...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, July 19, 2018

                                                 முக்கிய செய்திகள் 
     தபால் காரர்களுக்கு 5 வது சம்பளக்குழுவில் அடிப்டைசம்பளம் ரூபாய் 3050 வழங்கவேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அஞ்சல் வாரியமும் அதற்கான உத்தரவை  23.06.2018 அன்று பிறப்பித்துள்ளது .இதன்படி 01.01.1996 முதல் 10.10.1997 வரை 1996 யில்     பணியில் இருந்த         தபால்காரர்களுக்கு ஜனவரி 1996 இல் அடிப்படை சம்பளம் ரூபாய் 3050 யை நோஷனல் ஆக நிர்ணயிக்க வேண்டும் .இந்த 01.01.1996 முதல் 10.10.1997 வரை FIXATION  மட்டுமே உண்டு என்றும் அரியர்ஸ் ஏதும் வழங்கப்படாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது .
  இந்த உத்தரவை விரைந்து அமுல்படுத்த வலியுறுத்தி அஞ்சல் நான்கு மாநில செயலர்   17.07.2018 அன்று நமது CPMG அவர்களை சந்தித்து வற்புறுத்தியுள்ளார் . .CPMG அவர்களும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்கள் .
அதன்படி 01.01.1996 முதல் 11.10.1997 வரையிலான தபால்காரராக பணியில் இருந்தவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிட்டும் .குறிப்பாக இந்த சலுகை ஓய்வுபெற்றவர்களுக்கும் பொருந்தும் 
---------------------------------------------------------------------------------------------------------------------------                         புதிய பென்ஷன் அமுலாகிவிட்டதால்    பழைய பென்ஷன் என்பது சாத்தியமில்லை .ஏனென்றால் அவ்வாறு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை என்னாகும் -இது சாத்தியமில்லை என்று நினைக்கும் தோழர்களுக்கு ஒரு நல்ல தகவல் .சமீபத்தில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பை ஒட்டி வெளியிடப்பட்ட அரசின் ஆணையை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம் .அதன்படி 
 ஒவ்வொரு இலாகாவிலும 2004க்கு முன்பு் கேசுவல் லேபராக பணிபுரிந்தவர்களை 2004 க்கு பிறகு பணிநிரந்தம் செய்திருந்தாலும் அவர்களுக்கும் பழைய பென்சனே வழங்கலாம். அவர்களிடம் NPS க்காக பணம் பிடித்திருந்தால் அதனை GPFல் சேர்க்க வேண்டும். அரசு சார்பில் வழங்கிய பங்களிப்பு தொகை மட்டும் அதில் சேர்க்கப்படாது.
 அவர்களது முந்தைய சர்வீஸ் கணக்கில் கொண்டு பழைய பென்சன் திட்டத்தில் இவர்களை சேர்க்க வேண்டும். என உத்தரவு வந்துள்ளது .நமது துறையிலும்  இதே போல் பதவிஉயர்வு பெற்றMTS/போஸ்ட்மேன் களுக்கு  GDS பணிக்காலத்தில் 
 5/8 சர்வீஸ் காலத்தை எடுத்துக்கொண்டு  பழைய பென்சன் வழங்க வேண்டும்  என்ற தீர்ப்பை பெற்றுள்ளோம் .அதே போல் எந்த ஆண்டிற்கான காலி இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டார்களோ(2002 -2003) அவர்களுக்கும் 
பழைய பென்ஷன் பொருந்தும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது .கேசுவல் லேபர் வழக்கை போல் நமக்கும் அரசு இந்த உத்தரவை பிறப்பிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை .
     நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 





0 comments:

Post a Comment