...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, July 6, 2018

அன்பார்ந்த தோழர்களே !
   CSI  அமுலாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை களையக்கோரி நமது மத்தியசங்கம் அறிவித்துள்ள 06.07.2018 முதல் 09.07.2018 வரை கருப்பு பேட்ஜ் இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திடுங்கள் .இதற்கான பேட்ஜ் நேற்றே அனுப்பப்பட்டுள்ளது .அதுபோக ஒவ்வொரு அலுவலகத்திற்கும் வால்போஸ்டர் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது .தோழர்கள் வழக்கம் போல் கருப்பு பேட்ஜ் அணிந்து அதன் புகைப்படங்களை கோட்ட சங்க வாட்ஸாப்ப் யில் பதியுமாறு கேட்டுக்கொள்கிறோம் பொதுமக்களின் பார்வைக்கு தெரியும் படி அந்த போஸ்ட்டரை அலுவலகத்தில் ஒட்டி வைக்கவும் கேட்டு கொள்கிறோம் .
                                                       உண்ணாவிரதம் 
அடுத்தகட்டமாக 10.07.2018 அன்று நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஒருநாள் உண்ணாவிரதம் நடைபெறுகிறது .கூடுமானவரை வாய்ப்புள்ள அனைத்து தோழர்களும் ஒருநாள் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் நேற்றைய நிலவரப்படி நமது மகிளா கமிட்டி தோழியர்கள்மூன்று பேர் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள வருவதாக தெரிவித்திருக்கிறார்கள் அவர்களுக்கும் கோட்ட சங்கம் நன்றிதனை தெரிவித்து கொள்கிறது .  .நமது வேண்டுகோளைஏற்று நெல்லையில் அஞ்சல் நான்கு சங்கமும் நமது போராட்டங்களில் பங்கேற்பது சிறப்பான ஒரு அ ம்சமாகும் .அதற்காக அஞ்சல்நான்கின் கோட்டசெயலர் அருமை மாமா SK .பாட்சா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .அஞ்சல் நான்கின் முன்னணி தோழர்களும் ஒருநாள் விடுப்பெடுத்து ஆதரவு நல்குமாறு கேட்டு கொள்கிறோம் .அதே போல் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகளிடமும் ஆதரவு கேட்டுள்ளோம் .அவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்கள் .
                              போராட்ட வாழ்த்துக்களுடன் 
                  SK .ஜேக்கப் ராஜ் P3 நெல்லை    
                  RV.தியாகராஜ பாண்டியன் P3 அம்பை 
SK .பாட்சா  P4 நெல்லை                           V.தங்கராஜ்  P4 அம்பை 
ரவி P3 PSD                                                                     பரமசிவம்  P4 PSD
          

0 comments:

Post a Comment