...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 1, 2018

                                                    நெல்லை கோட்ட செய்திகள்
விடுமுறை அளிப்பதற்கான தடை நீக்கம் -நமது வேலைநிறுத்தம் தொடர்பாக விதிக்கப்பட்ட விடுப்பு எடுப்பதற்கான தடை வேலைநிறுத்தம் முடிந்தபின்பும் நமது கோட்டத்தில் நீடித்துவந்தது .அவரச விடுப்பு ஒவ்வொன்றிற்கும் நாம் நமது SSP அவர்களை தொடர்புகொண்டு விடுப்பு விண்ணபித்த ஊழியர்களுக்கு விடுப்பினை பெற்று வந்தோம் .இறுதியாக 29.05.2018 அன்று நமது மண்டல செயலர் /மாநிலத்தலைவர் மூலமாக பிரச்சினை மண்டல அலுவலகத்தில் எடுத்து பேசியபோது மண்டலநிர்வாகம் அப்படி ஒரு உத்தரவை தாங்கள் பிறப்பிக்கவில்லை என்று நழுவிக்கொண்டது .வேலைநிறுத்த விலக்க கடிதம் வந்த பிறகுதான் விடுப்பு வழங்கப்படும் என்ற தவறான புரிதலே இந்த பிரச்சினைக்கு மூல காரணம் .நேற்று கோவில்பட்டி /நெல்லை கோட்டங்களில் தான் இந்த பிரச்சினை என்று மண்டல நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்ற மாநில சங்கத்திற்கும் மாநில தலைவர் மற்றும் மண்டல செயலர் அவர்களுக்கும் நன்றி
----------------------------------------------------------------------------------------------------------------------
CSI அமுலாக்கத்திற்கு முன்பாக கோட்ட நிர்வாகம் செய்யவேண்டிய உட்கட்டமைப்பு பணிகள் சம்பந்தமாக முதற்கட்ட பணிகளை நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது .முதற்கட்டமாக டோனவூர் பெட்டைக்குளம் காவல்கிணறு உள்ளிட்ட நான்கு அலுவலகங்களுக்கு புது பேட்டரி வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது .பொட்டல்புதூர் கீழாம்பூர் பத்தமடை உள்ளிட்ட நான்கு அலுவலகங்களுக்கு  அனுமதி கேட்டு மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது .விஜயநாராயணம் அலுவலகத்திற்கு லேசர் பிரிண்டர் வாங்கவும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது .கோட்ட நிர்வாகத்திற்கும் எங்கள் நிலைமைகளை உணர்ந்து மின்னல் வேகத்தில் பணியாற்றும் கோட்ட அலுவலக Technology பிரிவு  தோழியர்களுக்கும் நன்றி .நன்றி
----------------------------------------------------------------------------------------------------------------
                                               வாழ்த்துகிறோம் 
நமது கோட்டத்தில் இருந்து  விளையாட்டு வீரர்கள் தோழர் சாக்ரடிஸ் தோழர் பால்பாண்டி தோழர் தர்மா ஆகிய மூன்று தோழர்களும் APS க்கு வாரண்ட் ஆபிசர் (PA ) ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் .அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .திறமையான தபால்காரர்கள் மூன்றுபேரும் ஒரே நேரத்தில் மஹாராஜநகர் அலுவலகத்தில் இருந்து செல்வது மஹாராஜநகர் பகுதி மக்களுக்கு பெரிய  இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என தெரிகிறது .
----------------------------------------------------------------------------------------------------------------------
GDS ஊழியர்களின் 11 வது நாள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு இன்று பாளையம்கோட்டையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது .நமது அஞ்சல் மூன்று நான்கு தோழர்கள் மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் 
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா 

0 comments:

Post a Comment