...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 31, 2018

                                       முக்கிய செய்திகள் 
  தபால்காரர் மற்றும் MTS ஊழியர்களுக்கான எழுத்தர் பதவிஉயர்விற்கான தேர்வு 09.12.2018 அன்று நடைபெறுகிறது .
2015-2016 2016=2017 மற்றும் 31.12.2018 வரையிலான காலியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது .கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கான பணிஇடத்திற்கான தேர்வு என்பதால் இன்றே தயாராகுங்கள் .பல புதிய /இளைய தபால்காரர் தோழர்கள் ஏற்கனேவே பல தேர்வுகளை சந்தித்த அனுபவத்துடன் நம்மிடம் பணியாற்றுகிறார்கள் .அவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு .இதற்காக நமது முன்னாள் கோட்ட செயலரும் திருநெல்வேலி அஞ்சல்பொருள் கிடங்கு  மேலாளருமான தோழர் .R .ஹரிகர கிருஷ்ணன் அவர்களை பயிற்சி வகுப்புகள் நடத்த நாம் வேண்டுகோள் வைத்துள்ளோம் .அவர்களும் இ தற்கு இசைந்துள்ளார்கள் .தோழர் ஹரி அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் அனைவருக்கும் நெல்லை NFPE இன் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 
----------------------------------------------------------------------------------------------------------------------
பாளையம்கோட்டையில் இன்று IPPB  CUG (CLOSED USER GROUP ) அடிப்படையில் இன்று பரிட்சார்த்த அடிப்படையில் செயல்படப்போகிறது 
-----------------------------------------------------------------------------------------------------------------
இன்று பணிஓய்வு பெறும் தோழர் ஆறுமுகம் தபால்காரர் பாளையம்கோட்டை (முன்னாள் அஞ்சல் நான்கின் தலைவர் ) அவர்களின் பணிஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள் 
---------------------------------------------------------------------------------------------------------------------
 வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Friday, July 27, 2018

                                            முக்கிய செய்திகள் 
கமலேஷ் சந்திரா கமிட்டி அமுலாக்கத்திற்கு பிறகு கிளை அஞ்சலகங்களை   வருவாய் அடிப்படையில் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன .
 100 சதம் வருவாய் ஈட்டும்  BO A பிரிவு பச்சை (GREEN )
75 சதம் முதல் 99.9 வரை              B  பிரிவு ஆரஞ்சு (ORANGE)
50 சதம் முதல் 47.9 வரை             C   பிரிவு  இளஞ்சிகப்பு (PINK )
50 சதத்திற்கு கீழ்                          D     பிரிவு  சிகப்பு   (RED ) 
100 சதத்திற்கு மேல் உள்ள அலுவகத்திற்கு  அலவன்ஸ் வழங்கப்படும் 
B பிரிவில் உள்ளவர்களுக்கு நிர்வாகத்தால் ஊக்குவிக்கப்பட்டு 100 சதத்தை எட்ட உதவுவார்கள் 
C பிரிவு ஊழியர்களுக்கு முறையான கடிதம் அனுப்பப்பட்டு கிளை அஞ்சலக அலுவகத்தில் வருவாயை பெருக்கவும்  கூடுதலாக 30 நிமிடம் பணி செய்யவும் பணிக்கப்படுவார்கள் 
D பிரிவு அலுவகத்திற்கு RED ALERT நோட்டீஸ் கொடுக்கப்பட்டு கூடுதலாக 60  நிமிடம் பணி செய்யவும் பணிக்கப்படுவார்கள் .தொடர்ந்து வருவாய் ஈட்டுவதில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அந்த அலுவகத்தை இணைக்கவோ /வேறு இடத்தில் மாற்றவோ நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் .
                          இதை வைத்துக்கொண்டு நமது கோட்டத்திலும் ஒருசில கிளை அஞ்சலகங்களுக்கு FORMAL நோட்டிஸ் மற்றும் RED ALERT கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .ஆகவே இது போன்ற கடிதங்கள் வந்தால் சம்பந்தப்பட்ட BPM தோழர்கள் உடனடியாக கோட்ட சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டுவர கேட்டு கொள்ள படுகிறார்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர் நெல்லை 

Thursday, July 26, 2018

 தோழியர் வனிதா SPM KTC நகர் அவர்கள் தன்விருப்ப ஓய்வில் 27.07.2018 அன்று செல்கிறார்கள்      
அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
ஆரம்பத்தில் நமது கோட்டத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்து நாகர்கோயில் மற்றும் கரூர் கோட்டங்களில் பணிமுடித்து மீண்டும் நமது கோட்டத்திற்கே வந்து பணியாற்றியவர் .இவரது தந்தையும் நமது துறையை சார்ந்தவர் என்பது மற்றுமொரு சிறப்பு .
                                         
                           
                          
                         வனிதாவும் செல்கிறார்கள் 
                         இனி போதும் என்ற நிலை எடுத்து 

                          இனிதாகவே புறப்படுகிறார்கள் 
                          போராட்டம் என்றாலும் 
                           நன்கொடை கேட்டாலும் 
                           இரண்டையும் இன்முகத்தோடு 
                           ஏற்றுக்கொண்ட பல தோழியர்களில் 
                            அக்கா வனிதாவும் ஒருவர் 

                          எதையும் தாங்கும் 
                         இதயம் மட்டுமல்ல -எல்லாவற்றையும் 
                          சமாளிக்கும் திறன் பெற்றவர் 
                          தொடர் சோகங்களை -தனது 
                         குடும்பத்தில் சந்தித்தாலும் 
                          துணிச்சலோடு எதிர் கொண்டவர் 
                          அன்போடு பழக கூடியவர் 
                           பன்போடு இருந்து காட்டியவர் 
                          கனிவான பேச்சும் 
                          பணிவான பழக்கமும் 
                          அன்பான உபசரிப்பும் 
                          அமைதியான வாழ்க்கையும் 
                          தோழியர் வாழ்வில் நிலைத்திட வேண்டும்   -என 
                           தோழமை உணர்வோடு வாழ்த்துகிறோம் 
                                                தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 
               

                   
                                     



                       

Wednesday, July 25, 2018

                                            முக்கிய செய்திகள் 
நமது கோட்ட முதுநிலை கண்காணிப்பாளராக திரு .R .சாந்தகுமார் அவர்கள் பொறுப்பேற்க இருக்கிறார்கள் .நேற்று அதற்கான உத்தரவு CPMG அலுவகத்தில் இருந்து வந்துவிட்டது .அவர்களை நெல்லை NFPE சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம் .
----------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------
1986 க்கு முன் பயிற்சியில் சேர்ந்த தோழர்களுக்கு அவர்களின் பயிற்சி காலத்தை சேவைக்காலத்தோடு சேர்க்கும் பணிகள் நமது கோட்டத்தில் முடுக்கிவிட பட்டுள்ளன .அதற்கான சீர்விஸ் புத்தகங்கள் கோட்ட அலுவகத்தால் கேட்க பட்டுள்ளன .1986 க்கு முன் உள்ள அனைவர்க்கும்  மாதிரி விண்ணப்ப கடிதம் கிடைத்திருக்கும் என நினைக்கிறோம் .கிடைக்காதவர்கள் கோட்ட செயலரை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------
1996 யில் பணியாற்றிய தபால்காரர்களுக்கான ஊதிய மறு நிர்ணயம் (BASIC PAY 3050 ) செய்வதற்கான ஆயத்த பணிகள் தொடங்கிவிட்டன .பெரும்பாலும் பணிஓய்வு பெற்றவர்களே அதிக அளவில் இருக்கிறார்கள் .அவர்களுக்கு ஆடிட் அலுவலக ஒப்புதலுக்கு பிறகுதான் கிடைக்கும் .
----------------------------------------------------------------------------------------------------------------------
MACP விடுபட்ட தோழர் ஒருவருக்காக மீண்டும் DPC 27.07.2018 அன்று கூடுகிறது 
--------------------------------------------------------------------------------------------------------------------
CONFORMATION கான உத்தரவு நேற்று கையெழுத்தாகி விட்டது ..நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு ஊழியரையும் சேர்த்து மொத்தம் 19 ஊழியர்க்ளுக்கு CONFORMATION உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, July 24, 2018

வளர்ச்சி பாதையில் அஞ்சல் துறை -நமது அமைச்சர் பெருமிதம் 
பாரம்பரிய சேவையில் வளர்ச்சி அபாரம் 


 அன்பார்ந்த தோழர்களே ! 
    மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 05.09.2018 புதன் அன்று புது டெல்லியில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது ..நமது கோட்டத்தில் இருந்து டெல்லி பேரணியில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் கோட்ட செயலர்களை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம் 
                                                        கோரிக்கைகள் .
                     10 POINTS CHARTER OF DEMANDS OF CONFEDERATION
(adopted by the National Convention held at Hyderabad on 10-06-2018)
1.     Scrap New Contributory Pension Scheme. Restore old defined benefit Pension Scheme to all employees.
2.     Settle 7th CPC related issues including increase in Minimum Pay and fitment formula, HRA arrears from 01-01-2016, MACP Bench Mark, promotional heirarchy and date of effect from 01-01-2006, Option-I for pensioners and anomalies arising out of implementation of 7th CPC recommendations.
3.     Fill up all vacant posts. Reintroduce Regional Recruitment for Group B & C posts. Withdraw orders for abolishing posts lying vacant for more than five years. Revive all posts abolished during 2001 to 2008 under Annual Direct Recruitment plan as per  May 2001 orders of former NDA Government.
4.     (a)   Regularisatin of Gramin Dak Sevaks and grant of Civil Servant status. Implement remaining positive recommendations of Kamalesh Chandra committee report.
        (b)   Regularise all casual and contract workers including those appointed on or after 01-09-1993.
5.     Ensure equal pay for equal work for all. Remove disparity in pay scales between Central Secretariat Staff and similarly placed staff working in field units of various departments.
6.     Stop closure of Govt. establishments and outsourcing. Withdraw closure orders of Govt. of India Presses. Stop proposed move to close down salt department. Stop FDI and privatisation of Railways and Defence department.
7.     Implement 7th CPC wage revision and pension revision of Autonomous body employees and pensioners. Grant Bonus to Autonomous body employees pending from 2016-17 onwards.
8.     Remove 5% condition imposed on compassionate appointment.
9.     Grant five time bound promotions to all Group B&C employees. Complete Cadre Reviews in all departments within a time-frame.
10.   (a)   Stop attack on trade union rights. Ensure prompt functioning of various negotiating forums under the JCM scheme at all levels.
        (b)   Withdraw the draconian FR-56(j) and Rule 48 of CCS Pension Rules 1972.

                         தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                SK .பாட்சா  
கோட்ட செயலர்கள் நெல்லை                              

Monday, July 23, 2018

                                                  முக்கிய செய்திகள் 
01.01.2004 முதல் புதிய பென்ஷன் அமுலான போதிலும் அதில் இருந்து தங்களை விடுவித்து பழைய ஓய்வூதியத்தில் தொடரவே அனைத்து துறை ஊழியர்களும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள் .அதற்கிடையில் பல்வேறு வழக்குகளும் NPS குறித்து நடந்து கொண்டிருக்கின்றன .இதற்கிடையில் மத்திய ரிசர்வ் போலீசில்  SI தேர்விற்கு 2002 காலியிடங்களுக்கு தேர்வு 2003 யில் நடந்து 2004 யில் பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்வு நடந்த ஆண்டு /எந்த ஆண்டிற்கான பணியிடம் என்பதை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு பழைய பென்ஷன் தான் பொருந்தும்என்று தீர்ப்பளிக்கப்பட்டது  இந்த  தீர்ப்பை சுட்டிக்காட்டி இன்று BCF மற்றும் பாரா மிலிட்டரி ஊழியர்களும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உன்னத தீர்ப்பை பெற்றுள்ளனர் .நமது துறையிலும் YEAR OF VACANCY தான் அடிப்படை என பல நூற்று கணக்கான ஊழியர்கள் வழக்கை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள் .
                                                மதுரையில் CSI அமுலாகுமா ?
CSI அமுலாக்கத்திற்கு முன்பாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்த பின்னரே அந்த கோட்டத்தில் CSI அமுல்படுத்த வேண்டும்  என்ற இலாகாவின் உறுதிமொழியை மீறி பல கோட்டங்களில் CSI அமுலாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே ! இதே பணியில் மதுரையில் 24.07.2018 முதல் CSI அமுலாக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின்பும் கோட்ட சங்க கோரிக்கைகளை அலட்சியப்படுத்திவிட்டு CSI அமுலாக்கத்தை அமுல்படுத்த மதுரை கோட்ட நிர்வாகம் முனைந்தது .எப்போதுமே மதுரை கோட்டம் புதுமையாக சிந்திக்கும் திறன் படைத்த கோட்டம் .அடிப்படைக்கட்டமைப்புகள் அனைத்தையும் கொடுத்தபின்னரே CSI அமுல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் மதுரை கோட்ட சங்கம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .இந்த பின்னணியில் மதுரை மண்டல நிர்வாகம் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தை -அவசரஅவர்சமாக கொண்டுவரப்பட்ட புதிய கணினிகள்  என சென்றுகொண்டிருக்கிறது .இன்று இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .இதற்கிடையில் நிர்வாகம் எதுவும் தெரியாதது போல் ஏனைய கோட்டங்களில் இருந்து DSM களை மதுரைக்கு அனுப்பித்து வருகிறது .
                             நீதி கேட்டு போராடுவது மதுரைக்கு ஒன்றும் புதிதல்ல !
இந்த முயற்சியும் வெற்றி பெற நெல்லை கோட்டம் வாழ்த்துகிறது .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, July 21, 2018

                                                       இலக்கிய இன்பம் 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கத்தை மிஞ்சிய ஒரு தத்துவ ஞானி -கவிஞர் உண்டென்றால் அவர்தான் கணியன் பூங்குன்றனார் .சங்ககால புகழ்பெற்ற புலவர் .சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மகிபாலன்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் .அவரின் அழியா புகழுக்கு அவரது ஒற்றை வரிகளே 
சான்று .அதுதான் 
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இந்த ஒரு வார்த்தை சொல்ல என்ன ஒரு மனித நேயம் வேண்டும்! அனைத்து உலகும் எனது உறவு. அனைத்து மக்களும் எனது உறவு. எந்த ஊரும் எனது ஊரே என்பது எவ்வளவு உயர்ந்த சிந்தனை!
இந்த மாதிரி ஒரு சிந்தனை, வார்த்தை, சொல் வர வேண்டும் என்றால், அந்த மனிதர், அந்த புலவர், எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்! அவர் வாழ்ந்த சூழலும், சுற்றமும், ஊரும், நாடும், எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்!
எனக்கென்று ஒரு எல்லை என்பது இல்லை என்று சொல்வதற்கு, மிகப் பெரிய சிந்தனை, மிகப் பரந்த மனப்பாங்கு வேண்டும். 'எனது நாடு, எனது ஊர், எனது வீடு' என்று இருப்பார் மத்தியில், 'எல்லாரும் என் உறவினரே' என்று சொல்வது மிகப் பெரிய மாற்றம் அல்லவா!
'எல்லோரும் என் உறவு' என்று சொல்லும்போது, என்னிடம் இருப்பதை, அனைவரிடமும் பகிர்ந்து அளிப்பதற்கும், அவர்கள் அளிப்பதை மகிழ்ச்சியோடு ஏற்கவும் மனம் வேண்டும்.  


யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192) (தொடரும் )

                                                 முக்கிய செய்திகள் 
1.SSA கணக்கு தொடங்க இனி குறைந்தபட்சம் ரூபாய் 250 என மாற்றப்பட்டுள்ளது .இதற்கான அறிவிப்பு 05.072018 அன்றே அரசால் வெளியி டப்பட்டுள்ளது .
2.LTC வசதியை மத்திய ஆசிய நாடுகளுக்கு விரிவுபடுத்த சம்பந்தப்பட்ட அமைச்சங்களுக்கு கருத்து கேட்கிறது மத்திய அரசு .ஏற்கனவே இதே போல் தென் ஆசியநாடுகளுக்கு இதே போல் LTC யை விரிவுபடுத்த எடுத்த முயற்சியும் நிறைவேறவில்லை .


Thursday, July 19, 2018

                                                 முக்கிய செய்திகள் 
     தபால் காரர்களுக்கு 5 வது சம்பளக்குழுவில் அடிப்டைசம்பளம் ரூபாய் 3050 வழங்கவேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அஞ்சல் வாரியமும் அதற்கான உத்தரவை  23.06.2018 அன்று பிறப்பித்துள்ளது .இதன்படி 01.01.1996 முதல் 10.10.1997 வரை 1996 யில்     பணியில் இருந்த         தபால்காரர்களுக்கு ஜனவரி 1996 இல் அடிப்படை சம்பளம் ரூபாய் 3050 யை நோஷனல் ஆக நிர்ணயிக்க வேண்டும் .இந்த 01.01.1996 முதல் 10.10.1997 வரை FIXATION  மட்டுமே உண்டு என்றும் அரியர்ஸ் ஏதும் வழங்கப்படாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது .
  இந்த உத்தரவை விரைந்து அமுல்படுத்த வலியுறுத்தி அஞ்சல் நான்கு மாநில செயலர்   17.07.2018 அன்று நமது CPMG அவர்களை சந்தித்து வற்புறுத்தியுள்ளார் . .CPMG அவர்களும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்கள் .
அதன்படி 01.01.1996 முதல் 11.10.1997 வரையிலான தபால்காரராக பணியில் இருந்தவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிட்டும் .குறிப்பாக இந்த சலுகை ஓய்வுபெற்றவர்களுக்கும் பொருந்தும் 
---------------------------------------------------------------------------------------------------------------------------                         புதிய பென்ஷன் அமுலாகிவிட்டதால்    பழைய பென்ஷன் என்பது சாத்தியமில்லை .ஏனென்றால் அவ்வாறு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை என்னாகும் -இது சாத்தியமில்லை என்று நினைக்கும் தோழர்களுக்கு ஒரு நல்ல தகவல் .சமீபத்தில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பை ஒட்டி வெளியிடப்பட்ட அரசின் ஆணையை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம் .அதன்படி 
 ஒவ்வொரு இலாகாவிலும 2004க்கு முன்பு் கேசுவல் லேபராக பணிபுரிந்தவர்களை 2004 க்கு பிறகு பணிநிரந்தம் செய்திருந்தாலும் அவர்களுக்கும் பழைய பென்சனே வழங்கலாம். அவர்களிடம் NPS க்காக பணம் பிடித்திருந்தால் அதனை GPFல் சேர்க்க வேண்டும். அரசு சார்பில் வழங்கிய பங்களிப்பு தொகை மட்டும் அதில் சேர்க்கப்படாது.
 அவர்களது முந்தைய சர்வீஸ் கணக்கில் கொண்டு பழைய பென்சன் திட்டத்தில் இவர்களை சேர்க்க வேண்டும். என உத்தரவு வந்துள்ளது .நமது துறையிலும்  இதே போல் பதவிஉயர்வு பெற்றMTS/போஸ்ட்மேன் களுக்கு  GDS பணிக்காலத்தில் 
 5/8 சர்வீஸ் காலத்தை எடுத்துக்கொண்டு  பழைய பென்சன் வழங்க வேண்டும்  என்ற தீர்ப்பை பெற்றுள்ளோம் .அதே போல் எந்த ஆண்டிற்கான காலி இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டார்களோ(2002 -2003) அவர்களுக்கும் 
பழைய பென்ஷன் பொருந்தும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது .கேசுவல் லேபர் வழக்கை போல் நமக்கும் அரசு இந்த உத்தரவை பிறப்பிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை .
     நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 





அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
     CSI அமுலாக்கத்திற்கு பிறகு நமது விடுப்பு விண்ணப்பங்கள் முழுவதும் LEAVE PORTAL மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தாலும் சமீபகாலமாக SAP சரிவர இயங்காததால் ஊழியர்கள் பழைய முறைப்படி விடுப்பு விண்ணப்பித்து விடுமுறையில் சென்று வந்தார்கள் .மற்ற கோட்டங்களில் இது மிக கட்டாயமாக நடைமுறைப்படுத்த போதிலும் நமது கோட்டத்தில் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விடுப்பு அளித்துகொண்டிருந்தார்கள் .  ...அதற்காக நமது கோட்ட அலுவலக்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .SAP இயங்காததால் இதுவரை 180 ஊழியர்களின் விடுப்புகள் LEAVE PORTAL மூலமாக UPDATE பண்ண முடியாமல் தேங்கியுள்ளன .இந்நிலையில் நேற்றில் இருந்து LEAVE PORTAL முழுமையாக இயங்குவதால் ஏற்கனவே விடுப்பில் சென்று வந்தவர்களும் தாங்கள்  இதுவரை எடுத்தவிடுப்பு விபரங்களை தனித்தனியாக LEAVE PORTAL மூலமாக விண்ணப்பிக்க கேட்டு கொள்ள படுகிறார்கள் ..இது குறித்து கோட்ட அலுவலகம் கொடுத்திருக்கும் அறிவிப்பை உங்கள் பார்வைக்கு தருகிறோம் 
MATTER URGENT
To
All PMs / SPMs
under Tirunelveli Division

No. B1/MISC/Dlgs dated at TVL - 2 the 19/07/2018

Please refer this office letter of even number dated 15/06/2018 and email dated 14/07/18. The list of officials availed leave without applied through Employee Leave Portal is detailed in the enclosed Annexure.  
Issues in Employee Leave Portal is now resolved. Please direct the officials to apply leave in Employee Leave Portal immediately.

All PMs and SPMs should ensure the same and report compliance.

Senior Superintendent of Post Offices
Tirunelveli Division

Tirunelveli - 627 002

0462 2560422/2568060

dotirunelveli.tn@indiapost.gov.in
-----------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்  NFPE நெல்லை 

                                                  முக்கிய செய்திகள் 
நமது கோட்டத்தில் நிலுவையில் உள்ள TOUR TA /TRANSFER TA நேற்று கிட்டத்தட்ட PASS செய்யப்பட்டு அவரவர் சேமிப்பு கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது .தங்களது பெண்டிங் பில்கள் அனைத்தும் வந்துவிட்டதா என சரிபார்த்துக்கொள்ளவும் 
----------------------------------------------------------------------------------------------------------------.
EDUCATION ALLOWANCE குறித்து DOPT தெளிவான விளக்கம். 
Children Education Allowance   பெறுவதில் பல்வேறு  குழப்பமான நிலையில் இருந்து வந்ததால் அது குறித்து ஒரு விளக்கம் ஒன்றினை DOPT வெளியிட்டுள்ளது. 
 மத்திய அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்காக எவ்வளவு செலவு செய்திருந்தாலும் அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ 2250 என்பது(Fixed amount ) நிர்ணயிக்கப்பட்ட தொகை ஆகும்.  CEA பெறுவதற்கு மத்திய அரசு ஊழியர்கள்  தங்கள் குழந்தை அல்லது குழந்தைகள் படித்த பள்ளி அல்லது கல்வி நிறுவனத்தின் தலைவரிடமிருந்து பெறப்படும் சான்றிதழ் போதுமானது. அந்த சான்றிதழுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.  
அந்தச் சான்றிதழானது மத்திய அரசு ஊழியர்களின்  குழந்தை அல்லது குழந்தைகள்  கடந்த கல்வியாண்டில் அந்தப் பள்ளியில் படித்ததை  உறுதி செய்வதாக இருத்தல் வேண்டும்.
ஒருவேளை குழந்தை படித்த கல்வி நிறுவனத் தலைவரிடம் சான்றிதழ் பெற முடியாவிட்டால் குழந்தை அல்லது குழந்தைகள்  பள்ளியில் படித்ததற்கான ரிப்போர்ட் கார்டு அல்லது  குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளுக்கு பணம் கட்டிய ரசீதுகள் போன்றவற்றை ஆதாரங்களாக
 சுயகையொப்பமிட்டு அளித்து CEA CLAIM செய்யலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------


                                                      கோளாறு எங்கே ? 
நேற்றைய செய்தித்தாள்களிலும் / தொலைக்காட்சியிலும் அதிகமாக பகிரப்பட்ட செய்திகளில் ஒன்று .ஸ்ரீபுரம் (திருநெல்வேலி )போஸ்ட்மாஸ்டர் உள்ளிட்ட மூன்று பேருக்கு நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது 
               சேவைக்குறைபாடு காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈடு என நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளது .
இது முதல் முறையல்ல .சமீபகாலமாக நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் நமது துறைக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்பு என்பது தொடர்கதை ஆகிவிட்டது .
போஸ்டல் ஆர்டரில் கமிஷன் மாற்றி அச்சடிக்க படவில்லை என்ற வழக்கிலும் அபராதம் 11000 விதிக்கப்பட்டது .பாளையம்கோட்டையில் மின்சாரம் தடைபட்ட நேரத்தில் ஜெனெரேட்டர் இயக்க காலதாமதமானதால் MPCM கவுண்டரில் அதிகநேரம்? காத்திருந்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூபாய் 8000 கடைசியாக இந்தவழக்கு பதிவு செய்யப்பட்ட தபால் செலவு போக மீதி தொகைக்கு கங்கா நீர் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கவுன்டர் PA சொன்னதாக (அன்றைய நாட்களில் கங்கா ஜெல் விற்பனைக்கு இல்லை என்பது வேறு விஷயம் ) ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூபாய் 6000  இன்னும் மஹாராஜநகர் மற்றும் வண்ணாரப்பேட்டை அலுவலகத்தின் மீதும் வழக்குகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன .ஏன் தொடர்ந்து நம் வழக்குகள் தோல்வியடைகிறது என பார்த்தால் ஒரு வழக்கில் நமது துறை சார்பாக ஒழுங்காக ஆஜராகாமல் EX PARTY தீர்ப்பினால் அபராதம் .
ஒரு வழக்கில் சரியான வாதத்தை நமது  அரசு தரப்பில் எடுத்துரைக்கவில்லை என்பதால் அபராதம் -அப்படியென்றால் STANDING கமிட்டி உறுப்பினர்களுக்கு நமது தரப்பில் இருந்து முழுமையான தகவல்களை கொடுக்க வில்லை என்றால் யார் இதற்கு பொறுப்பு? -வழக்குகளில் தோற்றவுடன் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் சத்தமில்லாமல் ரெகவரி பண்ண நோட்டீஸ் அனுப்பப்படுகிறது .ஒரு தோழியருக்கு பணிஓய்வுக்கு ஒருவாரத்திற்கு முன்பாக 4000 கட்ட சொல்லிவந்தது .பணிஒய்வை கருத்தில் கொண்டு அவர்களும் பணம் கட்டிவிட்டார்கள் .மற்றவர்கள் நிர்வாக முடிவை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் .ஒவ்வொரு வழக்கிலும் எத்தனை வாய்தா நடந்தது .அதில் எத்தனை வாய்தாவிற்கு நமது தரப்பில் பங்கேற்றோம் அப்படி பங்கேற்கும் போது எந்த கேடரில் ஊழியர் பங்கேற்றார் -IP சென்றாரா ? ASP ரேங்க் இல் உள்ளவர்கள் சென்றார்களா ? தீர்ப்பின் நகல் எங்கே ? தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையிடு முறையாக குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்பட்டதா என்ற தகவல்களை நாம் பெற்றுக்கொண்டு பதிலளிக்க வேண்டும் .நிர்வாக தாமதத்திற்கும்  மெத்தனத்திற்கும் தொடர்ந்து அப்பாவி ஊழியர்களை பலியாக்குவதை தடுத்து பாதுகாப்போம் .இனி வரும் நாட்களிலாவது இதுபோன்ற கோர்ட் விவகாரங்களில் நிர்வாகம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
                                             

Wednesday, July 18, 2018

பாளையம்கோட்டையில் நேற்று கமேலேஷ் சந்திரா கமிட்டி உத்தரவின் விளக்க கூட்டம் நடைபெற்றது .அதில் ஒருபகுதியாக நெல்லையில் இலாகா ஊழியர்களில் அதிகநாட்கள் அதாவது ஐந்து நாட்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று சிறப்பித்த நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவிக்கப்பட்டது .
விளக்க உரையில் இருந்து ...
TRCA BPM ஊழியர்களுக்கு போஸ்ட்மேன் சம்பள அடிப்படையிலும் -இதர GDS ஊழியர்களுக்கு MTS ஊதிய அடிப்படையிலும் TRCA வழங்கப்பட்டுள்ளது .
உதாரணமாக MTS மொத்த பணிநேரமான 7.30 மணிக்கு குறைந்தபட்ச சம்பளம் ஏழாவது ஊதிய குழுவில் 18000 என்ற கணக்கில் 4 மணிநேரத்திற்கு ரூபாய் 9600 5 மணிநேரத்திற்கு ரூபாய் 12000 என உள்ளதை கமிட்டி 9600 என்பதனை 10000 என உயர்த்தியதை அரசு ஏற்றுள்ளது .அதே போல் தபால் காரர் சம்பளமான 21700 அடிப்படையில் BPM ஊழியர்களுக்கு ரூபாய் 4 மணிநேரத்திற்கு 12000 மற்றும் 5 மணிநேரத்திற்கு 14500 என வழங்கப்பட்டுள்ளது .
உதாரணம்   தபால் காரரின் ஒருமணிநேர ஊதியம் 
  7.5 X 21700
------------------+ 95.17  
    30.4
தபால்காரரின் ஒருமணிநேர சம்பளம்   ரூபாய் 95.17 
MTS ஊழியரின் ஒருமணிநேர சம்பளம்  ரூபாய்  80 
இந்த அடிப்படையில் தான் TRCA நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 




                                                         மாநில  சங்க செய்திகள் 
கேடெர் சீரமைப்பு அமுலாக்கத்தின் அடுத்தகட்டமாக இரண்டாவது சீனியாரிட்டி பட்டியல்  தயாரிக்கப்பட்டு விரைவில் சுற்றுக்கு விடப்படும் .CR இரண்டாவது பதவியுயர்வு பட்டியல் 30.09.2018 குள் வெளிவர அதிக வாய்ப்புகள் இருக்கின்றன .மேலும் மற்ற மாநிலங்களை போல எழுத்தர் காலியிடங்களில் தற்காலிகமாக பணிபுரிய தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள MTS/தபால்காரர் மற்றும் GDS பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் .
                     கேடெர் சீரமைப்பு குறித்து  மாநிலச்சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் உள்ள சாராம்சங்கள் 
1.04.11.1992 க்கு பிறகான வரைவு சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு -அதில் உள்ள குறைகள் முற்றிலும் நீக்கப்பட்ட பிறகே அமுல்படுத்தவேண்டும் .
2.BD டார்கெட் என்ற பெயரில் IN-DOOR ஊழியர்களை துன்புறுத்த கூடாது .without applying the orders of DOPT and base guidelines forawarding APAR grading,citing that,they have not achieved the required the BD 
.3.CSI செயலிழந்த நிலையில் மாநிலம் முழுவதும் நூற்றுக்கு அதிகமான ஊழியர்கள் VR க்கு செல்ல முடிவெடுத்துள்ளனர் .இதனால் ஏற்படும் ஆட்பற்றாக்குறையை போக்க மற்ற மாநிலங்களை போல எழுத்தர் காலியிடங்களில் தற்காலிகமாக பணிபுரிய தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள MTS/தபால்காரர் மற்றும் GDS பணியாற்ற அனுமதிக்க வேண்டும் .
4.காசாளர் பதவியில் பணியாற்றும் LSG ஊழியர்களுக்கு CR அமுலாக்கத்திற்கு முன்பே அவர்கள் வேறு இடம் கேட்டால் பரிசீலிக்க வேண்டும் .
5.கூடுமானவரை முதல் பதவியுயர்வு ஆன LSG  பதவிக்கு அந்தந்த கோட்டம்/ /நகரத்திற்குள் இடமாறுதல் அளித்திடவேண்டும் .
6.ACCOUNTANT பதவி LSG ஆகும் போது ஏற்கனேவே ஜெனரல் லைன் சென்றவர்கள் விரும்பினால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் .
7.நிலுவையில் உள்ள அனைத்து RULE 38 இடமாறுதல் விண்ணப்பங்களையும் CR க்கு முன் பரிசீலிக்க வேண்டும் .
                                            CSI குறித்த கடிதம் 

The Chief Postmaster General,
 Tamilnadu Circle,
 Chennai 600 002.
 Respected Sir,
 Sub: Non settlement of issues raised from user ends by TCS and hundreds of tickets raised were unanswered months together/arbitrary closing of tickets by TCS team- Immediate Intervention is much requested–
 Reg. Ref : Our CHQ letter No. P/4-5/CSI dt. 28.6.2018 addressed to Member(Tech) and Copy served by our Circle Union on 10.7.2018. …
.. The kind attention of our CPMG, TN is invited to the letter cited under reference, wherein innumerable problems faced at the user ends in various areas after the introduction of CSI are summarized, so as to take suitable immediate action with the Vendors and to settle them immediately, in order to safe guard the public services and to avert the huge loss sustained by the Department, due to non operation of SAP. Further, hundreds of Circle wise pending tickets lying unanswered with the TCS for long. Many software issues raised were not resolved for months together. The TCS Help Desk is totally inattentive. Despite CSI launch and testing in Pilot Circles many issues are yet to be resolved by TCS. Further, instead of settling the issues, the raised items were closed arbitrarily and the end users were asked to raise again after some time, in order to conveniently avoid showing any pendency of issue. This is a sorry state of affairs and this should be looked into very seriously and solutions given within a short time frame. Some of the recent items brought to the notice of this union from the working staff are placed hereunder for your view and redressal of the same immediately. A line in reply is much solicited. 
With regards,
 (J. RAMAMURTHY) 
CIRCLE SECRETARY. 



Tuesday, July 17, 2018

Extending Old Pension Scheme to Casual 

Workers regularised on or after 1.1.2004.

                                                         முக்கிய செய்திகள் 
நேற்று (16.07.2018 ) நமது SSP அவர்களை  நானும் அஞ்சல்நான்கு செயலர் தோழர் SK பாட்சா அவர்களும் சந்தித்து பேசினோம் .குறிப்பாக சுழல் மாறுதல் உத்தரவு குறித்து விரிவாக பேசினோம் .அதற்கு முன்பாக LRPA பட்டியல் வெளியிடப்பட போவதாகவும் 13 பேர் கொண்ட இறுதி பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்கள் .கூடுமானவரை LRPA களை தலைமை அஞ்சலகங்களில் அட்டாச் செய்யவேண்டும் என்றும் -டெபுடேஷன் விஷயங்களில் சீரான நடைமுறை பின்பற்றவேண்டும் எனவும் கேட்டுள்ளோம் --SKJ 
--------------------------------------------------------------------------------------------------------------------------
                               GDS அமுலாக்கத்திற்கு பிறகு இன்று 17.07.2018 பாளையம்கோட்டையில் விளக்க கூட்டம் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது .தங்கள் பகுதி தோழர்களுக்கு தெரியப்படுத்துங்கள் .GDS மத்திய சங்கங்கள் உத்தரவில் கோரியுள்ள மாற்றங்கள் .
1.TRCA 01.01.2016 முதல் நிர்ணயம் செய்ய வேண்டும் 
2.கி ராஜூடி  தொகை 5 லட்சமாக உயர்த்த படவேண்டும் 
3.ஆண்டுக்கு 30 நாள் EL வேண்டும் என்றும் அதை 180 நாள் வரை சேமிக்கலாம் 
4.12 -24 -36 என மூன்று கட்ட பதவி உயர்வு 
5.குழந்தைகள் படிப்பிற்கு CHILDREN EDUCATION அலவன்ஸ் 
6.குரூப் இன்சூரன்ஸ் 5 லட்சம் 
7.தன் விருப்ப ஓய்வு 
8.அனைத்து ஓய்வூதிய பலன்களும் 01.0102016 முதல் அமுல்படுத்த வேண்டும் 
9.இலாகா தேர்வுக்கு இருக்கும் 5 வருட சேவை குறைக்க பட வேண்டும் 
10.1972 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சிவில் அந்தஸ்து வழங்க வேண்டும் 
11.GDS வேலைநேரத்தை 5 மணியில் இருந்து 8 மணி நேரமாக உயர்த்த வேண்டும் 
  இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி GDS ச(சி )ங்கங்கள் மூன்றும் இனைந்து பிரதமர் -நிதியமைச்சர் -அஞ்சல் வாரியம் ஆகியோருக்கு மெமோரண்டம் கொடுத்துள்ளனர் .GDS கூட்டு போராட்ட குழு வகுக்கும் போராட்ட திட்டங்களை ஒற்றுமையோடு செயல்படுத்த வாரீர் ! வாரீர் !
                                       தோழமையுடன்  கூட்டு போராட்ட குழு நெல்லை 

Monday, July 16, 2018

                                               முக்கிய செய்திகள் 
ஏழாவது ஊதியக்குழு  தொடர்பாக எழுந்துள்ள முரண்பாடுகளை களைய கூட்டப்பட்ட நேஷனல் அனாமலி கமிட்டியின் அடுத்த கூட்டம் வருகிற 17.07.2018 அன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது . 11.01.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாக இந்த கூட்டம் நடைபெறும்  ..இதுகுறித்து ஏற்கனவே கேபினட் செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறைந்தபட்ச ஊதியத்தில் மாற்றம் -புதிய பென்ஷன் திட்டம் --பென்ஷன் நிர்ணயத்தில் உள்ள குறைபாடு இவைகளை வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது .
-------------------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்டத்தில் சுழல் மாறுதல் உத்தரவு இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது .TRANSFER COMMITTEE இன் மற்றொரு உறுப்பினர் SP PSD அல்லது சீனியர் போஸ்ட்மாஸ்டர் நாகர்கோயில் இதில் யாராவது ஒருவர் இருப்பார்கள் 
----------------------------------------------------------------------------------------------------------------------
GDS சங்கத்தின் சார்பாக நாளை மாலை 6.00 மணிக்கு GDS கமிட்டி உத்தரவுகள் குறித்த விளக்க கூட்டம் நடைபெறுகிறது .அதில் GDS வேலைநிறுத்தத்தில் நமது கோட்டத்தில் அதிக நாள் (ஐந்து ) நாட்கள் பங்கேற்ற தோழர்கள் SK .பாட்சா மற்றும் தோழர் ஆதிநாராயணன் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கப்படுகிறது .நமது முன்னணி தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறேன் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, July 14, 2018

                                              நெல்லை கோட்ட செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
                       நமது நீண்ட நாள் கோரிக்கையான PA கேடருக்கு CONFORMATION உத்தரவு விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் நேற்று 13.07.2018 அன்று CONFORMATION வழங்குவதற்கான DPC  கூடியது .அதில் 19 ஊழியர்களுக்கு CONFORMATION உத்தரவு  வழங்க கமிட்டி தீர்மானித்துள்ளது .இந்த விவகாரத்தில் மிக அதிகமாக ஒத்துழைத்த நமது கண்காணிப்பாளர் திரு .VPC அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .இதனால் RULE 38 இடமாறுதலுக்கு காத்திருந்த ஊழியர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் .
------------------------------------------------------------------------------------------------------------------------
போஸ்ட்மாஸ்டர் கிரேடு 1 ஊழியர்களுக்கான இடமாறுதல் உத்தரவுகள் நேற்று மண்டல அலுவலகத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது .நமது கோட்டத்தில் இடமாறுதல் பெறும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 
T.K.மீனாகோமதி SPM மஹாராஜநகர் -- SPM வண்ணார்பேட்டை
M.முத்துலட்சுமி SPM வண்ணார்பேட்டை --SPM மஹாராஜநகர்  
G.திருப்பதி SPM சேரன்மகாதேவி  --SPM புளியங்குடி 
M.சுப்ரமணியன் SPM சிவகிரி  --SPM சேரன்மகாதேவி 
--------------------------------------------------------------------------------------------------------------------------
நாளை 15.07.2018 அன்று தோழர் காதர் MTS திருநெல்வேலி அவர்களின் சகோதரியின் திருமணம் மேலப்பாளையத்தில் நடைபெறுகிறது .மணமக்கள் பல்லாண்டு வாழ்க என நெல்லை NFPE வாழ்த்துகிறது 
----------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை ---

Friday, July 13, 2018

                               நீதி வென்றது ! அதற்காக காத்திருந்த காலம் அதிகம் தான் !
தபால் காரர் தோழர்களுக்கு ஐந்தாவது ஊதியக்குழுவில் ஏற்பட்ட பாகுபாடு 20 ஆண்டுகளுக்கு பின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நீக்கப்பட்டது .இதன்மூலம் 01.01.1996 முதல் 10.10.1997 வரையிலான காலத்திற்கு அவர்களின் ஊதியம் 2750-70-3800 என்பது 3050-75-3950 என நிர்ணயிக்கப்படும் .ஆனால் அதற்கான நிலுவை தொகை கிடையாது என்றும் நோஷனல் FIXATION வழங்கவும் உத்தரவிட்டுள்ளது .இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த வழக்கை  தொடுத்து வாதாடி போராடி வெற்றி பெற்றது நமது அகிலஇந்திய தபால் காரர் சங்கம் என்பதனை நன்றியோடு நினைவு கொள்வோம் .நன்றி .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

                                              நெல்லை கோட்ட செய்திகள் 
1இன்று (13.07.2018) எழுத்தர்களுக்கான conformation வழங்குவற்கான DPC கூடுகிறது .
2.நமது கோட்டத்திற்கென  28  கணினிகள் புதிதாக  வரவிருக்கின்றன .
3.மாற்று திறனாளிகளுக்கான போக்குவரத்து படி இருமடங்காக வழங்குவற்கான விளக்க ஆணை ஒன்று நேற்று வந்துள்ளது அதன்படி அரசு குடியிருப்புகள் /வளாகங்களில் (ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் ) இருந்தாலும் அவர்களுக்கும் பொருந்தும் 
4.GDS ஊழியர்களுக்கான நிலுவை தொகை வழங்கும் பணிகள் படு வேகமாக நடைபெற்று வருகின்றன .அஞ்சல் வாரிய உத்தரவு படி 15.07.2018 குள் அவர்களது சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .
                 நெல்லை    NFPE யில் இணையும்  18 புதிய தோழர்களை வாழ்த்தி வரவேற்போம் .அவர்களுக்கு ஜூலை மாதம் முதல் சந்தா சம்பளத்தில் பிடிக்கப்படும் .புதிய தோழர்களின் பங்கு நெல்லை NFPE யை பலப்படுத்தட்டும் .
                                               அஞ்சல் மூன்று 
தோழர்கள் N.வெண்ணிக்குமார் R .பவானி S.சொர்ண வித்யா B.நாகராஜன் S.செல்ல பாண்டி S.திவ்யா 
                                             அஞ்சல் நான்கு 
O.ஜெயபிரபு K.மாரி கண்ணு  S.செல்லம்மாள் V.சுவாமிநாதன் G.ஜீவா 
T.முத்துலட்சுமி S.பிரபாகர் M.நரசிம்மன் S.கீதா S.அருள்மொழி 
V.திருமலை குமார் N.கார்த்திக்குமார் 
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா  கோட்ட செயலர்கள் நன்றி 

Thursday, July 12, 2018

                                             முக்கிய செய்திகள் 
வருமானவரியை தாக்கல் செய்ய கடைசி தேதி 31.07.2018 .ஜூலைக்கு பிறகு -டிசம்பரில் தாக்கல்  ரூபாய் 5000 டிசம்பர் முதல் மார்ச்சில் தாக்கல் செய்பவர்களுக்கு ரூபாய் 10000 உம் அபராதம் விதிக்கப்படுமாம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
1986 க்கு முந்திய பயிற்சி காலத்தை TBOP /BCR இவைகளுக்குத்தான் கணக்கில் எடுக்கப்படும் என்றும் MACP உயர்வுக்கு இது பொருந்தாது என்று மீண்டும் அஞ்சல் வாரியம் விளக்கியுள்ளது .
-------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய அரசு விரைவில் நல்ல செய்தி ஒன்றை மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்போகிறது என்று நித்தமும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டுவருகின்றன .
குறைந்தபட்ச ஊதியம் உயருமாம் --பிட்மேன் பார்முலா மாறுமாம் --புதிய பென்ஷன் ரத்தாகுமாம் -என்று பல தோழர்கள் நம்மிடம் கேட்டு கொண்டிருகிறார்கள் .இவைகளெல்லாம் ஜூலை 2016 யில் மத்திய அமைச்சர்கள் நம் தலைவர்களிடம் கொடுத்த வாக்குறுதிகள்-- வாக்குறுதிகள் வாக்குறுதிகளாகவே இருக்கின்றன 
நம்புவோம் !நல்லதே நடக்கட்டும் -
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா 

Wednesday, July 11, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
 நமது மத்திய சங்க அழைப்பை ஏற்று நெல்லையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .குறிப்பாக நமது கோட்ட மகிளா கமிட்டி கன்வீனர் தோழியர் பசுமதி APM A/CS  மற்றும் மாநில மகிளா  கமிட்டி உறுப்பினர் தோழியர் ஆனந்தகோமதி நெல்லை கோட்ட மகிளா  கமிட்டி உறுப்பினர் தோழியர் விஜயலட்சுமி ஆகியோர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .அதே போல் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் தோழர் கிருஷ்ணன் அமிர்தராஜ் சண்முகசுந்தரராஜ் விஜயராஜா அவர்களுக்கும் SC /ST சங்க செயலர் தோழர் சுப்ரமணியன் அவர்களுக்கும் முன்னாள் கோட்ட தலைவர் ஆதிமூலம் குருசாமி  அகியோர்களுக்கும் நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறோம் .மேலும் நேற்றைய நமது செய்திகளை வெளியிட்ட நெல்லை பதிப்பு 8 செய்தி தாள்கள்  மாலை முரசு மாலை மலர் தமிழ்முரசு தினகரன் ஹிந்து தினமலர் தின தந்தி தினமணி உள்ளிட்ட முன்னணி பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஜெயா டிவி வசந்த் TV நியூஸ் 7 உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்களும் நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறோம் 









Tuesday, July 10, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 நமது மத்திய சங்க அறைகூவலுக்கினங்க 10.07.2018 இன்று காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்திற்கு தாங்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் .விடுப்பு எடுக்க முடியாதவர்கள் ஏதாவது ஒரு நேரம் வந்து கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம் 
------------------------------------------------------------------------------------------------------------------
GDS ஊழியர்களுக்கான உத்தரவு நேற்று வந்துவிட்டது .இலாகா உத்தரவு படி 15.07.2018 குள் நிலுவை தொகை வழங்கப்படும் 
01.01.2016 முதல் புதிய ஊதியம் நிர்ணயித்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும் .01.01.2016 மற்றும் 01.01.2017 ஆண்டிற்கான INCREMENT இல்லை .
2.இதர GDS களை விட GDSBPM சம்பளம் உயர்வாக இருக்கும் .ஒருபோதும் இதர GDS விட BPM சம்பளம் குறையாது .
3.வேலை பளுவிற்கான புள்ளி குறைந்தாலும் TRCA குறைக்கப்படாது .
4.COMBINDED DUTY அலவன்ஸ் 1170-- 2340 மற்றும் 1950-1170 என கனிசமாக உயர்த்தப்பட்டுள்ளது .
5.அலுவலக பராமரிப்பு படி 250 -500 என இருநிலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது 
6.FSC ரூபாய் 25
7.மகப்பேறு விடுப்பு 180 நாட்கள் சம்பளத்துடன் வழங்கப்படும் 
8.கி ராஜூடி ரூபாய் 1 50000 
9.சிவரன்ஸ் தொகை ரூபாய் 150000 
10GDS களின் வேலைநேரம் 4 மணி நேரம்  5 மணி நேரம் என மாற்றப்பட்டுள்ளது 
10.BPM ஊதியம் குறைந்தது 12000 -- அடுத்தநிலை  14500
11.இதர GDSஊதியம் குறைந்தது 10000 -- அடுத்தநிலை  12000
12.பஞ்சபடி அதே அளவீட்டில் தொடரும் .
13.போனஸ் இலாகா ஊழியர்களைப்போல் ரூபாய் 7000
14.INCREMENT நியமன தேதிக்கேற்ப ஜூலை /அல்லது ஜனவரி என நிர்ணயிக்க ப்படும் 
15.நிலுவை தொகை கணக்கிட 01.01.2016 முதல் 30.06.2018 வரையிலான TRCA 2.57 ஆல் பெருக்கிட வேண்டும் .அதில் இருந்து வாங்கிய TRCA+ DA கழித்தால் அதுதான் நிலுவைத்தொகை 
                 தோழர்களே ! கடந்த ஊதியக்குழு குறைந்தபட்ச வேலைநேரம் 3 மணியாக குறைத்து பல ஊழியர்களுக்கு ஊதியக்குறைப்பிற்கு வழிவகுத்தது .ஆனால் இன்று குறைந்தபட்ச வேலைநேரம் 4 மணிநேரமாக மாற்றப்பட்டுள்ளது .கோட்ட அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு பதவியும் எத்தனை மணிநேர வேலை என்ற உத்தரவு வரும் .ஊழியர்கள் அதை கவனமாக பரிசீலித்து தங்களது வேலைநேரம் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும் .மேலும் COMBINED DUTY அலவன்ஸ் சரியாக தரப்படுகிறதா என்பதனையும் உறுதிசெய்ய வேண்டும் . 
 நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா 

Monday, July 9, 2018

அஞ்சல் துறை எங்கே போகிறது ?
   நமது துறை அமைச்சர் மாண்புமிகு மனோஜ் சின்கா அவர்கள் நேற்று ஹிந்து நாளேட்டிற்கு கொடுத்த பேட்டி 
Communications Minister Shri.Manoj Sinha's special unterview to The Hindu. Pl see this.
~~~~~~
Already there is a company unveiled in Savings Bank Sector in Department of Posts, 
in the name of IPPB Ltd. 

Already Seperate Directorate was also unveiled viz. Parcel Directorate to seggregate
Potential parcel sector in the e-commerce area, that will lead to a separate Corporation. 
~~~~~~
“Now we are in the process of making it a separate Insurance Company under the Department of Posts. First, we will have independent strategic business unit… We should be able to do this in two years,” he said."

-ஏற்கனேவே போஸ்டல் பாலிசி 2012 திட்டத்தின் படி அஞ்சல் துறையை பல்வேறு கூறுகளாகி  படிப்படியாக தனியார் கையில் ஒப்படைக்கும் திட்டம் மெல்ல மெல்ல அரங்கேறிவருகிறது .அஞ்சல் சேமிப்புகளை IPPB கம்பெனியாகவும் -E COMMERCE என்ற பெயரில் அனைத்து பிரீமிய சேவைகளையும் அதிக வருமானத்தை ஈட்டும் பார்சல் சேவைகளை உள்ளடக்கி பார்சல் இயக்குனரகம் அமைய போகிறது .அடுத்து அரசின் கண்களை அதிகமாக உறுத்திக்கொண்டு வந்த இன்சூரன்ஸ் பகுதியை தனி இயக்குனரகமாக மாற்றும் பணிகள் முடுக்கப்பட்டுள்ளன ..
போகிற போக்கை பார்த்தால் அஞ்சல் துறை அரசுத்துறையாக நீடிக்குமா ? என்ற அச்சம் நம்மை ஆட்கொள்கிறது .
 --------------------------தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -------
10.07.2018 அன்று நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தோழர்கள் அனைவரும் முழு ஆதரவை நல்குமாறு கேட்டு கொள்கிறோம் 
                       -------------------------நெல்லை NFPE -------------------
                                                        

அன்பார்ந்த தோழர்களே !
  தமிழகத்தின் மிகப்பெரிய கோட்டமும் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் தமிழகத்தின் முதன்மை கோட்டமு மான கோயமுத்தூர் கோட்டத்தில் 18 ஆண்டுகள் தொடர்ந்து கோட்டசெயலராக/ மாநில உதவி தலைவராக மிக சிறப்பாக பணியாற்றிய தோழர் D.எபனேசர் காந்தி அவர்களின் பணிநிறைவு விழா 08.07.2018 அன்று கோவையில் சிறப்பாக நடைபெற்றது .அண்ணன் பாலு காலம் தொட்டு இன்றுவரை மேற்கு மண்டலத்தில் 
அமைதி புரட்சி ஏற்படுத்தியவர் .இவரது சொந்தஊர் நமது மாவட்டம் டோனவூர் என்பது சிறப்பம்சமாகும் .நிகழ்வில் நம் முன்னாள் அகிலஇந்திய பொது செயலர் அண்ணன் KVS மாநிலசெயலர் JR மாநிலச்சங்க நிர்வாகிகள் தோழர்   NS   ஐயம்பெருமாள் மற்றும் மத்தியமண்டல செயலர் அண்ணன் குமார் உள்ளிட்டோர்கலந்துகொண்டனர் ..விழாவில் தோழர் காந்தி அவர்களை குறித்த நினைவு மலர் வெளியிடப்பட்டது .




Saturday, July 7, 2018

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
         வணக்கம் .வருகிற 09.07.2018 திங்கள் காலை 10.30 மணிக்கு நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .இந்த பேட்டி குறிப்பாக சுழல் மாறுதல் குறித்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விவாதிக்கப்படும் .மிக அதிகளவிலான ஊழியர்கள் கிட்டத்தட்ட 66 ஊழியர்கள் இடமாறுதலுக்குள் வருகிறார்கள் .நிச்சயம் ஊழியர் நலன் சார்ந்த அணுகுமுறை இந்தமுறையும் கோட்ட நிர்வாகம் கடைபிடிக்கும் என்ற நம்பிக்கை நமக்குண்டு .அஞ்சல் எழுத்தர்களை பொறுத்தவரை  இடமாறுதல்களில் ஊழியர்களின் விருப்ப இடங்கள் கிடைத்தாலே மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் .நாம் நிச்சயம் அதற்காக பணியாற்றுவோம் .நன்றி .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

   நமது மத்திய சங்க அறைகூவலை ஏற்று நெல்லை கோட்டத்தில் கருப்பு அட்டை இயக்கம் சிறப்பாக நடைபெற்றது .இந்தமுறை புதிதாக அனைத்து அலுவலகங்களுக்கும் கோட்ட சங்கத்தின் சார்பாக wall poster அச்சடிக்கப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க அனைத்து அஞ்சலகங்கள் முன்பும் ஒட்டப்பட்டிருந்தன .மேலும் நெல்லை  RMS ரயில்நிலையம் புதிய பழைய பேரூந்துநிலையம் என மக்கள் நடமாட்டங்கள் அதிகமுள்ள பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தன .வழக்கம் போல் நெல்லை யில்  முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் நமது செய்தியை வெளியிட்டு நமக்கு ஆதரவு தந்தன .தொய்வில்லாத இந்த இயக்கங்கள் 9 ம் தேதிவரை தொடர உங்கள் ஆதரவை கோருகிறோம் .மேலும் வருகிற 10.07.2018 அன்று பாளையம்கோட்டையில் நடைபெறும் உண்ணவிராத போராட்டத்திலும் தோழர்கள் /தோழியர்கள் முழுமையாக பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம் .





Friday, July 6, 2018

அன்பார்ந்த தோழர்களே !
   CSI  அமுலாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை களையக்கோரி நமது மத்தியசங்கம் அறிவித்துள்ள 06.07.2018 முதல் 09.07.2018 வரை கருப்பு பேட்ஜ் இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திடுங்கள் .இதற்கான பேட்ஜ் நேற்றே அனுப்பப்பட்டுள்ளது .அதுபோக ஒவ்வொரு அலுவலகத்திற்கும் வால்போஸ்டர் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது .தோழர்கள் வழக்கம் போல் கருப்பு பேட்ஜ் அணிந்து அதன் புகைப்படங்களை கோட்ட சங்க வாட்ஸாப்ப் யில் பதியுமாறு கேட்டுக்கொள்கிறோம் பொதுமக்களின் பார்வைக்கு தெரியும் படி அந்த போஸ்ட்டரை அலுவலகத்தில் ஒட்டி வைக்கவும் கேட்டு கொள்கிறோம் .
                                                       உண்ணாவிரதம் 
அடுத்தகட்டமாக 10.07.2018 அன்று நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஒருநாள் உண்ணாவிரதம் நடைபெறுகிறது .கூடுமானவரை வாய்ப்புள்ள அனைத்து தோழர்களும் ஒருநாள் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் நேற்றைய நிலவரப்படி நமது மகிளா கமிட்டி தோழியர்கள்மூன்று பேர் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள வருவதாக தெரிவித்திருக்கிறார்கள் அவர்களுக்கும் கோட்ட சங்கம் நன்றிதனை தெரிவித்து கொள்கிறது .  .நமது வேண்டுகோளைஏற்று நெல்லையில் அஞ்சல் நான்கு சங்கமும் நமது போராட்டங்களில் பங்கேற்பது சிறப்பான ஒரு அ ம்சமாகும் .அதற்காக அஞ்சல்நான்கின் கோட்டசெயலர் அருமை மாமா SK .பாட்சா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .அஞ்சல் நான்கின் முன்னணி தோழர்களும் ஒருநாள் விடுப்பெடுத்து ஆதரவு நல்குமாறு கேட்டு கொள்கிறோம் .அதே போல் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகளிடமும் ஆதரவு கேட்டுள்ளோம் .அவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்கள் .
                              போராட்ட வாழ்த்துக்களுடன் 
                  SK .ஜேக்கப் ராஜ் P3 நெல்லை    
                  RV.தியாகராஜ பாண்டியன் P3 அம்பை 
SK .பாட்சா  P4 நெல்லை                           V.தங்கராஜ்  P4 அம்பை 
ரவி P3 PSD                                                                     பரமசிவம்  P4 PSD
          

Thursday, July 5, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 மீண்டும் பணியிடங்களில் கருப்பு பேட்ஜ் 06.07.2018 முதல் 09.07.2018 வரை அணிந்து பணியாற்றிடவேண்டும் .
10.07.2018 அன்று திருநெல்வேலி கோட்ட அலுவலகம் முன்பு ஒரு நாள் உண்ணாவிரதம் ( இன்றைய சூழ்நிலையில் வேலைநிறுத்தம் செய்வது சுலபம் -சொந்த காரணங்களுக்காக ஒருநாள் விடுப்பு எடுப்பது சிரமம் தான் .)இருந்தாலும் நமது மத்திய சங்க அழைப்பை ஏற்று 10.07.2018  செவ்வாய் அன்று ஒருநாள் விடுப்பு எடுத்து உண்ணாவிரதத்தில் பங்கேற்க கேட்டு கொள்கிறோம் .ஆகவே தோழர்கள் இன்றே விடுப்பை விண்ணப்பித்து தகவல்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .10.07.2018 உண்ணாவிரதத்திற்கு அம்பாசமுத்திரம் கிளை சங்கமும் நம்மோடு இணைந்து பங்கேற்கிறார்கள் .அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் .அஞ்சல் நான்கு சங்கமும் இன்று தங்களது முடிவை தெரிவிப்பதாக அறிவித்திருக்கிறார்கள் .அவர்களையும் வரவேற்கிறோம் .
                                     கோரிக்கைகள் 
CSI அமுலாக்கத்திற்கு பின் எழுந்துள்ள குறைகளை முற்றிலும் களைந்திடு !
ஊழியர்களை இலவு காத்த கிளியாக இரவு வரை காத்திருக்க வைக்காதே !
                                                CSI அவலங்கள் 
*துணை /தலைமை அஞ்சலகங்களுக்கு அனுப்பப்படும் REMITTANCE தொகைக்கு CLEARANCE கிடைப்பதில்லை .இதனால் பல லட்சம் ரூபாய் கணக்கில் வருவதில்லை 
* DAILY ACCOUNT இல் அனைத்து பரிவர்தனைகளையும் அன்றே வருவதில்லை 
* COUNTER யில் வாங்கப்படும் PLI /RPLI பிரிமியங்கள் முழுமையாக பிரதிபலிப்பதில்லை 
* பட்டுவாடா தாமதம் 
* விடுப்பு விண்ணப்பத்திற்கு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் .
                           இந்த குறைகளை தீர்த்திட நாம் அனைவரும் முழுமையாக பங்கேற்போம் .
                                             அவரவர் பசிக்கு அவரவர்  
                                             புசிக்க வேண்டும் 
                                            அவரவர் மூச்சுக்கு அவரவர் 
                                            சுவாசித்தாக வேண்டும் 
                                             தொழிலாளியின்  கோரிக்கைகளுக்கு
                                             மட்டும் தான் 
                                            நீயும்  நானும்  சேர்ந்து போராட முடியும் 
                                            இணைந்து  வாதாட முடியும் 
 தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் 
-RV .தியாகராஜ பாண்டியன்