இன்று இணைந்ததல்ல -1954 யிலே இணைந்து கைகள் நம் கைகள்
நேற்று நடிகர் கமலஹாசன் அறிமுகப்படுத்திய கொடியை பார்த்தவுடன் நமது தோழர்கள் இது நமது சம்மேளன லோகோ போல் உள்ளது என்றார்கள் .ஆறு இணைந்த கைகளை காட்டப்பட்டிருந்தது .நமக்கோ ஒன்பது சங்கங்களை குறிக்கும் வகையில் ஒன்பது கைகள் இணைந்திருக்கும் .இளைய தோழர்களின் விருப்பங்களுக்காக இந்த ஒன்பது கைகளின் தோற்றத்தை சிறிது பார்ப்போம் .தபால் -தொலைதொடர்பு ஒரே துறையாக இருந்தகாலங்களில் அஞ்சல் பகுதியில் P 3 P 4(போஸ்டல் ) R 3 R 4 (RMS)
தந்தி பிரிவில் T 3 T 4 தொலைபேசி பகுதியில் E 3 E 4 மற்றும் நிர்வாக பிரிவு என ஒன்பதுசங்கங்கள் ஒரே குடையின் கீழ் NFPTE என்ற சம்மேளன அமைப்பு 24.11.1954 யில் அமைந்தது .NFPTE சம்மேளன முதல் கூட்டத்திலே இரண்டாவது சம்பளக்குழு அமைக்கவேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகயை வடித்தெடுத்து அரசுக்கு சமர்ப்பித்தது .வழக்கம் போல் அன்றைய அரசால் நமது கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்ட சூழலில் 08.08.1957முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று 15.07.1957 அன்று அரசுக்கு நோட்டிஸ் கொடுத்தது இதற்கிடையில் 03.08.1957 அன்று அரசு 2வது ஊதியகுழுஅறிவிப்பை வெளியிட்டது .ஆனாலும் நமது போராட்ட அறிவிப்பை தொடர்ந்து 05.08.1957 அன்று மத்தியஅரசு ESMA சட்டத்தை அறிவித்து வேலைநிறுத்தம் செய்தால் 6 மாதம் சிறைதண்டனை 500 ரூபாய் அபராதம் என்றும் வேலைநிறுத்தத்தை தூண்டினால் ஒரு வருடம் சிறை ரூபாய் 1000அபராதம் என்றும் அறிவித்தது .அன்றைய பிரதமர் திரு .நேரு அவர்கள் வானொலி மூலம் நம் போராட்ட அறிவிப்பை கைவிட கூறி வேண்டுகோள் விடுத்தார் .சுதந்திரத்திற்கு பின் ஒரு பிரதமரே வானொலி மூலம் வேலைநிறுத்தம் குறித்து உரையாற்றியது அதுதான் முதல்முறை .இப்படி பட்ட வரலாற்று பேருண்மைகளை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும் பெருமை நம் NFPE க்கு மட்டுமே உண்டு . -இது தியாக தலைவர்களின்ர த்தத்தில் வளர்க்கப்பட்ட பாசறை . 24.11.1954 முதல் NFPTE ஆகவும் 01.01.1985 முதல் தபால் மற்றும் தொலைத்தொடர்பு தனி தனி துறை ஆனதுமுதல் NFPE ஆகவும் பணியாற்றிவருகிறோம் .அதன் பிறகு ஒன்பது சங்கங்கள் ஏழாக மாறியது .இந்த தியாக இயக்கத்தை மென்மேலும் வளர்த்திடுவோம் .சிலர் நினைப்பது போல் வந்து வந்து போவதற்கு NFPE சத்திரமல்ல -ரத்த சரித்திரம் .நினைவில் கொள்வோம் .NELLAI NFPE யின் மான்பை காப்போம் .BE PROUD BEING A MEMBER OF NFPE
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment