...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 10, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 நமது மத்திய சங்க அறைகூவலுக்கினங்க 10.07.2018 இன்று காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்திற்கு தாங்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் .விடுப்பு எடுக்க முடியாதவர்கள் ஏதாவது ஒரு நேரம் வந்து கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம் 
------------------------------------------------------------------------------------------------------------------
GDS ஊழியர்களுக்கான உத்தரவு நேற்று வந்துவிட்டது .இலாகா உத்தரவு படி 15.07.2018 குள் நிலுவை தொகை வழங்கப்படும் 
01.01.2016 முதல் புதிய ஊதியம் நிர்ணயித்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும் .01.01.2016 மற்றும் 01.01.2017 ஆண்டிற்கான INCREMENT இல்லை .
2.இதர GDS களை விட GDSBPM சம்பளம் உயர்வாக இருக்கும் .ஒருபோதும் இதர GDS விட BPM சம்பளம் குறையாது .
3.வேலை பளுவிற்கான புள்ளி குறைந்தாலும் TRCA குறைக்கப்படாது .
4.COMBINDED DUTY அலவன்ஸ் 1170-- 2340 மற்றும் 1950-1170 என கனிசமாக உயர்த்தப்பட்டுள்ளது .
5.அலுவலக பராமரிப்பு படி 250 -500 என இருநிலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது 
6.FSC ரூபாய் 25
7.மகப்பேறு விடுப்பு 180 நாட்கள் சம்பளத்துடன் வழங்கப்படும் 
8.கி ராஜூடி ரூபாய் 1 50000 
9.சிவரன்ஸ் தொகை ரூபாய் 150000 
10GDS களின் வேலைநேரம் 4 மணி நேரம்  5 மணி நேரம் என மாற்றப்பட்டுள்ளது 
10.BPM ஊதியம் குறைந்தது 12000 -- அடுத்தநிலை  14500
11.இதர GDSஊதியம் குறைந்தது 10000 -- அடுத்தநிலை  12000
12.பஞ்சபடி அதே அளவீட்டில் தொடரும் .
13.போனஸ் இலாகா ஊழியர்களைப்போல் ரூபாய் 7000
14.INCREMENT நியமன தேதிக்கேற்ப ஜூலை /அல்லது ஜனவரி என நிர்ணயிக்க ப்படும் 
15.நிலுவை தொகை கணக்கிட 01.01.2016 முதல் 30.06.2018 வரையிலான TRCA 2.57 ஆல் பெருக்கிட வேண்டும் .அதில் இருந்து வாங்கிய TRCA+ DA கழித்தால் அதுதான் நிலுவைத்தொகை 
                 தோழர்களே ! கடந்த ஊதியக்குழு குறைந்தபட்ச வேலைநேரம் 3 மணியாக குறைத்து பல ஊழியர்களுக்கு ஊதியக்குறைப்பிற்கு வழிவகுத்தது .ஆனால் இன்று குறைந்தபட்ச வேலைநேரம் 4 மணிநேரமாக மாற்றப்பட்டுள்ளது .கோட்ட அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு பதவியும் எத்தனை மணிநேர வேலை என்ற உத்தரவு வரும் .ஊழியர்கள் அதை கவனமாக பரிசீலித்து தங்களது வேலைநேரம் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும் .மேலும் COMBINED DUTY அலவன்ஸ் சரியாக தரப்படுகிறதா என்பதனையும் உறுதிசெய்ய வேண்டும் . 
 நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா 

0 comments:

Post a Comment