...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 20, 2018

                          மதுரையில் மீண்டும் நீதி வென்றது !
மலைபோல் நின்ற சுந்தரமூர்த்தியின் மன உறுதி-நம் பக்கம் இருக்கும் நியாயங்களை உணர்ந்த மண்டல அதிகாரிகளின் செயல்பாடு  -இவைகளோடு   மாநிலச்சங்கத்தின் மனப்பூர்வமான ஆதரவுடன் மதுரையில் மீண்டும் ஒருமுறை நீதி வென்றது .
ஒரு அதிகாரியின் ஆட்டம் முடிந்தது !ஆணவம் அழிந்தது ! அகம்பாவம் ஒழிந்தது ! ஊழியர்களின் ஒற்றுமையால் மீண்டும் இங்கு நம் இயக்கம் வீறுகொண்டு எழுந்தது .தோழர் கிருஷ்ணமூர்த்தியின் கீர்த்தி உயர்ந்தது !
                                 பசித்து அழும் பச்சிளம் குழந்தைக்கு கிடைத்த பால்சோறு போல   மாநிலச்சங்கத்தின் தலையிடு சரியானநேரத்தில் கிடைத்ததில் (கொடுத்ததில் ) மாநில செயலருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
வாதத்தில் வல்லவராம் மாநில தலைவரின் அனுபமிக்க அணுகுமுறைக்கும்  நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
திண்டுக்கல் மண்ணுக்கேற்ற மகிமை அண்ணன் மணியை தொடர்வதில் ஆச்சர்யம் இல்லை .பேச்சுவார்த்தைக்கு இடையில் மதுரை SSP யிடம் பிரச்சினை தீரவில்லை என்றால் மாநிலந்தழுவிய போராட்டம் நடக்கும் என எச்சரித்த தீரம் பாராட்டுதலுக்குரியது .
   கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக மதுரை எனும் மாபெரும் கோட்ட சங்கத்தில் உறுப்பினராக பெயரளவில் இல்லாமல் கோட்ட சங்கம் அழைக்கும் பொழுதெல்லாம் அசராமல் அணிவகுக்கும் தோழியர்களுக்கும் -இளைய தோழர்கள் முதல் மூத்த தோழர்கள் வரை இன்முகத்தோடு இறுதிவரை உறுதி காத்த அனைவருக்கும் இறுதியாக கோட்ட செயலராய் பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை சோதனைகளை சுமந்து சாதனையை தனதாக்கிய மதுரை கோட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் -ஆணவமிக்க அதிகாரிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த  தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்ட /கிளை செயலர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 

0 comments:

Post a Comment