...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, July 27, 2018

                                            முக்கிய செய்திகள் 
கமலேஷ் சந்திரா கமிட்டி அமுலாக்கத்திற்கு பிறகு கிளை அஞ்சலகங்களை   வருவாய் அடிப்படையில் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன .
 100 சதம் வருவாய் ஈட்டும்  BO A பிரிவு பச்சை (GREEN )
75 சதம் முதல் 99.9 வரை              B  பிரிவு ஆரஞ்சு (ORANGE)
50 சதம் முதல் 47.9 வரை             C   பிரிவு  இளஞ்சிகப்பு (PINK )
50 சதத்திற்கு கீழ்                          D     பிரிவு  சிகப்பு   (RED ) 
100 சதத்திற்கு மேல் உள்ள அலுவகத்திற்கு  அலவன்ஸ் வழங்கப்படும் 
B பிரிவில் உள்ளவர்களுக்கு நிர்வாகத்தால் ஊக்குவிக்கப்பட்டு 100 சதத்தை எட்ட உதவுவார்கள் 
C பிரிவு ஊழியர்களுக்கு முறையான கடிதம் அனுப்பப்பட்டு கிளை அஞ்சலக அலுவகத்தில் வருவாயை பெருக்கவும்  கூடுதலாக 30 நிமிடம் பணி செய்யவும் பணிக்கப்படுவார்கள் 
D பிரிவு அலுவகத்திற்கு RED ALERT நோட்டீஸ் கொடுக்கப்பட்டு கூடுதலாக 60  நிமிடம் பணி செய்யவும் பணிக்கப்படுவார்கள் .தொடர்ந்து வருவாய் ஈட்டுவதில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அந்த அலுவகத்தை இணைக்கவோ /வேறு இடத்தில் மாற்றவோ நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் .
                          இதை வைத்துக்கொண்டு நமது கோட்டத்திலும் ஒருசில கிளை அஞ்சலகங்களுக்கு FORMAL நோட்டிஸ் மற்றும் RED ALERT கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .ஆகவே இது போன்ற கடிதங்கள் வந்தால் சம்பந்தப்பட்ட BPM தோழர்கள் உடனடியாக கோட்ட சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டுவர கேட்டு கொள்ள படுகிறார்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment