...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, June 2, 2018

                                   நெல்லை கோட்ட செய்திகள் 
திருநெல்வேலி உபகோட்ட ASP திரு G.செந்தில்குமார் அவர்கள் ASP (OD ) கன்னியாகுமரி கோட்டத்திற்கு இடமாறுதலில் செல்கிறார் .கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பான பணியினை செய்திட்ட ASP திரு .செந்தில்குமார் அவர்களுக்கு நெல்லை NFPE யின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .திருநெல்வேலி உப கோட்ட ASP ஆக திருமதி K .சண்முக பிரியா (ASP HOS TUTICORIN ) அவர்கள் வருகிறார்கள் .ஏற்கனேவே நமது கோட்டத்தில் IP வள்ளியூராக பணியாற்றி ASP பதவி உயர்வு பெற்று சென்றார்கள் .அவர்களையும் நாம் வாழ்த்தி வரவேற்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
GDS ஊழியர்களின் போராட்டம் இன்று 12 வது நாளாக தொடர்கிறது .டெல்லியில் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது .அதனை தொடர்ந்து மூன்று GDS சங்கங்களும் தொடர்ந்து போராட முடிவெடுத்துள்ளது .வேலைநிறுத்தத்தின் எதிரொலியாக நடந்த ஊர்வலங்கள் கவர்னர் மாளிகை நோக்கி பேரணிகள் இவைகளை தொடர்ந்து அனைத்து CPMG களுக்கும் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாம் .கர்நாடக மாநில கவர்னர் நமது கோரிக்கை மனுவை பெற்று  கொண்டதோடு மட்டுமல்லாமல் நமது ஜனாதிபதி அலுவலகம் வரை இந்த பிரச்சினையை கொண்டுசென்றுள்ளார்கள் .முடிவெடுக்கும் நிலையில் பிரதமர் அலுவலகத்திலோ நிதி அமைச்சக அலுவலக அலுவலகத்திலோ உரிய அதிகாரம் படைத்த அதிகாரிகள்  தலைநகரில் தற்சமயம் இல்லாதது தான் போராட்டம் முடிவுக்கு வருவதில் தாமதம் ஆகுவதாக தெரிகிறது .வெற்றியை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம் .தளராமல் முன்னேறுவோம் .இறுதிப்போரின் உச்சக்கட்டம் .வெற்றி நமதே !நேற்றைய தினம் பாளையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி .தொடர்ந்து தலமட்டத்தில் நமது ஆதரவை கொடுத்திடுவோம் .
------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment