...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, July 5, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 மீண்டும் பணியிடங்களில் கருப்பு பேட்ஜ் 06.07.2018 முதல் 09.07.2018 வரை அணிந்து பணியாற்றிடவேண்டும் .
10.07.2018 அன்று திருநெல்வேலி கோட்ட அலுவலகம் முன்பு ஒரு நாள் உண்ணாவிரதம் ( இன்றைய சூழ்நிலையில் வேலைநிறுத்தம் செய்வது சுலபம் -சொந்த காரணங்களுக்காக ஒருநாள் விடுப்பு எடுப்பது சிரமம் தான் .)இருந்தாலும் நமது மத்திய சங்க அழைப்பை ஏற்று 10.07.2018  செவ்வாய் அன்று ஒருநாள் விடுப்பு எடுத்து உண்ணாவிரதத்தில் பங்கேற்க கேட்டு கொள்கிறோம் .ஆகவே தோழர்கள் இன்றே விடுப்பை விண்ணப்பித்து தகவல்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .10.07.2018 உண்ணாவிரதத்திற்கு அம்பாசமுத்திரம் கிளை சங்கமும் நம்மோடு இணைந்து பங்கேற்கிறார்கள் .அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் .அஞ்சல் நான்கு சங்கமும் இன்று தங்களது முடிவை தெரிவிப்பதாக அறிவித்திருக்கிறார்கள் .அவர்களையும் வரவேற்கிறோம் .
                                     கோரிக்கைகள் 
CSI அமுலாக்கத்திற்கு பின் எழுந்துள்ள குறைகளை முற்றிலும் களைந்திடு !
ஊழியர்களை இலவு காத்த கிளியாக இரவு வரை காத்திருக்க வைக்காதே !
                                                CSI அவலங்கள் 
*துணை /தலைமை அஞ்சலகங்களுக்கு அனுப்பப்படும் REMITTANCE தொகைக்கு CLEARANCE கிடைப்பதில்லை .இதனால் பல லட்சம் ரூபாய் கணக்கில் வருவதில்லை 
* DAILY ACCOUNT இல் அனைத்து பரிவர்தனைகளையும் அன்றே வருவதில்லை 
* COUNTER யில் வாங்கப்படும் PLI /RPLI பிரிமியங்கள் முழுமையாக பிரதிபலிப்பதில்லை 
* பட்டுவாடா தாமதம் 
* விடுப்பு விண்ணப்பத்திற்கு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் .
                           இந்த குறைகளை தீர்த்திட நாம் அனைவரும் முழுமையாக பங்கேற்போம் .
                                             அவரவர் பசிக்கு அவரவர்  
                                             புசிக்க வேண்டும் 
                                            அவரவர் மூச்சுக்கு அவரவர் 
                                            சுவாசித்தாக வேண்டும் 
                                             தொழிலாளியின்  கோரிக்கைகளுக்கு
                                             மட்டும் தான் 
                                            நீயும்  நானும்  சேர்ந்து போராட முடியும் 
                                            இணைந்து  வாதாட முடியும் 
 தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் 
-RV .தியாகராஜ பாண்டியன் 

0 comments:

Post a Comment