கோட்ட சங்க பொதுக்குழு
அன்பார்ந்த தோழர்களே ! நமது கோட்டசங்கத்தின் பொதுக்குழு 17.02.2017 அன்று பாளையம்கோட்டையில் கோட்டத்தலைவர் தோழர் KG.குருசாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .49 தோழர்கள் பொதுக்குழுவில் பங்கேற்றனர் .முன்னதாக கேடேர் சீரமைப்பு குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது .அதற்கு அடுத்து கோட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் --குறிப்பாக விடுப்பு விஷயங்களில் கோட்ட அலுவலகத்தில் ஏற்படும் தாமதம்,விடுப்பு விண்ணப்பித்தவர்கள் கடைசிநேரம்வரை தகவல்களை தேடி பரபரப்பு அடையும் கொடுமை --விடுப்பு விண்ணப்பமே வரவில்லை என்று மிக துணிச்சலாக சொல்லும் தலைமையிட அதிகாரி -.டெபுடேஷன் குறித்து தொடர்ந்து ஒருசில அலுவலகத்தில் இருந்து மட்டுமே ஊழியர்கள் பந்தாடப்படுவதையும் அந்தஅலுவலக நிலையை எடுத்து சொன்னாலே SPM தோழர்களை குற்றவாளியாக சித்தரிக்கும் புதுமை -கம்ப்யூட்டர் உபகரணம் குறித்து கோட்ட அலுவலகத்தில் தொடர்பு கொண்டாலோ அல்லது விடுப்பு குறித்து தொடர்பு கொண்டாலோ தானாக துண்டிக்கப்படும் தொலைபேசி இணைப்புகள் --LRPA கள் எங்கிருந்தாலும் அவர்களை தலைமை அஞ்சலகங்களில் இணைப்பது மேலும் கண்காணிப்பாளர் அவர்களின் பாரா முகத்தால் மலை போல் குவியும் கோப்புகள் இவைகளை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முதற்கட்டமாக ஒரு புகார்மனுவை கோட்ட அலுவலகத்திற்கும் --மாநிலச்சங்க கவனத்திற்கும் கொண்டு செல்வது என்றும் அதனை தொடர்ந்து முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது .(ஆகவே தங்களுக்கோ தங்கள் அலுவலகத்திலோ இதுபோன்ற மனக்குமுறல்கள் பாதிப்புகள் இருந்தால் மெமோரண்டம் தயாரிப்பதற்கு ஏதுவாக உடனே கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் )

0 comments:
Post a Comment