...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, November 17, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                                    எல்லா புகழும் NFPE க்கே !
                        நேற்று தென்மண்டல அளவிலா!ன CPC பிரிவில் பணியாற்றும் 57 ஊழியர்களுக்கு மதுரை PTC யில் ஒரு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன .இன்றும் இரண்டாவது பேட்ச் நடக்கிறது .பயிற்சியை துவக்கி வைத்து பேசிய திரு .பாண்டியராஜன் (ASST DIVISIONAL MANAGER PLI ) அவர்கள் இந்த பயிற்சியை CPC ஊழியர்களுக்கு அவசியம் கொடுக்கவேண்டும் என்று முதல் கோரிக்கை திருநெல்வேலி CPC யில் பணியாற்றும் ஜேக்கப் தான் வலியுறுத்தினார் என்று பழைய நினைவுகளை குறிப்பிட்டார்கள் ..இறுதியாக நடந்த கலந்தாய்வின் இறுதியில் நான் பேசும் போது இதை செயல்படுத்தியது தொழிற்சங்கம் தான் என்றும் அதன் விளைவாக இன்று தமிழகம் முழுவதும் நான்கு மண்டலங்களிலும் இந்த பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும்  கூறினேன் .
இதன் பின்னணிஎன்னவென்றால்  CPC க்கு LSG PA களை பணியமர்த்திய தில் இருந்து அனைவர்க்கும் CPC சம்பந்தமான பயிற்சி தேவை என உணர்ந்தேன் .அதை தான் எங்கள் கோட்ட அதிகாரியின் மூலம் PMG க்கு எனக்கு CPC சம்பந்தமான பயிற்சி வேண்டும் என எழுதிவிட்டு அதை வலியுறுத்தி நமது மாநிலசெயலருக்கும் /மண்டல செயலருக்கும்  கடிதம் எழுதினேன் .எந்த சூழ்நிலை என்றால் செங்கல்பட்டு மாநாடு முடிந்து புதிய நிர்வாகிகள் மண்டல அதிகாரிகளை சந்திக்க வந்திருந்த சூழ்நிலை (உங்களுக்கு தெரியும் செங்கை மாநாட்டின் கதகதப்பு சிறிதும் குறையாத நிலையிலும் ) .நமது புதிய நிர்வாகிகள் சந்திப்பிற்கு பின் நீங்கள் கொடுத்தப்பிரச்சினை பேசப்பட்டது என மாநில சங்கத்தால் தகவல் கிடைத்தது .பிறகு ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் கேட்டபோது 3 நாட்கள் TRAINING முடியாது ஒரு WORKSHOP நடத்த அனுமதிகேட்டு சென்றுள்ளது என்று சொன்னார்கள் .07.12.2017 அன்று நாம் கொடுத்த பிரச்சினை இன்று நல்லதொரு தீர்வை எட்டியுள்ளது .பயிற்சி வகுப்பின் இறுதியிலும் திரு .பாண்டியராஜன் அவர்கள் இதை நினைவு கூர்ந்தார்கள் .இந்த வெற்றி நமது NFPE க்கு கிடைத்த வெற்றி .இது தான் நமது NFPE யின் அடையாளம் .நமது சங்கங்களுக்குக்குள் அணி என்பது தவிர்க்கமுடியாத ஒன்று .ஆரம்பகாலகட்டங்களில் அணி செயல்பாடு இலைமறைகாயாகவும் யூனியன் செயல்பாடு முன்னுக்கும் இருந்தது . யூனியன் பின்னுக்கு தள்ளப்பட்டு அணி யை பிரதானப்படுத்தும் போது அமைப்பு பெலவீனப்படும் .
யாரையும் கட்டாயப்படுத்தி அணியில் சேர்க்கவும் முடியாது .யாரையும் மிரட்டியும் அணியை வளர்த்திட முடியாது .கொள்கை மறவர்கள் குடியிருக்கும் கோட்டை நம் NFPE .அவரவர் பாதையில் நடந்தாலும் ஜனநாயகத்திற்கு சிறு சேதாரம் இல்லாமல் பார்த்து கொள்வோம் .அன்று மாநிலச்சங்கத்திற்கு நெல்லை கோட்டம் சார்பாக எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கு ...
நன்றி .மாநிலத்தலைவர் -செயலர் மற்றும் மண்டல செயலர் .

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR- C                                                                         TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-CR/dlgs dated at Palayankottai- 627002 the 07.12.2017

To

Com. J. Ramamoorthy
Circle Secretary
AIPEU Group ‘C’
Chennai-600018

Dear Comrade,

            Sub:    Imparting Departmental Training to LSG Officials
who were posted on implementation of Cadre
Re-structuring - reg

            During June-2017, one Post of CPC was identified as LSG under the proposal of Cadre Re-structuring and accordingly the postings were made.  These officials have no training and left with unarmed to manage the CPC.  Hence, they are facing many difficulties in completing day-to-day work.  Without understanding this, there is high pressure from the higher-ups to complete the processing of new proposals, service requests.  This is the position not only in the CPCs of Tirunelveli Division but also in almost all divisions.  Further, it is to inform that the McCamish training was imparted to a set of officials only during the initial roll-out.  After that no training or re-training was imparted to anybody

            Hence, we would request you to take up the issue with Circle Administration to ensure all the LSG Officials posted in the CPCs are imparted with McCamish Training.


             
                         Yours fraternally,


[S.K.JACOBRAJ]

Copy to
K.Subramanian
Regional Secretary
Aipeu GR C
Regional Secretary
Southern Region
 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment