...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 15, 2017

கேடர்கள் விரும்பாத கேடேர் சீரமைப்பு --ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா ?
 அஞ்சல் துறையில் அதுவும் எழுத்தர்களுக்கு மட்டுமே அமுலாக்கப்போகும் கேடேர் சீரமைப்பு தமிழகத்தில் விரைந்து அமுல்படுத்த மாநிலநிர்வாகம் முனைப்பு காட்டிவருகிறது .ஏற்கனவே சுற்றுக்கு விடப்பட்ட மாநில அளவிலான வரைவு சீனியாரிட்டி பட்டியலை 20.02.2017 குள் அணைத்து ஊழியர்களிடம் பார்வைக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் கொடுக்கப்படவேண்டும் .அதில் குறைபாடுகள் இருந்தால் அதை நிவிர்த்தி செய்ய காலஅவகாசம் கொடுக்கப்படவேண்டும் .ஏற்கனவே 1988 க்கு முன் உள்ள சீனியாரிட்டி அடிப்படையில் தயாராகவுள்ள LSG பட்டியல் வெளியிடப்பட வேண்டும் .பதவி உயர்வுக்கான இடங்கள் அடையாளங்காணப்படவேண்டும் 
அதற்குமேல் அனைத்து ஊழியர்களுக்கும் பதவி உயர்வுக்கான DPC கூட்டப்பட்ட வேண்டும் .இதற்கு  இடையில் சுழல் மாறுதலுக்கான அறிவிப்புகள் சில கோட்டங்களில் வெளியிடப்பட்டுள்ளன .பல கோட்டங்களில் தயார் நிலையில் உள்ளன .15.03.2017 குள் கேடேர் சீரமைப்பு அமுலாக போகிறது என வேகமாக பரவும் செய்திகளை நம்பாமலும் இருக்க முடியவில்லை 
கேடேர் சீரமைப்பு--சுதந்திரத்திற்கு முன்பு கொடுக்கப்பட்ட திட்டமாம் ?
   கேடேர் சீரமைப்பு அஞ்சல் துறையில் ACP பதவி உயர்வுகள் அறிமுகப்படுத்தவதற்கு முன்பாக கொடுக்கப்பட்ட திட்டம் .மற்ற எந்த பிரிவுகளிலும் அமுல்படுத்தாதநிலையில் எழுத்தர்கள் பிரிவில் மட்டும்  அமுல்படுத்த வந்த உத்தரவை மத்திய சங்கங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் .நாம் கொண்டுவந்த திட்டத்தை நாமே எதிர்க்கலாமா என்ற வாதத்தை விட்டுவிட்டு தலமட்ட ஊழியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இந்த திட்டத்திற்க்கு மாற்று திட்டங்களை கொண்டு வரவேண்டும் .அதுவரையில் இதை அமுல்படுத்தாமல் நிறுத்திவைக்க சம்மேளனம் /மத்திய சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
                                  ஊழியர்கள் விரும்பாத திட்டங்கள் 
                                  வந்தாலென்ன ? பாதியிலே வெந்தாலென்ன ?
               சிந்திப்பீர் ! சிந்திப்பீர் !    -தோழமையுடன்  SKJ 

0 comments:

Post a Comment