...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 28, 2017

                                             மாதாந்திர பேட்டி
நெல்லை கோட்ட கண்காணிப்பாளருடன் 27.02.2017 அன்று மாதாந்திர பேட்டி நடைபெற்றது .12.20 மணிக்கு தொடங்கிய பேட்டி 02.15 வரை நீடித்தது .நாம் கொடுத்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் நடந்த விவாதங்கள் ஒரு ஆரோக்கியமானதாக இருந்தது .
விடுப்பு மறுப்பு /தாமதம் குறித்து நடந்த விவாதத்தில் நமது தரப்பு விரிவான விளக்கத்தை கொடுத்தது .யாரையும் குற்ற படுத்தவோ /வருத்தப்படவோ கொடுக்கப்பட்ட கோரிக்கைகள் அல்ல ..பொதுக்குழுவில் நமது உறுப்பினர்கள்  வெளிபடுத்திய ஆதங்கங்களை தான் நாம் சேர்த்திருந்தோம் .பதிலுக்கு கோட்ட நிர்வாகமும் எத்தனை அலுவலகங்களுக்கு விடுப்பு வழங்கியிருக்கிறோம் என்ற பட்டியலை தந்தது .நாம் எத்தனை அலுவலகங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதனை விளக்கினோம் .நமது நோக்கம் விடுப்பு கேட்டு காத்திருக்கும் ஊழியர்கள் தேவையில்லாத டென்ஷனில் சிக்கி தவிக்கக்கூடாது --சாங்க்ஷன் செய்யப்பட்ட விடுப்பு விவரங்களை முன் கூட்டியே தெரிவித்தால் எல்லாரும் ஒரு நிம்மதியோடு பணியாற்றுவார்கள் என்பதனை எடுத்து கூறினோம் .மானுர் ,ICPETTAI போன்ற A கிளாஸ் அலுவலகங்கள் தனி ஒருவரால் நிரவகிக்கப்படுவதை யும் --டெபுடேஷன் பொறுத்தவரை பர்கிட்மான க ரத்தில் இருந்து பத்மனேரி என்பதனை இனியாவது தவிர்க்கப்படவேண்டும் என்றும்  திசையன்விளை அலுவலகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு இயங்குவதால் முழுநேர ஊழியர் விசாரணை போன்ற விஷயங்களில் தொடர்ந்து பணியாற்ற வேண்டியதை மனதில கொண்டு அங்கு குறைந்தபட்சம் 4 எழுத்தர்கள் என்ற எண்ணிக்கை என்பது தொடர வேண்டும் என்றும் --LRPA பட்டியல் விரைவில் வெளியிட வேண்டும் என்றும் அப்படி LRPA ஆக அடையாளம்காட்டப்படுவோர் HO /LSG அலுவலகங்களில் டெபுடேஷன் PURPOSE ஆக இணைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது .
                      பொதுக்குழுவும் --பூத கண்ணாடியும் 
நமது பொதுக்குழுவிற்கு பின்பு சில விஷயங்களில் கோட்டநிர்வாகம் துரும்பை தூணாக்கி பார்க்கிறது .உதாரணமாக தவறுதலாக அலுவலக ஈமெயில் இருந்து கோட்ட செயலருக்கு அனுப்பப்பட்ட ஈமெயில் குறித்து விளக்கம் கேட்டிருந்ததை நாம் கவலையோடு விளக்கினோம் .கோட்ட நிர்வாகத்தோடு ஒரு இணக்கமான உறவுகளை மேற்கொண்டுவரும் நமக்கு இதுபோன்ற செயல்கள் நம்மை சிந்திக்க வைக்கிறது .ஆகவே தோழர்கள் இனி தங்கள் சொந்த  ஈமெயில்யில் இருந்து எந்த தொடர்ப்பு கொள்ளவும் என்று  கேட்டு கொள்ளபடுகிறார்கள் 
பஞ்சிங் INCREMENT --இதுகுறித்து விளக்கி எடுத்துரைத்தோம் .11510மற்றும் 11170 பழைய ஊதியங்களில் இருக்கும் குறைபாடுகளை களைய சமீபத்திய உத்தரவு படி புதிய ஊதியத்தில் ஒரு நிலை உயர்த்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது .MMS விவகாரங்களில் 22.09.2016 18.04.2016 11.08.2015 மற்றும் 21.02.2017 ஆகிய தேதிகளில் மண்டல நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதங்களை காட்டினார்கள் .முழுமையான தகவல்கள் மினிட்டிஸ் வந்தவுடன் தெரிவிக்கப்படும் 
              தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
           

0 comments:

Post a Comment