...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, July 21, 2018

                                                       இலக்கிய இன்பம் 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கத்தை மிஞ்சிய ஒரு தத்துவ ஞானி -கவிஞர் உண்டென்றால் அவர்தான் கணியன் பூங்குன்றனார் .சங்ககால புகழ்பெற்ற புலவர் .சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மகிபாலன்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் .அவரின் அழியா புகழுக்கு அவரது ஒற்றை வரிகளே 
சான்று .அதுதான் 
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இந்த ஒரு வார்த்தை சொல்ல என்ன ஒரு மனித நேயம் வேண்டும்! அனைத்து உலகும் எனது உறவு. அனைத்து மக்களும் எனது உறவு. எந்த ஊரும் எனது ஊரே என்பது எவ்வளவு உயர்ந்த சிந்தனை!
இந்த மாதிரி ஒரு சிந்தனை, வார்த்தை, சொல் வர வேண்டும் என்றால், அந்த மனிதர், அந்த புலவர், எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்! அவர் வாழ்ந்த சூழலும், சுற்றமும், ஊரும், நாடும், எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்!
எனக்கென்று ஒரு எல்லை என்பது இல்லை என்று சொல்வதற்கு, மிகப் பெரிய சிந்தனை, மிகப் பரந்த மனப்பாங்கு வேண்டும். 'எனது நாடு, எனது ஊர், எனது வீடு' என்று இருப்பார் மத்தியில், 'எல்லாரும் என் உறவினரே' என்று சொல்வது மிகப் பெரிய மாற்றம் அல்லவா!
'எல்லோரும் என் உறவு' என்று சொல்லும்போது, என்னிடம் இருப்பதை, அனைவரிடமும் பகிர்ந்து அளிப்பதற்கும், அவர்கள் அளிப்பதை மகிழ்ச்சியோடு ஏற்கவும் மனம் வேண்டும்.  


யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192) (தொடரும் )

1 comment:

  1. Sir Combain duty க்கு அரியர் உண்டா? சொல்லுங்க

    ReplyDelete