...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, June 13, 2018

                       நெல்லையில் நடந்த CSI  அமுலாக்க விழா 
நேற்று 12.06.2018 அன்று நெல்லை கோட்டத்தில் CSI ROLLOUT  சிறப்பாக நடைபெற்றது .மூன்று தலைமை அஞ்சலகத்திற்கும் நமது தென்மண்டல இயக்குனர் திரு .பவன்குமார் சிங் அவர்கள் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்கள் .திருநெல்வேலி HO வில் நடைபெற்ற விழாவில் நமது கோட்ட சங்கத்தின் சார்பில் நமது இயக்குனர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க பட்டது .மேலும் விழாவின் போது நமது கோட்ட சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று நமது கோட்ட சீனியர் DSM திரு .ரசூல் அவர்களுக்கு இயக்குனர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் .  
 வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்ட தோழர் அந்தோணி சாமி 
நமது கோட்டத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக எலெக்ட்ரிஷன் என்ற பெயரில் கோட்டம் முழுவதும் எலக்ட்ரிகல் மற்றும் ஜெனெரேட்டர் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஏற்று மிக சிறப்பாக பணியாற்றி வரும் முன்னாள் பாளை கிளை செயலர் தோழர் அந்தோணி சாமி அவர்கள் இந்தமாதம் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி அவரது சீர்மிகு சேவையை பாராட்டி நமது இயக்குனர் அவர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்கள் .இதுவரை தன்னை எந்த மேடையிலும் முன்னிலை படுத்தாத தோழர் அந்தோணி சாமி அவர்களின் பன்முக திறமைகளை நமது இயக்குனர் முன் பாராட்டி வெளிக்கொணர்ந்த நமது திருநெல்வேலி ASP திரு .G.செந்தில்குமார் அவர்களுக்கு கோட்டசங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .







0 comments:

Post a Comment