நமது மத்திய சங்க அறைகூவலை ஏற்று நெல்லை கோட்டத்தில் கருப்பு அட்டை இயக்கம் சிறப்பாக நடைபெற்றது .இந்தமுறை புதிதாக அனைத்து அலுவலகங்களுக்கும் கோட்ட சங்கத்தின் சார்பாக wall poster அச்சடிக்கப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க அனைத்து அஞ்சலகங்கள் முன்பும் ஒட்டப்பட்டிருந்தன .மேலும் நெல்லை RMS ரயில்நிலையம் புதிய பழைய பேரூந்துநிலையம் என மக்கள் நடமாட்டங்கள் அதிகமுள்ள பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தன .வழக்கம் போல் நெல்லை யில் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் நமது செய்தியை வெளியிட்டு நமக்கு ஆதரவு தந்தன .தொய்வில்லாத இந்த இயக்கங்கள் 9 ம் தேதிவரை தொடர உங்கள் ஆதரவை கோருகிறோம் .மேலும் வருகிற 10.07.2018 அன்று பாளையம்கோட்டையில் நடைபெறும் உண்ணவிராத போராட்டத்திலும் தோழர்கள் /தோழியர்கள் முழுமையாக பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம் .
0 comments:
Post a Comment