...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, November 10, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                                கடந்த மே 2018 யில் நடைபெற்ற GDS வேலைநிறுத்த காலங்களில் தனது சொந்த காரணங்களுக்காக விடுப்பு எடுத்த தபால்காரர்களுக்கு ஒருமாதம் பத்துநாட்கள் என தாறுமாறாக சம்பளம் பிடிக்கப்பட்டது .இது கடந்த செப்டம்பர் மாத மாதாந்திர பேட்டியில் அஞ்சல் நான்கின் சார்பாக விவாதிக்கப்பட்டது .SSP அவர்களும் இது தவறான நடவடிக்கை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு விளக்கம் கேட்டு அனுப்பியிருந்தார் .அக்டோபர் மாத பேட்டியிலும் இது வலியுறுத்தப்பட்டது .கோட்ட கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி தலையீ ட்டின் பேரில் சம்பந்தப்பட்டவர்களுக்கு (தோழர்கள் ஆறுமுகம் சுபாஷ் அம்பேத் தபால்காரர்கள் பெருமாள்புரம் ) அவர்களுக்கு பிடிக்கப்பட்ட சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது .ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த நமது கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
கிளை அஞ்சலகங்களில் ஆய்வுக்கு செல்லும் ASP/IP  கள் அந்த அலுவலகத்தின் SB /PLI/RPLI இவைகளின் BALANCE யை சம்பந்தப்பட்ட SO /HO களுக்கு அனுப்பி BALANCE VERIFICATION செய்யக்கூடாது .அவர்களே ரிப்போர்ட் GENERATE செய்து VERIFY பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் உத்தரவு .இது நமது சங்கம் சார்பாக கொடுக்கப்பட்ட பிரச்சினைக்கு சென்னை மண்டல அதிகாரி  கொடுத்திருக்கும் உத்தரவு 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment