...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, July 9, 2018

அன்பார்ந்த தோழர்களே !
  தமிழகத்தின் மிகப்பெரிய கோட்டமும் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் தமிழகத்தின் முதன்மை கோட்டமு மான கோயமுத்தூர் கோட்டத்தில் 18 ஆண்டுகள் தொடர்ந்து கோட்டசெயலராக/ மாநில உதவி தலைவராக மிக சிறப்பாக பணியாற்றிய தோழர் D.எபனேசர் காந்தி அவர்களின் பணிநிறைவு விழா 08.07.2018 அன்று கோவையில் சிறப்பாக நடைபெற்றது .அண்ணன் பாலு காலம் தொட்டு இன்றுவரை மேற்கு மண்டலத்தில் 
அமைதி புரட்சி ஏற்படுத்தியவர் .இவரது சொந்தஊர் நமது மாவட்டம் டோனவூர் என்பது சிறப்பம்சமாகும் .நிகழ்வில் நம் முன்னாள் அகிலஇந்திய பொது செயலர் அண்ணன் KVS மாநிலசெயலர் JR மாநிலச்சங்க நிர்வாகிகள் தோழர்   NS   ஐயம்பெருமாள் மற்றும் மத்தியமண்டல செயலர் அண்ணன் குமார் உள்ளிட்டோர்கலந்துகொண்டனர் ..விழாவில் தோழர் காந்தி அவர்களை குறித்த நினைவு மலர் வெளியிடப்பட்டது .




0 comments:

Post a Comment