...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 18, 2018

பாளையம்கோட்டையில் நேற்று கமேலேஷ் சந்திரா கமிட்டி உத்தரவின் விளக்க கூட்டம் நடைபெற்றது .அதில் ஒருபகுதியாக நெல்லையில் இலாகா ஊழியர்களில் அதிகநாட்கள் அதாவது ஐந்து நாட்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று சிறப்பித்த நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவிக்கப்பட்டது .
விளக்க உரையில் இருந்து ...
TRCA BPM ஊழியர்களுக்கு போஸ்ட்மேன் சம்பள அடிப்படையிலும் -இதர GDS ஊழியர்களுக்கு MTS ஊதிய அடிப்படையிலும் TRCA வழங்கப்பட்டுள்ளது .
உதாரணமாக MTS மொத்த பணிநேரமான 7.30 மணிக்கு குறைந்தபட்ச சம்பளம் ஏழாவது ஊதிய குழுவில் 18000 என்ற கணக்கில் 4 மணிநேரத்திற்கு ரூபாய் 9600 5 மணிநேரத்திற்கு ரூபாய் 12000 என உள்ளதை கமிட்டி 9600 என்பதனை 10000 என உயர்த்தியதை அரசு ஏற்றுள்ளது .அதே போல் தபால் காரர் சம்பளமான 21700 அடிப்படையில் BPM ஊழியர்களுக்கு ரூபாய் 4 மணிநேரத்திற்கு 12000 மற்றும் 5 மணிநேரத்திற்கு 14500 என வழங்கப்பட்டுள்ளது .
உதாரணம்   தபால் காரரின் ஒருமணிநேர ஊதியம் 
  7.5 X 21700
------------------+ 95.17  
    30.4
தபால்காரரின் ஒருமணிநேர சம்பளம்   ரூபாய் 95.17 
MTS ஊழியரின் ஒருமணிநேர சம்பளம்  ரூபாய்  80 
இந்த அடிப்படையில் தான் TRCA நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 




0 comments:

Post a Comment