(நெல்சன் மண்டேலா இருப்பைத்தந்து ஆண்டுகள் சிறையில் இருந்தார் .அதை தத்ருபமாக சொல்லும் கவிதை இது
ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து
அவனுக்கும் குழந்தை பிறந்தது
அப்போதும் மண்டேலா சிறையில் இருந்தார்
நான் பிறக்கும் போதும் சிறையில் இருந்தாய் -எனக்கு
குழந்தை பிறக்கும் போதும் சிறையில் இருந்தாய்
என்ற கவிதையின் சாரம் என்னுள் எழுந்தது .அதன் வெளிப்பாடு இந்த வ(லி )ரிகள்
நல்லது தான் ..ரொம்ப நல்லது தான்
இன்னும் ஒரு சுதந்திர போராட்டம்
இன்றும் நடந்து கொண்டிருக்கிறது
இரண்டரை லட்சம் ED களின் - உழைப்பு
இங்கு சுரண்டப்பட்டு கொண்டிருக்கிறது
ஆறேழு உயிர்கள் போய்விட்டது
ஈரேழு நாட்கள் முடிந்துவிட்டது
இன்னும் எத்தனை உயிருக்காக
காத்திருக்கிறதோ இந்த அரசு ?
பதினெட்டு மாதங்கள் ஆனது -
பரவாயில்லை -
பத்து நாட்கள் ஆனது -சம்மேளனம் -நம்
பக்கம் திரும்பி பார்க்க !
பதினான்கு நாட்கள் ஆனது -அமைச்சர் சொல்லி
அதிகாரிகள் வந்து பேச !
உறுதி குறையா உள்ளதோடு
உருக்கு போன்ற உறுதியோடு
போராடும் தோழனே உன்னை
வணங்குகிறேன் !வாழ்த்துகிறேன் !
வேலைநிறுத்தத்தை நீங்கள் அறிவித்தீர்கள்
நாங்கள் விவாதித்து கொண்டிருந்தோம் .
யாரையும் எதிர்பார்க்காமல்
நீங்கள் வேலைநிறுத்தம் தொடங்கீனீர்கள்
நான்கு மாநிலங்களில் நாங்களும் தொடர்ந்தோம்
நீங்கள் வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்தீர்கள்
நாங்கள் நான்கு நாட்கள் செய்து முடித்தோம்
அப்போதும் வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்தீர்கள்
மேலும் ஒரு நாள் அஞ்சல் நான்கு செய்தது
இப்போதும் வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்தீர்கள்
பக்கத்து மாநிலம் கேரளாவில்
பத்து நாட்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது
இன்னும் வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்தீர்கள்
ஊர்வலம் பேரணி உண்ணாவிரதம் -என
வேலைசெய்துகொண்டே நாங்கள் கலந்து கொண்டோம்
எப்போதும் போலவே வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்தீர்கள்
அதிகாரிகள் ஆசை வார்த்தை கூறினார்கள்
ஆனாலும் வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்தீர்கள்
எச்சரிக்கை மிரட்டல் வந்து சென்றது -முன்னைவிட
வேகமாக வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்தீர்கள்
முழுசம்பளம் வாங்கி செலவு செய்து முடித்தோம்
நீங்களோ வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்தீர்கள்
GPF வாங்கினோம் இதர பணங்களை வாங்கினோம்
என்றாலும் வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்தீர்கள்
மந்திரி வந்தார் -வழக்கம் போல் வாபஸ் பெற சொன்னார்
இப்போதும் வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்தீர்கள்
மூன்றில் ஏதாவது ஒருசங்கம் விலகி கொள்ளும் என்றார்கள்
ஒற்றுமையாகவே வேலைநிறுத்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள்
வாசல் திறந்தால் போதும் -மந்திரியின்
வாய் சிரித்தால் போதும் -என
வழக்கமான வாக்குறுதியோடு வந்து விடாதீர்கள் !
-இங்கு மட்டும் தான்
வாதாடும் தலைவனும் போராடுகிறான்
போராடும் ஊழியனும் வாதாடுகிறான்
நல்லது தான் .ரொம்ப நல்லது தான்
ED க்கு தனி சங்கம் நல்லது தான்
சம்மேளனத்தில் சேரக்கூடாது என
சர்க்கார் போட்ட உத்தரவும் நல்லது தான்
ED பிரச்சினையை மட்டுமே வைத்து -எல்லாரும்
போராட்டம் நடத்துவதும் நல்லது தான்
ED க்காக ED போராடவேண்டும் என்ற
உணர்வு இப்போது வந்ததும் நல்லது தான் .....
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
----------------- ஜேக்கப் ராஜ் ---------------------------------------------

அருமை Jakapraj நீர் மேதை இல்லை மா மேதை வாழ்த்துக்ளுடன் அன்பு | BPM
ReplyDelete