IPPB- அமுலாக்கம் யார் குற்றம் ?
விதியின் குற்றமா ?விதியின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் வீணர்களின் குற்றமா ?என பராசக்தி திரைப்பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது .
விதியின் குற்றமா ?விதியின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் வீணர்களின் குற்றமா ?என பராசக்தி திரைப்பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது .
ஜூன் 2016 இல் மத்திய அமைச்சரவை IPPB தொடங்குவதற்கு ஒப்புதல் கொடுத்தது .2016 சுதந்திர தினத்தன்று நமது பிரதமர் அவர்களும் பெருமைப்பட இதை தெரிவித்தார் .முதற்கட்டமாக செப்டம்பர் 2017 குள் 650 கிளைகளை நிறுவ திட்டமிட பட்டிருந்தது .முன்னதாக 2015 இல் RESERVE வங்கியின் ஒப்புதலை பெற்றிருந்தது .அதன் அடிப்படையில் தான் பெருநிறுவன அமைச்சக (MINISTRY OF CORPORATE AFFAIRS ) கீழ் இயங்கும் நிறுவனங்கள் 2013 சட்டத்தின் படி பெறு நிறுவனங்களோடு IPPB இணைப்பு சான்றிதழை பெற்றது .இந்தப்பின்னணியில் தான் அதற்கான தனி வாரியம் அமைக்கப்பட்டு அதற்கான நிர்வாக இயக்குனர்கள் உள்ளிட்ட BOARD OF DIRECTORS நியமிக்கப்பட்டார்கள் .அதனை தொடர்ந்து ஆட்சேர்ப்பு மற்றும் DEPUTATION அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டார்கள் .இந்த சூழ்நிலையில் மாவட்டத்திற்கு ஒரு தலைமை அஞ்சலகம் வீதம் 650 கிளைகளை நிர்வகிக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதனுடைய உட்கட்டமைப்புகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் பணிகள் முடிக்கப்பட்டு இன்று திறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது .அஞ்சல் வாரியமும் அனைத்து அஞ்சல் ஊழியர்களுக்கும் சம்பள கணக்கை IPPB யில் தொடங்க உத்தரவிட்டுள்ளது .இது அனைவருக்கும் அறிந்த செய்திதான் .பலருக்கும் தெரிந்திருந்தும் மறந்த ஒரு செய்தி கடந்த 07.03.2018 அன்று நமது துறைசெயலர் திரு .நந்தா IPPB சார்பாக சுரேஷ் சீதை CEO &MD IPPB இவர்கள் தலைமையில் ஒருபுறமும் அனைத்து சங்க பிரதிநிதிகள் (NFPE FNPO BPEF மற்றும் GDS சங்கங்கள் (AIGDSU NFPE -GDS NUGDS &BPEDA
) என அஞ்சல் துறையில் உள்ள பிரதிநிதிகள் கலந்துகொண்ட பட்டறை (WORKSHOP) நடத்தப்பட்டு IPPB யின் வணிகத்திறன் கண்ணோட்டம் -IPPB ஒருங்கிணைப்பதால் ஏற்படும் நன்மைகள் -IPPB யால் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் GDS ஊழியர்களுக்கு உள்ள வாய்ப்புகள் மற்றும் DOP -IPPB இயக்கங்கள் என முதற்கட்டமாக விளக்கி கூறப்பட்டுள்ளது .அதனை தொடர்ந்து நடந்த இரண்டாவது அமர்வில் ஒரு INTERACTION SESSION யில் நமது NFPE சார்பில் நமது கருத்துக்களும் சமர்ப்பிக்கப்பட்டது
1.முதற்கட்டமாக இந்த கார்ப்பரேட் நடவடிக்கைக்கு NFPE தனது எதிர்ப்பினை பதிவு செய்தது
2.இதை கார்ப்பரேட் நிறுவனம் என்பதனை மாற்றி அரசு சார்ந்த நிறுவனமாக மாற்ற வேண்டும்
3.இந்த பணிகளுக்கு 100 சதம் அஞ்சல் ஊழியர்களையே பயன்படுத்த வேண்டும் .வெளி ஆளெடுப்பு கூடாது
4.இருக்கின்ற நெட் குளறுபடிகளை நீக்கி அஞ்சல் துறைக்கென்று தனியாக நெட் வசதிகள் (ரயில்வே போன்று ) அமைத்து தரவேண்டும்
இதில் நமது கோரிக்கைகளில் எதையும் ஏற்காமல் IPPB அமுல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது .
2015 முதல் அரசு IPPB தொடர்பான முயற்சிகளை எடுத்த சூழ்நிலையில் இருந்து இன்றுவரை நமது தரப்பில் இருந்து எந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்திருக்கவேண்டும் -கொடுத்தோம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று .மற்றொரு தரப்பில் இருந்து NET BANKING மைக்ரோ சிம் FUND TRANSFER என காலசூழலுக்கு ஏற்ப நாமும் மாறினால் என்ன என்ற கேள்விகளும் கேட்க படுகிறது .எப்படி 1990 களில் கம்ப்யூட்டரை புகுத்தாதே என்ற நமது கோஷமும் இன்று புதிய கம்ப்யூட்டர் கொடு தரமான கட்டமைப்பு வசதிகளை செய்துகொடு என நமது கோரிக்கையும் வர்ணம் பூசப்பட்டு மாற்றப்பட்டிருக்கிறது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் . (தொடரும் )
நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment