...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 2, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
         குரூப் C மற்றும் மற்றும் NON GAZETTED குரூப் B மற்றும் ASP கேடர்களுக்கான இடமாறுதல் குறித்த புதிய வழிகாட்டுதல்களை அஞ்சல் வாரியம் 31.07.2018 அன்று வெளியிட்டுள்ளது .இது முந்தைய பழைய உத்தரவுகளை SUPERSEDE செய்து உடனடி அமுலுக்கு வருகிறது .
RULE 38 இடமாறுதல்கள் 
1.அஞ்சல் எழுத்தர்களை பொறுத்தவரை PROBATION காலம் மற்றும் இரண்டாண்டு சேவை முடித்திருந்தால் RULE 38 இடமாறுதலுக்கு தகுதியுள்ளவர்கள் .
2.ஒரே மண்டலத்திற்குள் வேறு கோட்டங்களுக்கு இடமாறுதல் கொடுக்கும் அதிகாரம் PMG ஆவார் 
3.ஒரே வட்டம் பிற மண்டலம் என்றால் இடமாறுதல் கொடுக்கும் அதிகாரம் CPMG 
4.பிற மாநிலங்களுக்கு செல்வதென்றால் DG (P ) க்கு தான் அதிகாரம் 
5.RULE 38 இன் கீழ் விண்ணப்பங்கள் பெற்ற முப்பது நாட்களுக்குள் .அதுகுறித்தான விளக்க குறிப்போடு அதை மண்டல அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும் 
6.மண்டல அளவில் INWARD /OUTWARD பராமரிக்கப்பட்டு அதை 60 நாட்களுக்குள் நமது இந்தியா போஸ்ட் இனைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் 
7.RULE 38 இடமாறுதல் ஆண்டுக்கு ஒருமுறை டிசம்பர் 31 இல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் புதிய இடத்தில பணி யாற்றும் வகையில் இருக்கும் .
8.இரண்டு வருடம் என்பது மாற்று திறனாளிகள் அல்லது துணையாள் யாருக்காவது தீவீர நோய் தாக்குதல் இருப்பின் CPMG ஒப்புதலுடன் தளர்த்தப்படும் .
10.TEMPORARY இடமாறுதல் ஒட்டு மொத்த சேவைக்காலத்தில்  மொத்தம்  மூன்று ஆண்டுகள் இரண்டு முறை வழங்கப்படும் .ஒரு SPELL கும் அடுத்த SPELL  கும் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இடைவெளி அவசியம் .
ROTATIONAL TRANSFER
1.போஸ்ட் TENURE என்பது மூன்று ஆண்டுகள் 
2.HUMAN RESOURCE மற்றும் தேவைகளின் அடிப்படையில் இடமாறுதல்கள் ஊழியர்களின் விருப்பங்களின் அடிப்படையில் இருந்திடவேண்டும் 
3.வேறு ஸ்டேஷன் களுக்கு மாற்றல் செய்யும் பொழுதும் செலவு சிக்கனங்களை கருத்தில் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் 
4.கூடுமானவரை SPOUSE பிரிவில் ஊழியர்களின் விருப்ப இடமாறுதல்களை அளிக்கவேண்டும் .
5.மாற்று திறனாளிகள் / DISABLED குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோர்களுக்கு சலுகை வழங்கவேண்டும் .
6.RT அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் .
7.கல்வியாண்டின் தொடக்கத்திற்குள் அனைத்தும் முடிவடைய வேண்டும் .
 நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 




0 comments:

Post a Comment