...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, June 6, 2018

                                                  முக்கிய செய்திகள்
GDS கோரிக்கைகளுக்கு ஆதரவாக NFPE மற்றும் FNPO சார்பாக ஐந்து நாட்கள் தொடர் உண்ணாவிரதம் ஜூன் 7 ;8; 11 ;12 ; 13ஆகிய  நாட்களில் ஒவ்வொரு மாநில CPMG அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் நடைபெறுகிறது 
இரண்டாவது கட்டமாக டெல்லி டாக் பவன் முன்பு அகிலஇந்திய நிர்வாகிகள் 18.06.2018 மற்றும் 19.06.2018 இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் நடைபெறுகிறது .மேலும் கோட்ட மட்டங்களிலும் தலமட்டத்தில் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்க அறைகூவல் வந்துள்ளது .நமது கோட்டத்தை பொறுத்தவரை CSI அமுலாக்கத்தை முன்னிட்டு விடுப்பு கிடைப்பதில் சிரமங்கள் இருப்ப  தால் இன்று NFPE ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் கலந்து பேசி சூழ்நிலைக்கேற்ற இயக்கங்களை நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் .
-------------------------------------------------------------------------------------------------------------------
CSI குறித்த பயிற்சி வகுப்புகள் 10.06.2018 அன்று திருநெல்வேலி HO வில் நடத்த உத்தேசதிக்க பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள் .நேற்று பல தோழர் /தோழியர்கள் கலந்து கொள்வதாக தெரிவித்திருந்தார்கள் .ஊழியர்களின் எண்ணிக்கையை பொறுத்து விரிவான தயாரிப்புகளை செய்ய கோட்ட சங்கம் தயாராக இருக்கிறது .விருப்பமுள்ளவர்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்த கேட்டு கொள்கிறோம் .
-----------------------------------------------------------------------------------------------------------------------
CSI க்கு முன்னதாக அனைத்து அலுவலகங்களில் உள்ள உட்கட்டமைப்புகளை சரி செய்ய கேட்டிருந்தோம் .கோட்ட நிர்வாகமும் அனைத்து C கிளாஸ் அலுவலகத்தில் உள்ள UPS பேட்டரிகளை வாரம் நான்கு அலுவலகம் வீதம் மாற்றி கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்திருந்தது .கோட்ட சங்க கவனத்திற்கு வந்த அலுவலகங்களுக்கு தேவைகள் குறித்து நிர்வாகத்திற்கு கடிதமும் கொடுத்து விவாதிக்கப்பட்டுள்ளது . நேற்று நமது கோட்ட நிர்வாகத்தால் நிர்வகிக்கும் CSI திருநெல்வேலி டிவிசன் வாட்ஸாப்ப் குரூப்பில் தோழர்கள் தங்கள் அலுவலக குறைகளை பதிவிட்டிருந்தது வரவேற்கத்தக்கது .இந்த தளத்தில் மண்டல அளவிலான அதிகாரிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள் .ஆகவே நிச்சயம் நமது வேதனை வலிகள் செல்ல வேண்டிய இடத்திற்கு நேரடியாக செல்லும் .தயங்காமல் இந்த தளத்தை பயன்படுத்துங்கள் .
------------------------------------------------------------------------------------------------------------
--TA  CEA  உள்ளிட்ட அனைத்து BILL களும் அதிகஅளவில் PASS செய்யப்பட்டுள்ளது .
CSI கையேடு இன்னும் கிடைக்காதவர்கள் கோட்ட செயலரை அனுகவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment