அன்பார்ந்த தோழர்களே !
15.11.2018 அன்று நடைபெறும் PMG யுடன் நடைபெறும் இரு மாதாந்திர பேட்டியில் நெல்லை கோட்ட சங்கம் சார்பாக கொடுத்த ராஜவல்லிபுரம் DE QUARTERAISATION பிரச்சினையை எடுத்த மாநில .மண்டல செயலர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .மேலும் கோட்ட சங்கம் கொடுக்காத பிரச்சினையான திருநெல்வேலி DEPUTAION பிரச்சினையை மாநில சங்கம் எடுத்தது எந்த வகையில் என்று தெரியவில்லை .நெல்லை கோட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செயலர் ஒருவர் தான் .பிறகு எப்படி மாநில செயலர் இப்படி தொழிற்சங்க அமைப்பு விதிகளுக்கு புறம்பாக செயல்படுகிறார் என்று தெரியவில்லை .கடந்த எட்டு ஆண்டுகளாக பின்பற்றாத நடைமுறையை மாநிலசெயலர் ஓய்வுபெறப்போகும் சில மாதங்கள் இருக்கும் சூழலில் இந்த செயலை செய்ய வேண்டிய அவசியம் என்ன ? ஒரு பிரச்சினையை கோட்டத்தில் இருந்து வேறுஒருவர் கொடுத்தாலும் கோட்ட செயலரிடம் ரிப்போர்ட் பெறப்பட்டு இதுமாதிரியான சப்ஜெக்ட் மண்டல நிர்வாகத்திற்கு எடுத்திருக்கலாம் .
வருத்தத்துடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment