...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, November 24, 2018

                    நவம்பர் 24 நமது NFPTE (NFPE ) சம்மேளனம் உருவான நாள் 
அன்பான தோழர்களே !தோழியர்களே !
வணக்கம்! .நமது அஞ்சல் துறையில் கடந்த 24-11-1954 அன்று அந்தக் காலக்கட்டத்தில் நம்மோடு இணைந்திருந்த தொலைத் தொடர்புத் துறையைச் சார்ந்த சங்கங்களையும் ,நமது சங்கங்களையும் ஒன்றிணைத்து NFPTE சம்மேளனம் உருவாக்கப் பட்டது .அதன் பின்பு நமது சம்மேளனத்தின் மூலமாகவே நமது குறைகளைக் களையவும் ,கோரிக்கைகளை வென்றெடுக்கவும் ,நமக்கான உரிமைகளைப் பெறவுமான போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டது .நமது சங்கங்களும் சம்மேளனத்தின் ஒவ்வொரு போராட்ட அறைகூவல்களையும் ஏற்று தலமட்டங்களில் நடத்திய போராட்டங்களின் விளைவாக நமது உரிமைகள் பறிபோகாமல் பாதுகாக்கப் பட்டு வருகிறது ..
                              அஞ்சல் துறையில் நமது NFPE சம்மேளனம் மட்டும் தான் ஊழியர்களால் உருவாக்கப்பட்டது .மற்ற சங்கங்கள் ஆளும் அரசாங்கத்தால் உருவாக்கி கொடுக்கப்பட்டது .
      1986 ல்  தொலைத் தொடர்புத் துறை நமது துறையிலிருந்து அரசின் கொள்கை முடிவுகளால் தனியாகப் பிரிந்து செயல்படத் தொடங்கிய பின்பு நமது சம்மேளனம் அப்போதிருந்த NFPE P3,P4,R3,R4,Admin,SBCO,Accounts என ஏழு சங்கங்களையும் உள்ளடக்கி NFPE சம்மேளனமாகச் செயல்படத் தொடங்கியது .
24-11-1954 தொடங்கி இன்று வரையில் எண்ணற்ற போராட்டங்களின் வாயிலாகஅரசிடமிருந்து நாம் பெற்ற பலன்கள் ,போராடிப் பெற்ற உரிமைகளனைத்தும் நம்மிடமிருந்து பறிபோகாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோமென்று சொன்னால் அதற்க்கு முழுமுதற் காரணம் நமது NFPE சம்மேளனம்தான் .
    குறிப்பாக அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக எண்ணற்ற பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் தனியாருக்குத் தாரைவார்க்கப் பட்டு வரும் இன்றைய சூழலில் நமது துறை இன்றும் அரசுத் துறையாகப் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து வருகிறதென்றால் நமது சம்மேளனமே காரணமாகும்.
              சம்மேளன நாளினை போற்றுவோம் !புகழுவோம் !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment