...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, June 11, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 நமது நெல்லை கோட்டமும் 12.06.2018 முதல் CSI எனும் புதிய தொழிற்நுட்பத்திற்குள் நுழைகிறது .ஆரம்பத்தில் CSI அமுலாக்கத்தின் போது அந்தந்த கோட்ட ஊழியர்கள் பட்ட சிரமங்கள் நமது தோழர்கள் பட்டுவிட கூடாது என்ற அடிப்படையில் நமது கோட்ட மாநாட்டின் போதே CSI விளக்க கையேடு வழங்கப்பட்டது .மேலும் கோட்ட மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நேற்று பாளையம்கோட்டையில் நமது தோழர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது .இந்த பயிற்சி வகுப்பினை மிக சிறப்பாக நடத்தி காட்டிய நமது கோட்ட சங்கத்தின் மூத்த DSM திரு .ரசூல் முகைதீன் அவர்களுக்கு எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் .புனித ரமலான் மாதத்தில் அவர் மேற்கொண்டிருக்கும் நோன்பு நேரத்திலும் தளராமல் முழுநேர வகுப்புகளை எடுத்தது பாராட்டிற்குரியது .அத்துடன்CSI அமுலாக்கத்திற்கு பிறகு சந்திக்கும் பிரச்சினைகளை குறித்து எடுத்துரைத்த விளாத்திகுளம் போஸ்ட்மாஸ்டர் திரு .சந்திரபோஸ் அவர்களுக்கும் நன்றி .முக்கியமாக சுமார் 79 தோழர்கள் இந்த பயிற்சி வகுப்பில் மிக ஆர்வத்தோடு பங்கேற்று சிறப்பித்ததும் பயிற்சிக்கு பிறகு தோழர்கள் தந்த feedback  உள்ளபடியே நமக்கு ஒரு சிறப்பான பணியினை செய்ததை போல் இருந்தது .இந்த பயிற்சி வகுப்பினை தலைமை அஞ்சலத்திற்குள் நடத்த அனுமதி அளித்த கோட்ட நிர்வாகத்திற்கும் நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 





0 comments:

Post a Comment