...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 23, 2018

கணக்குகளை பிடிக்க  கோட்ட மட்டங்களில் ஊழியர்களை மோசமாக நடத்தும் நிர்வாகத்தை கண்டித்து 
தமிழ் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் 
                                  நாள் 02.03.2018 வெள்ளிக்கிழமை 
இடம் பாளையம்கோட்டை HO- மாலை 6 மணி 

வழக்கத்தை விட இந்தஆண்டு தமிழகம் முழுவதும் கணக்குகளை தொடங்க நிர்வாகம் காட்டும் வேகம் அதிகமாகத்தான் இருக்கிறது .
                                               தவறான முன்னுதாரணம் 
மத்திய மண்டலத்தில் ஒரே நாளில் ஒருகோட்டத்தில் 25000 கணக்குகள் தொடங்கியிருக்கிறார்களாம் .ஒரே நாளில் 25000 வாடிக்கையாளர்கள் கணக்குகளை தொடங்க தீர்மானித்தார்களா ? ஒரே நாளில் தான் ஆயிரக்கணக்கான கணக்குகளை தொடங்கவேண்டும் என்று யார் சொல்லிக்கொடுத்தது ? ஒரே நாளில் தொடங்கினால் தான் கணக்கில் சேருமா ?அந்த கோட்டம் செய்துவிட்டது இந்த கோட்டம் செய்துவிட்டது என்று இன்று தமிழகம் முழுவதும் கோட்ட அதிகாரிகளுக்கு இந்த புதுவித வியாதிதொற்றிக்கொண்டுள்ளது .இது ஆபத்தான விஷயம் .கோட்டத்திற்கு இலக்கை கொடுத்திருக்கிறீர்கள் .மார்ச் 31 வரை இந்த நிதி ஆண்டின் ஆயுள் இருக்கிறது .ஆகவே தலமட்ட ஊழியர்களின் நிலைமையை புரிந்துகொண்டு -ஒவ்வொரு பணியிடத்தில் இருக்கும் உட் கட்டமைப்புகளை கருத்தில் கொண்டு நிர்வாகம் செயல் படவேண்டும் .
               நேற்று தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத சிவராத்திரி 
மீண்டும் பினாகில் தன் சுயரூபத்தை காட்டிவிட்டது .வேலைக்கு வந்தோம் வேலையை முடித்தோம் விரைவாக வீட்டிற்கு சென்றோம் மறுநாள் விடியலுக்காக கொஞ்சம் ஓய்வெடுப்போம் என்ற நிலைமாறி புதுவித படபடப்போடு -பரப்பப்போடு நேற்றைய நாள் க(ஒ )ழிந்தது .வேலைமுடியாவிட்டால் வீட்டிற்கு போகலாம் நாளை வந்து பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை அஞ்சல் ஊழியர்கள் பழக்கத்தில் இல்லாத ஒன்று 
.இந்த அர்ப்பணிப்பும் -ஈடுபாடுமும் தான் நிர்வாகம் நினைக்கும் அத்தனை புதிய பணிகளை நம் அஞ்சல் ஊழியர்களால் மட்டும் நிறைவேற்றப்படுகிறது .
  இந்த கள நிர்வாகத்தை புரிந்து கொண்டு மாநில நிர்வாகம் செயல்படவேண்டும் .பொய் கணக்குகள் -போலி கணக்குகள் இலாகா உத்தரவை மீறி தொடங்கும் குறைந்த  ரூபாய் கணக்குகள் ஒருவருக்கே பலநூறு கணக்குகள் இவைகளால் துறைக்கு லாபமா ?நஷ்டமா ?என்பதனை சீர்தூக்கி பார்க்க வேண்டும்  .இந்த நிர்வாகத்தின் தவறான நடவடிக்கை அச்சுறுத்தல் சில எடுபிடிகளின் கெடுபிடிகள் இவைகளை எதிர்த்து தமிழக NFPE -FNPO ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்திருக்கும் முதற்கட்ட போராட்டத்தை வெற்றி பெறச்செய்வோம் .
பரவட்டும் தீ பரவட்டும் -போராட்ட தீ தமிழகமெங்கும் பரவட்டும் 
வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா  கோட்ட செயலர்கள்நெல்லை 

0 comments:

Post a Comment