்பாளர் அவர்கள் சேர்மன் ஆகவும் உள்ள இந்த கமிட்டி MACP I II மற்றும் III பதவியுர்வுக்கு 31.03.2018 வரை உள்ள காலத்திற்கான ஊழியர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------.
சுழல் மாறுதலுக்கான LSG முதல் HSG I வரையிலான காலியிடங்கள் குறித்தகோவை JCA சார்பாக 20.02.2018 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கோட்டத்தின் வாழ்த்துக்கள் . தகவல்கள் மண்டல அலுவலகத்திற்கு சென்றுவிட்டன .விரைவில் ஏனைய ஊழியர்களுக்கான RT NOTIFICATION வெளிவரும்
-------------------------------------------------------------------------------------------------------------------------
                           கோவை கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் வெல்லட்டும்
கணக்குகளை பிடிக்க நிர்வாகம் கொ(தொ )டுக்கும் தாக்குதலை கண்டித்து கோவை JCA சார்பாக 20.02.2018 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கோட்டத்தின் வாழ்த்துக்கள் .
                             வருடத்திற்கு ஒரு முறை
                             நடந்தால் தான் மேளா --.
                            நித்தம் நித்தம் நடந்தால்
                           அதன் பெயரென்ன தோழா ?
-------------------------------------------------------------------------------------------------------------------------
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் 5 நாள் தர்ணா 16.02.2018 இன்றுடன் நிறைவுபெறுகிறது .போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை .
--------------------------------------------------------------------------------------------------------------------
                           

0 comments:

Post a Comment