...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, November 5, 2018

கிருஷ்ணகிரி கோட்ட முன்னனி தோழர் சிவகுமார் அவர்களின் தீபாவளி கவிதை -உங்கள் பார்வைக்கு 

எங்கே 
மாண்டுவிட்டான்
நரகாசுரன்..

மீண்டும் மீண்டும்
அஸ்தமனமின்றி
அவதரிக்கின்றான்..

CSI
IPPB
RICT
DARPAN
இப்படி புதுப்புது
அவதாரங்களில்...

மறுபுறம்
அடிக்கடி கண்ணாமூச்சி
ஆடி நம்மை திணறடிக்கும் 
இணைய தள " மாதவி "
யின் நளினங்கள்...

காகிதத்திற்கே இனி
வேலையில்லை என்று
சொல்லி காகித
மூட்டைகளை அவிழ்த்து
விடும் நிர்வாகம்..

எல்லாமே வெளிப்படைத்தன்மை
என்ற அறிமுகம்
மட்டுமே...

அன்றாடம் மாலையில்
கணக்கினை முடிக்கும்
வேளையில் எந்த
Report ம் முழுதாய்
தெரிவதில்லை...

"zinc" சுட்டியின்
விளையாட்டு தனங்கள்
இடையிடையே...

இத்தனை நெருக்கடிகளுக்கு இடையே  IPPB
கணக்குகள் பிடிக்க
கோட்ட அதிகாரிகளின்
Whatsapp பதிவுகள்...

இத்தனை அவதாரங்களில் நரகாசுரன் நம்மை
மிரட்டினால் கூட.....

உயிர் மெய்யாய்
இருக்கும் பெற்றோருடன்...

எதுகை மோனையாய்
எங்கெங்கோ இருக்கும்
சொந்தங்களுடன்...

நட்பு பாராட்டும்
நல்ல நண்பர்களுடன்..

ஆய்த எழுத்தாய்
நம் ஜீவனுடன் கலந்த
மனைவி மக்களுடன்..

பூபாளம் பாடும்
பூவான விடியலில்
மத்தாப்புக்கள் மிளிர...
சீனத்து பட்டாசுகள்
தவிர்த்து .....
சிவகாசிக்கு உயிர்
கொடுத்து ...

மகிழ்ச்சியுடன் அன்பை
பகிர்ந்து கொள்ளும்
இந்த நன்நாளில்..

நரகாசுரனை அழிக்க
வந்த கண்ணனாக
நாமிருக்க சூளுரைப்போம்...

முடக்கத்தான் கீரையாய்
இருக்கும் முட்டுக்கட்டைகளை
முடக்கத்தான் நாம்
பிறந்தோம் என்று
உறுதி கொண்டு...

எதிர்வரும் எல்லா
நாட்களும் நமக்கு
தீப ஒளி மிளிரும்
தீபாவளியே என்ற
நம்பிக்கையை விதைப்போம்....

என் சொந்தங்கள்
அனைவருக்கும்
அன்பான தீபாவளி
வாழ்த்துக்கள்.....

0 comments:

Post a Comment