...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 30, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 நமது சென்ற மாத மாதாந்திர பேட்டியில் விவாதித்த பிரச்சினைகளில் ஒன்றான 
 Request to re-fix the pay of the officials w.e.f 01.01.2006 who are promoted in the light of the Directorate Lr No. 7-2/2016-PCC(Pt.)  dated 03.10.2018 communicated in RO Lr No. EST/121-21/CPC-Rlg/2016 dated 11.10.2018 என்ற  பிரச்சினை இன்று முடிக்கப்பட்டு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் மூன்று ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம்  மாற்றியமைக்கப்பட்டுள்ளது .
தோழர் ஐசக் பால்பாண்டியன்  34000 (பழைய ஊதியம் ) 35300 (புதிய ஊதியம் )
தோழர் விவேகானந்தன் 33300 (பழைய ஊதியம் )  34300 (புதிய ஊதியம் )
தோழர்  நமசிவாயம் 34000 (பழைய ஊதியம் ) 35300 (புதிய ஊதியம் ) 
விரைந்து செயல்பட்ட கோட்ட நிர்வாகத்திற்கும் திருநெல்வேலி கணக்கு பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் நெல்லை NFPE தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது .நிலுவைத்தொகை அடுத்தவாரம் பட்டுவாடா ஆகும் .
நன்றி .SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்  நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே !
                                                புத்தாண்டு டைரி 2019 
நமது நெல்லை கோட்டத்தில் கடந்த 12 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் டைரி இந்த ஆண்டும் வெளிவர இருக்கிறது 
உங்கள் படைப்புகள் இருந்தால் அனுப்பிவைக்கலாம் .மேலும் இலாகா மற்றும் தொழிற்சங்கம் சார்ந்த குறிப்புகளையும் அனுப்பிவைக்கலாம் .அலைபேசி எண்களில் மாற்றம் செய்திருந்தாலோ அல்லது திருத்தம் செய்யவேண்டியதிருந்தாலும் வருகிற 07.12.2018 குள் கோட்ட செயலருக்கு (94421 23416 என்ற வாட்ஸாப்ப் அல்லது SMS மூலம் தெரிவிக்கவும் .
            -------------------------------------------------------------------------------
                          கேடர் சீரமைப்பு இரண்டாம் பட்டியல் வருவதற்கு முன் 1.ஏற்கனவே பதவி உயர்வை மறுத்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் ..2.காசாளர் பதவிகளுக்கு மாற்றாக 600க்கு  மேற்பட்ட பதவிகள் உருவாக்கிட வேண்டும் என்ற எதார்த்தமான கேள்விகள் எழுந்துள்ளன .பெரும்பாலும் கோட்ட அளவிலே இடமாற்றங்கள் உறுதிசெய்ய படும் என்றும் .LSG பதவிஉயர்வில் வெளி கோட்டங்கள் வெளி மண்டலங்கள் செல்ல விரும்புவர்களுக்கு RE ALLOTMENT கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது .
                                   -------------------------------------------
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, November 28, 2018

      அன்பார்ந்த தோழர்களே !
           இந்த மாத மாதாந்திர பேட்டி 30.11.2018 மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது .அஞ்சல் மூன்றின் சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் G.நெல்லையப்பன் &RVT பாண்டியன் ஆகியோர்களும் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் SK .பாட்சா P  மாணிக்கம்   (களக்காடு ) V.தங்கராஜ் ஆகியோர்களும் கலந்து  கொள்கிறார்கள் .அஞ்சல் மூன்றின் சார்பாக கொடுக்கப்பட்ட சப்ஜெக்ட்ஸ் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன .இதுபோக வேறு பிரச்சினைகள் இருப்பினும் கோட்ட செயலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் .
        
NFPE
 ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                                         TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-MM / dated at TVL 627002 the 28.11.2018

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,

            Sub:    Subjects for monthly meeting -reg
*****

              The following subjects may kindly be included for discussion during the monthly meeting.

1.        Request early passing of Transfer TA Bill – c/o Shri. Vennikumar, PA, Tirunelveli Pettai who was repatriated from APS during the year 2017.  It is requested to accord priority in passing his Transfer TA as per the instructions pertaining to the officials served in APS.

2.        Shri. Vennikumar, PA, Tirunelveli Pettai was deputed to APS on 29.09.1997 as Group D and promoted as Postman w.e.f 02.06.2005 as such he eligible for the old pension scheme.  In this regard, he had already submitted a representation to D.O.  But still then 10% contribution under NPS is being deducted.  It is requested to dispose his representation early.

3.        As per the recommendation of the 7th CPC, Treasury allowance was subsumed with ‘Cash handling allowance’ vide Dte F No. 4/6/2017-Estt (Pa-II) and hence it is requested to draw cash handling allowance to all SPMs of B & C Class offices and Treasurers under Tirunelveli Division w.e.f 01.07.2017.

4.        Request supply of separate scanner for Aadhaar Enrolment/updation at Tirunelveli HO.

5.        Request to consider the transfer requests of the officials pending at D.O for transfer/deputation at their choice.

6.        There is acute shortage of staff in this Division and the Time Scale PAs are manning the LSG/HSG-II/HSG-I Posts as such drafting PAs for canvassing/target team and attaching to Sub Division  Hence, it is requested to utilise the services of the willing GDS staff for canvassing/target team and they are the right person to target the rural population.

7.        Request to service the Generator of Ravanasamudram S.O. Which is under repair and not working     from the last three months and the UPS back up is also not good .In the CSI environment it is much difficult to work in the office during the frequent power failure.
8.        .Request fill up the vacant PA post of Pottalpudur and Pattamadai. Both the offices are running by single handedly in a years together.
9.         Request to supply of one new system to Tirunelveli Collectrate P.O.
10.    Request arrange to shift the PO building of Ambasamudram Angadi S.O. since the accommodation is very less and there is no basic amenities in the present building.
11.    Request to shift the PO building of Manimuthar Project S.O. since the roof of the building is in leaky condition and unsafe.
12.    Request to address the landlord of Brahmadesam S.O. to carry-out the repair work of the restroom attached with the building.
13.    Request to supply of sufficient A4 papers to all sub offices


The following officials will attend the meeting.

1.      S.K. Jacobraj  Divisional Secretary & LSG PA Tirunelveli HO
2.      G.Nellaiappan LSG TR Maharajanagar
3.      R.V.Thiyagarajapandiyan Branch Secretary& SPM Alwarkurichi


             
                         Yours faithfully


[S.K.JACOBRAJ]


Tuesday, November 27, 2018

அன்பார்ந்த தோழர்களே !
               அஞ்சல் நான்கு மத்திய சங்க அறைகூவலை ஏற்று இன்றுமுதல் 27.11.2018 முதல் 29.11.2018 முடிய மூன்று நாட்களுக்கு கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றிட வேண்டுகிறோம் 
            அகிலஇந்திய தபால்காரர் &MTS சங்கம் சார்பாக 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் முதல் கட்ட போராட்டத்தை வெற்றிபெற செய்வோம் .
                                                         கோரிக்கைகள் 
1.விரிவடைந்துவரும் நகர்ப்புறங்களை கணக்கில் கொண்டு 25000 புதிய தபால் காரர் பதவிகளை உருவாக்கிடவேண்டும் .
2.அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுவீடாக செல்வதற்கு புதிய பணி அளவீடுகளை நிர்ணயிக்க வெண்டும் 
3.தபால்காரர்களுக்கான  LGO தேர்விற்கு கம்ப்யூட்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் 
4.தபால்காரர்களுக்கு கேடர் சீரமைப்பை அமுல்படுத்து 
உள்ளிட்ட 25 கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறும் கருப்பு சின்னம் இயக்கத்தை வெற்றிபெற செய்வோம் .(கருப்பு சின்னம் அணிவதில் வழக்கம் போல் நெல்லையில்  நாம் அனைவரும் இணைந்து பங்கேற்போம் )
                                                -----------------------------------------------
திருநெல்வேலி உப கோட்டத்தில் OFFICIATING பார்க்கிற GDS ஊழியர்களை 10 லட்சம் பாலிசி பிடிக்க வேண்டும் மேலும் மாதம் ரூபாய் 10000 புதிய பிரிமியம் தரவேண்டும் இல்லையென்றால் OFFICIATING கிடையாது என்று GDS ஊழியர்களை ஒரிஜினல் பணிக்கு செல்ல உத்தரவு இடுவதை நிறுத்தவேண்டும் .ஏற்கனவே COMBINED டூட்டி பிரச்சினை என்பது GDS OFFICIATING பார்ப்பதால் தான் குறைந்திருக்கிறது .மீண்டும் COMBINED DUTY பிரச்சினை வந்தால் அஞ்சல் நான்கும் போராட்ட களம் செல்ல வேண்டியதிருக்கும் .இதுகுறித்து நேற்று GDS செயலர் SSP அவர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு நம்முடைய ஆதரவை கோரினார்கள் .GDS ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திருநெல்வேலி ASP க்கு எதிரான போராட்டங்களில் NELLAI  அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு மற்றும் GDS சங்கங்கள் முழு ஆதரவு கொடுக்கும் என்று நமது NFPE ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜேக்கப் ராஜ் அவர்கள் உறுதியளித்துள்ளார் .
                                                -------------------------------------
                                                புயல் நிவாரண நிதி 
கஜா பு யலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  நமது இலாக்காவில் பணிபுரிந்து  GDS தோழர்களுக்கு எந்த வித உதவியும் சரிவர கிடைக்கவில்லை..ஆகவே நமது GDS  ஊழியர்களுக்கு  பண உதவி செய்வோர்  தோழர். R. குமார் மத்திய மண்டல செயலர் மத்திய மண்டலம்  அவர்களின் புதுக்கோட்டை HO அஞ்சலக சேமிப்புக் கணக்கு 0010802007 என்ற எண்ணிற்கு நிதி அனுப்பலாம். 
தோழர் குமார் அவர்களின் கைபேசி எண் 099526 82338.
நன்கொடை அனுப்பிவிட்டு அதன் தகவலை கோட்ட சங்கத்திற்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம் .நேற்று முதல்கட்டமாக தோழர் SK .ஜேக்கப் ராஜ் ரூபாய் 1000 அனுப்பி நிவாரண பணியை தொடங்கி வைத்தார்கள் ..
                                                      மாதாந்திர பேட்டி 
இந்த மாத மாதாந்திர பேட்டி 30.11.2018 மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது .ஏற்கனவே எடுத்த பிரச்சினைகளில் தீர்வில்லை என்றாலும் புதிய பிரச்சினைகள் இருந்தாலும் இன்றே கோட்ட செயலர்களுக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .
                                       நன்றி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 




Monday, November 26, 2018

அன்பார்ந்த தோழர்களே !
   இந்த மாத மாதாந்திர பேட்டியில் சேர்க்கவேண்டிய பிரச்சினைகள் இருப்பின் இன்று 26..11.2018 குள் கோட்ட செயலர்களுக்கு தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம் .
                                            தென் மண்டல செய்திகள் 
1.ராஜவல்லிபுரம் அலுவலகத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் LANDLORD செய்துகொடுத்துவிட்டதாகவும் அதனால் DE QUARTERS பிரச்சினை இனி இருக்காது என்றும் மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது .
2. DEPUTATION பிரச்சினையில் நமது கோட்ட அலுவலகம் செப்டெம்பர் 2018 யில் பிறப்பித்த வழிகாட்டுதலே போதுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது .
                                  நன்றி 
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை 

                                       

நமது அன்பிற்குரிய தோழர் G.செந்தில்குமார் ASP (OD ) நாகர்கோயில் முன்னாள் ASP திருநெல்வேலி SUB DN அவர்களின் புதல்வி 
செல்வி மதுமிதா அவர்களின் பூப்புனித நீராட்டுவிழா நிகழ்ச்சி 25.11.2018 அன்று பாளையம்கோட்டை வெற்றிமஹாலில் சிறப்பாக நடைபெற்றது .நமது நெல்லை NFPE சார்பாக நாம் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தோம் .விழாவிற்கு நமது மாநில தலைவர் அண்ணன் செல்வ கிருஷ்ணன் அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் கண்ணன் அம்பை கிளை செயலர் RVT.பாண்டியன்  மற்றும் கோவில்பட்டி &நெல்லை கோட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் .


Sunday, November 25, 2018

                                                திருமண நல் வாழ்த்துக்கள் 
நெல்லை NFPE யின் முன்னாள் கோட்ட தலைவர் அண்ணன் ஆதிமூலம் ---பூங்குமரி SPM பேட்டை அவர்களின் புதல்வன் 
                             A .ரித்தீஷ் -பொன் ராஜலக்ஷ்மி  இவர்களின் திருமணம் 25.11.2018 அன்று நடைபெறுகிறது .முன்னதாக நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நமது சொந்தங்கள் அனைவரும் பெருவாரியாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் .மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது .



Saturday, November 24, 2018

                                                          வருந்துகிறோம் 
தோழர் R .கண்ணன் PA களக்காடு ( 44 ) அவர்கள் (24.11.2018) இன்று அதிகாலை இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .இவர் .பாளை மெயில் ஓவர்சியர் பெருமாள் அவர்களின் மைத்துனர் .இவரது மனைவி திருமதி பொம்மி மதுரையில் தபால்காரராக பணியாற்றி வருகிறார்கள் .அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை பழைய பேட்டை யில் நடைபெறும் .குடும்ப தலைவரை இழந்துவாடும் தோழர் தம் குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 

அன்பார்ந்த தோழர்களே !
                      இன்று     நண்பர் வண்ணமுத்து -இசக்கியம்மாள் தம்பதியரின் திருமண வெள்ளிவிழா (24.11.1993 ) சிறக்க வாழ்த்துகிறோம் .
                                                       வசந்தகால நினைவுகள் 
                            1991 யில் நான் பாளையம்கோட்டை கிளைசெயலராக பொறுப்பேற்றேன் .1992 யில் நெல்லையில் ஒரு கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்திடவேண்டி தலமட்டத்தில் 40 நாட்களுக்கு மேலாக மருத்துவ விடுப்பு எடுத்து போராட்டம் நடைபெற்றது ..அப்பொழுது தான் நண்பர் வண்ணமுத்து அவர்க்ளின் நட்பு கிடைத்தது .24.11.1993 அன்று தோழர் வண்ணமுத்து அவர்களின் திருமணம் அன்றைய மாநிலசெயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களுக்கும் திருச்செந்தூரில் கலந்து கொண்டார்கள் .அன்று மாலை 24.11.1993 திருச்செந்தூரில் NFPE சம்மேளன நாள் சிறப்பு கூட்டமும் நடைபெற்றது .அவரது திருமணத்தில் கலந்து கொண்டு நமது நண்பர்கள் சார்பாக கொடுக்கப்பட்ட வாழ்த்துமடல் இதோ !


                    நவம்பர் 24 நமது NFPTE (NFPE ) சம்மேளனம் உருவான நாள் 
அன்பான தோழர்களே !தோழியர்களே !
வணக்கம்! .நமது அஞ்சல் துறையில் கடந்த 24-11-1954 அன்று அந்தக் காலக்கட்டத்தில் நம்மோடு இணைந்திருந்த தொலைத் தொடர்புத் துறையைச் சார்ந்த சங்கங்களையும் ,நமது சங்கங்களையும் ஒன்றிணைத்து NFPTE சம்மேளனம் உருவாக்கப் பட்டது .அதன் பின்பு நமது சம்மேளனத்தின் மூலமாகவே நமது குறைகளைக் களையவும் ,கோரிக்கைகளை வென்றெடுக்கவும் ,நமக்கான உரிமைகளைப் பெறவுமான போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டது .நமது சங்கங்களும் சம்மேளனத்தின் ஒவ்வொரு போராட்ட அறைகூவல்களையும் ஏற்று தலமட்டங்களில் நடத்திய போராட்டங்களின் விளைவாக நமது உரிமைகள் பறிபோகாமல் பாதுகாக்கப் பட்டு வருகிறது ..
                              அஞ்சல் துறையில் நமது NFPE சம்மேளனம் மட்டும் தான் ஊழியர்களால் உருவாக்கப்பட்டது .மற்ற சங்கங்கள் ஆளும் அரசாங்கத்தால் உருவாக்கி கொடுக்கப்பட்டது .
      1986 ல்  தொலைத் தொடர்புத் துறை நமது துறையிலிருந்து அரசின் கொள்கை முடிவுகளால் தனியாகப் பிரிந்து செயல்படத் தொடங்கிய பின்பு நமது சம்மேளனம் அப்போதிருந்த NFPE P3,P4,R3,R4,Admin,SBCO,Accounts என ஏழு சங்கங்களையும் உள்ளடக்கி NFPE சம்மேளனமாகச் செயல்படத் தொடங்கியது .
24-11-1954 தொடங்கி இன்று வரையில் எண்ணற்ற போராட்டங்களின் வாயிலாகஅரசிடமிருந்து நாம் பெற்ற பலன்கள் ,போராடிப் பெற்ற உரிமைகளனைத்தும் நம்மிடமிருந்து பறிபோகாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோமென்று சொன்னால் அதற்க்கு முழுமுதற் காரணம் நமது NFPE சம்மேளனம்தான் .
    குறிப்பாக அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக எண்ணற்ற பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் தனியாருக்குத் தாரைவார்க்கப் பட்டு வரும் இன்றைய சூழலில் நமது துறை இன்றும் அரசுத் துறையாகப் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து வருகிறதென்றால் நமது சம்மேளனமே காரணமாகும்.
              சம்மேளன நாளினை போற்றுவோம் !புகழுவோம் !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, November 20, 2018

                          மதுரையில் மீண்டும் நீதி வென்றது !
மலைபோல் நின்ற சுந்தரமூர்த்தியின் மன உறுதி-நம் பக்கம் இருக்கும் நியாயங்களை உணர்ந்த மண்டல அதிகாரிகளின் செயல்பாடு  -இவைகளோடு   மாநிலச்சங்கத்தின் மனப்பூர்வமான ஆதரவுடன் மதுரையில் மீண்டும் ஒருமுறை நீதி வென்றது .
ஒரு அதிகாரியின் ஆட்டம் முடிந்தது !ஆணவம் அழிந்தது ! அகம்பாவம் ஒழிந்தது ! ஊழியர்களின் ஒற்றுமையால் மீண்டும் இங்கு நம் இயக்கம் வீறுகொண்டு எழுந்தது .தோழர் கிருஷ்ணமூர்த்தியின் கீர்த்தி உயர்ந்தது !
                                 பசித்து அழும் பச்சிளம் குழந்தைக்கு கிடைத்த பால்சோறு போல   மாநிலச்சங்கத்தின் தலையிடு சரியானநேரத்தில் கிடைத்ததில் (கொடுத்ததில் ) மாநில செயலருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
வாதத்தில் வல்லவராம் மாநில தலைவரின் அனுபமிக்க அணுகுமுறைக்கும்  நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
திண்டுக்கல் மண்ணுக்கேற்ற மகிமை அண்ணன் மணியை தொடர்வதில் ஆச்சர்யம் இல்லை .பேச்சுவார்த்தைக்கு இடையில் மதுரை SSP யிடம் பிரச்சினை தீரவில்லை என்றால் மாநிலந்தழுவிய போராட்டம் நடக்கும் என எச்சரித்த தீரம் பாராட்டுதலுக்குரியது .
   கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக மதுரை எனும் மாபெரும் கோட்ட சங்கத்தில் உறுப்பினராக பெயரளவில் இல்லாமல் கோட்ட சங்கம் அழைக்கும் பொழுதெல்லாம் அசராமல் அணிவகுக்கும் தோழியர்களுக்கும் -இளைய தோழர்கள் முதல் மூத்த தோழர்கள் வரை இன்முகத்தோடு இறுதிவரை உறுதி காத்த அனைவருக்கும் இறுதியாக கோட்ட செயலராய் பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை சோதனைகளை சுமந்து சாதனையை தனதாக்கிய மதுரை கோட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் -ஆணவமிக்க அதிகாரிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த  தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்ட /கிளை செயலர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே !
             திருநெல்வேலி ரோட்டரி சங்கம் சார்பாக நேற்று (19.11.2018 )  நடைபெற்ற  சிறப்பு  கூட்டத்தில் CHIEF GUEST ஆக நமது கோட்ட செயலர் தோழர் ஜேக்கப் ராஜ் அவர்கள் கலந்து கொண்டு அஞ்சல் துறையின் புதிய பரிமானங்கள் என்ற தலைப்பில்  சிறப்புரை நிகழ்த்தினார் .முன்னதாக அஞ்சல் துறையில் பொதுமக்களோடு இணைந்து பணியாற்றும் நமது இயக்கத்தின் முன்னணி தோழர்களுக்கு பாராட்டும் பரிசளிப்பும் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்கள் .
தோழர் SK .ஜேக்கப் ராஜ் (1991 முதல் தொடர்ந்து நெல்லை கோட்டத்தில் தொழிற்சங்க பொறுப்பு  வகித்தல் )
தோழர் S .கனகசபாபதி (சிறந்த மக்கள் தொடர்பு அதிகாரி )
தோழர் G.ராஜேந்திர போஸ் (சிறந்த வணிக அதிகாரி )
தோழர் SK .பாட்சா (சிறந்த மனிதநேய பண்பாளர் )
   இந்த விழாவிற்கு அஞ்சல் துறைக்கு மேன்மையும் நமது ஊழியர்களுக்கு பெருமை சேர்த்து  அறிமுகப்படுத்தி வைத்த Rtn C.வண்ணமுத்து அவர்களுக்கும் NELLAI NFPE சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .






Monday, November 19, 2018

அன்பார்ந்த தோழர்களே ! 
2019 ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கும் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் நமது கோரிக்கைகளையும் இணைத்து போராட NFPE --FNPO மற்றும் GDS சங்கங்கள் முடிவு 
                       POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES FEDERATION OF NATIONAL POSTAL ORGANIZATIONS
ALL INDIA POSTAL EMPLOYEES UNION – GDS
NATIONAL UNION – GDS

Circular No. PJCA/2/2018                                                  Dated - 16.11.2018
Circular
Comrade,
     A meeting of Postal J.C.A consisting of NFPE, FNPO, AIPEU GDS and NUGDS was held at NFPE office, North Avenue, New Delhi on 15-11-2018. All General Secretaries of NFPE, FNPO and GDS Unions participated in the meetings.
       The meeting was presided over by Com. T.N Rahate, Secretary General FNPO.
       A threadbare discussion took place on the prevalent situation in Deptt of Post. Deptt is moving ahead on the path of corporatization which will lead to privatization of services in future . IPPB is the burning example of this. After MNOP, PNOP has been brought and separate Parcel Directorate has been
 Setup . The Minister communication is announcing to setup a separate company for PLI & RPLI.
       There is acute shortage of staff in each cadre . Cadre Restructuring for left out categories is not being finalized. The result of regular membership verification conducted in 2015 has not been declared yet. The entire process of GDS membership verification was cancelled arbitrarily.
       High Court & Supreme Court decisions in respect of MACP, RTP and others matters are not being implemented.
       Positive recommendations of Sri Kamlesh Chandra Committee are not being implemented.
       Every day new services are being introduced without developing proper infrastructure and without providing adequate manpower and training to the staff. Deptl Council meetings and periodical meetings are also not being held since long. More and more victimization of trade union leaders has become the order of the day.
       So therefore taking a serious note of all the above mentioned facts, PJCA has decided unanimously to conduct 2 days strike on 8 & 9 January – 2019 for which vigorous campaign will be launched . All leaders of NFPE & FNPO will carry on the campaign programme which will be declared shortly.

T.N Rahate                                                         R.N Parashar
S/G – FNPO                                                   S/G - NFPE

       The Charter of demands for which 2 days strike will be conducted is mentioned as under.
CHARTER OF DEMANDS

1. Implement all positive recommendation of Sri  Kamlesh Chandra Committee report and grant Civil servant Status to GDS.
2. Fill up all Vacant Posts is all cadres of Deptt of Post i.e P.A/S.A, Postmen, Mail Guard , MTS, GDS, Postal Acctts, P.A  Admn Offices, P.A SBCO & Civil Wing etc and separate identity of all cadres within a time frame.
3. Settle all the problems arisen out of implementation of C.S.I & R.I.C.T.
4. Withdraw NPS and Guarantee minimum pension 50% of last pay drawn.
5. Membership verification of G.D.S and declaration of result of regular employees membership verification conducted in 2015.
6. Implementation of orders of   payment of  revised wages and arrears to the casual , Part time, Contingent employees & daily rated mazdoors as per 6th  7th CPC and Regularize Services of casual Labourers.
7. Implement Cadre Restructuring for left out categories i.e RMS, MMS, Postman/MTS, PACO, PASBCO,  Postal Acctts, Postmaster Cadre and Civil Wing etc.
8. Stop Privatization,  Corporatization and out sourcing in Postal Services.
9. Very Good Bench Mark should be implemented after issue of orders i.e from 25.7.2016 .
10.          Implement 5 days week in Postal and RMS
11.          Consider the suggestions by RMS JCA regarding PNOP & CSI.
12.          Enhancement of higher payscales to those categories whose minimum qualification has been enhanced e.g Postmen, Mail guard.
13.          Grant of pension to the promoted GDS based on Supreme Court Judgement in SLP No (C) 13042/2014
14.          Withdraw orders of enhancement of cash conyance limit without security.
15.           Implement all High Court and Supreme Court decision in C/W MACP, RTP and others.
16.          Cash less facility treatment under CGHS  and allotment of adequate fund under head MR & T. A
17.          Retention of Civil wing is the Deptt of Post.
18.          Holding of Deptt Council Meetings and periodical meetings at all level.
19.          Stop Trade Union victimization and in the name of unscientific targets.
20. Provide 40 percent SCF quota promotion in AAO cadre and amend RR incorporating the modifications demanded by AIPAEA.
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்   -SK பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, November 17, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                                    எல்லா புகழும் NFPE க்கே !
                        நேற்று தென்மண்டல அளவிலா!ன CPC பிரிவில் பணியாற்றும் 57 ஊழியர்களுக்கு மதுரை PTC யில் ஒரு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன .இன்றும் இரண்டாவது பேட்ச் நடக்கிறது .பயிற்சியை துவக்கி வைத்து பேசிய திரு .பாண்டியராஜன் (ASST DIVISIONAL MANAGER PLI ) அவர்கள் இந்த பயிற்சியை CPC ஊழியர்களுக்கு அவசியம் கொடுக்கவேண்டும் என்று முதல் கோரிக்கை திருநெல்வேலி CPC யில் பணியாற்றும் ஜேக்கப் தான் வலியுறுத்தினார் என்று பழைய நினைவுகளை குறிப்பிட்டார்கள் ..இறுதியாக நடந்த கலந்தாய்வின் இறுதியில் நான் பேசும் போது இதை செயல்படுத்தியது தொழிற்சங்கம் தான் என்றும் அதன் விளைவாக இன்று தமிழகம் முழுவதும் நான்கு மண்டலங்களிலும் இந்த பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும்  கூறினேன் .
இதன் பின்னணிஎன்னவென்றால்  CPC க்கு LSG PA களை பணியமர்த்திய தில் இருந்து அனைவர்க்கும் CPC சம்பந்தமான பயிற்சி தேவை என உணர்ந்தேன் .அதை தான் எங்கள் கோட்ட அதிகாரியின் மூலம் PMG க்கு எனக்கு CPC சம்பந்தமான பயிற்சி வேண்டும் என எழுதிவிட்டு அதை வலியுறுத்தி நமது மாநிலசெயலருக்கும் /மண்டல செயலருக்கும்  கடிதம் எழுதினேன் .எந்த சூழ்நிலை என்றால் செங்கல்பட்டு மாநாடு முடிந்து புதிய நிர்வாகிகள் மண்டல அதிகாரிகளை சந்திக்க வந்திருந்த சூழ்நிலை (உங்களுக்கு தெரியும் செங்கை மாநாட்டின் கதகதப்பு சிறிதும் குறையாத நிலையிலும் ) .நமது புதிய நிர்வாகிகள் சந்திப்பிற்கு பின் நீங்கள் கொடுத்தப்பிரச்சினை பேசப்பட்டது என மாநில சங்கத்தால் தகவல் கிடைத்தது .பிறகு ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் கேட்டபோது 3 நாட்கள் TRAINING முடியாது ஒரு WORKSHOP நடத்த அனுமதிகேட்டு சென்றுள்ளது என்று சொன்னார்கள் .07.12.2017 அன்று நாம் கொடுத்த பிரச்சினை இன்று நல்லதொரு தீர்வை எட்டியுள்ளது .பயிற்சி வகுப்பின் இறுதியிலும் திரு .பாண்டியராஜன் அவர்கள் இதை நினைவு கூர்ந்தார்கள் .இந்த வெற்றி நமது NFPE க்கு கிடைத்த வெற்றி .இது தான் நமது NFPE யின் அடையாளம் .நமது சங்கங்களுக்குக்குள் அணி என்பது தவிர்க்கமுடியாத ஒன்று .ஆரம்பகாலகட்டங்களில் அணி செயல்பாடு இலைமறைகாயாகவும் யூனியன் செயல்பாடு முன்னுக்கும் இருந்தது . யூனியன் பின்னுக்கு தள்ளப்பட்டு அணி யை பிரதானப்படுத்தும் போது அமைப்பு பெலவீனப்படும் .
யாரையும் கட்டாயப்படுத்தி அணியில் சேர்க்கவும் முடியாது .யாரையும் மிரட்டியும் அணியை வளர்த்திட முடியாது .கொள்கை மறவர்கள் குடியிருக்கும் கோட்டை நம் NFPE .அவரவர் பாதையில் நடந்தாலும் ஜனநாயகத்திற்கு சிறு சேதாரம் இல்லாமல் பார்த்து கொள்வோம் .அன்று மாநிலச்சங்கத்திற்கு நெல்லை கோட்டம் சார்பாக எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கு ...
நன்றி .மாநிலத்தலைவர் -செயலர் மற்றும் மண்டல செயலர் .

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR- C                                                                         TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-CR/dlgs dated at Palayankottai- 627002 the 07.12.2017

To

Com. J. Ramamoorthy
Circle Secretary
AIPEU Group ‘C’
Chennai-600018

Dear Comrade,

            Sub:    Imparting Departmental Training to LSG Officials
who were posted on implementation of Cadre
Re-structuring - reg

            During June-2017, one Post of CPC was identified as LSG under the proposal of Cadre Re-structuring and accordingly the postings were made.  These officials have no training and left with unarmed to manage the CPC.  Hence, they are facing many difficulties in completing day-to-day work.  Without understanding this, there is high pressure from the higher-ups to complete the processing of new proposals, service requests.  This is the position not only in the CPCs of Tirunelveli Division but also in almost all divisions.  Further, it is to inform that the McCamish training was imparted to a set of officials only during the initial roll-out.  After that no training or re-training was imparted to anybody

            Hence, we would request you to take up the issue with Circle Administration to ensure all the LSG Officials posted in the CPCs are imparted with McCamish Training.


             
                         Yours fraternally,


[S.K.JACOBRAJ]

Copy to
K.Subramanian
Regional Secretary
Aipeu GR C
Regional Secretary
Southern Region
 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை