கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தல் -உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நெல்லையில் சிறப்பாக நடைபெற்றது .ஐந்து முன்னணி தினசரி செய்திதாள்கள் நம் போராட்ட செய்தியை வெளியிட்டு மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றது .மாலைமலர் தினகரன் தினத்தந்தி தினமலர் தினமணி பத்திரிக்கை நண்பர்களுக்கு நெல்லை NFPE இன் சார்பாக நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .காலை முதலே அனைத்து அலுவலகங்களில் இருந்து அனுப்பட்ட செய்திகள் குறித்து மகிழ்ச்சி அடைகிறோம் இன்றும் நாளையும் தொடர வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .நேற்று திருநெல்வேலி தலைமை அஞ்சலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் குத்தாலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .APMSB திரு .ராஜேந்திரன் மகிளா கமிட்டி கன்வீனர் APM A/CS தோழியர் பசுமதி மற்றும் தோழியர் சூரியகலா ஆகியோர் உரையாற்றினார்கள் .நமது அமைப்பு செயலர் தோழர் முத்துமாலை நன்றி கூறினார்கள் .இன்று மதியம் 1 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கோட்ட செயல் தலைவர் தோழர் N.கண்ணன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் .பாளை மற்றும் கோட்ட அலுவலக ஊழியர்கள் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் .நன்றி .தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
தினமணி
தினமலர்
தினமணி
தினகரன்
தினமணி
தினமலர்
தினமணி
தினகரன்
0 comments:
Post a Comment