...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 22, 2017

                              அனாமலி கமிட்டி --அமைப்பு 
ஊழியர்தரப்பிற்கும் --அரசுக்கும் இடையே ஏற்படும் பொதுவான முரண்பாடுகளை நீக்குவதற்கு அனாமலி கமிட்டி அமைக்கப்படுவது வாடிக்கை .இது ஆளும்கட்சிகள் அமைக்கும் விசாரணை கமிசனை போன்றது .பெரிதாக ஒன்றும் சாதித்ததாக   
வரலாறுகள் இல்லை .ஊழியர்களின் ஊதியங்களை மாற்றி அமைத்திட சம்பளக்குழு அமைக்கப்படும் .சம்பளக்குழுவில் முரண்பாடுகள் வந்தால் அவைகள் அனாமலி கமிட்டிக்கு அனுப்பப்படும் .அனாமலி கமிட்டி பரிந்துரைகள் அடுத்த ஊதியக்குழுவிற்கு அனுப்பப்படும் .முந்தையை கோரிக்கைகளில் ஒன்றாக நாம் கேட்டு பழகியது நடுவர் மன்றம் அமைப்பது -பிறகு நடுவர் மன்ற தீர்ப்புகளை அமுல்படுத்துவது ...இப்படி எத்தனை அனாமலி கமிட்டிகள் -எத்தனை ஊழியர்களுக்கு சாதகமான நடுவர்மன்ற தீர்ப்புகள் .........
குறிப்பாக ஆறாவது சம்பளக்குழுவில் பரிந்துரைத்த இதர படிகளை 
01.01.2006 முதல் அமுல்படுத்தப்பட படவேண்டும் என்ற கோரிக்கை -அரசு 01.09.2008 முதல் தான் வழங்கியது -இன்றும் அதே நிலைதான் புதிய படிகளை 01.01.2016 முதல் நாம் வைக்கும் கோரிக்கை --
பிப்ரவரி 2006--ஜூன் 2006 இடையிலான ஊழியர்களின் இன்கீரீமெண்ட் --MMS  ஓட்டுனர்களுக்கு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டு வந்ததை நாலாவது சம்பளக்குழு 950 என்றும் ஐந்தாவது சம்பளக்குழு 3050 என வழங்கியதை எதிர்த்து -நீதிமன்றம் சென்று -வென்றபிறகும் தீர்க்கப்படாத பிரச்சினை -
பதவி உயர்வு பெறுபவர்களுக்கு -நேரடி நியமன ஊழியர்களுக்கும் இடையே காணப்படும் நிர்ணய முறை --MACP பதவியுயர்வில் இலாகா தேர்வு எழுதி வந்தவர்களுக்கு மறுக்கப்படும் நியாயங்கள் இப்படி அனாமலிகள் அப்படியே இருப்பது நமது சாபக்கேடு --இந்த நிலையில் ஏழாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை கலைய அரசு அனாமலி கமிட்டியை அமைத்துள்ளது --இது எட்டாவது சம்பளக்குழுவிற்கு தனது பரிந்துரைகளை அனுப்பாமல் --இப்பொழுதே அதன் முடிவுகளை அறிவிக்கவும் -அதன் பலன்களை பெறவும் --மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் 
             தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

0 comments:

Post a Comment