...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 23, 2018

                                      நெல்லை கோட்ட செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
                                             நமது கோட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திரு .R .சாந்தகுமார் அவர்களின் ஊழியர் நலன் சார்ந்த செய்லபாடுகளுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு .இதோ !
 தோழர் ஆனந்தராஜ் GDS வடுக்கன்பட்டி அவர்கள் தனக்கு GDS கமிட்டி சிபாரிசு அடிப்படையில் CONBINED DUTY அலவன்ஸ் உயர்த்தி கொடுக்க படவில்லை என நமது வழிகாட்டுதலின் பேரில் மனு செய்திருந்தார் .அவரது மனுவின் மேல் உடனடி நடவடிக்கை எடுத்ததுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கோட்ட நிர்வாகத்தால் பதில் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது .உள்ளபடியே நமது கண்காணிப்பாளர் அவர்களின்இந்த  செயல் பாராட்டுதலுக்குரியது .மேலும் கோட்ட அலுவலகத்தில் இருந்தே தங்கள் அலுவலகங்களுக்கு என்னென்ன தேவைகள் என எழுத்து பூர்வமாக கேட்கப்பட்டுவருகின்றன .ஆகவே தோழர் /தோழியர்கள் தங்கள் அலுவலக குறைகள் எதுவாயினும் கோட்ட நிர்வாகத்திற்கு எழுத்து பூர்வமாக தெரிவித்து விட்டு அதன் நகலை கோட்ட சங்கத்திற்கு அனுப்பவும் .குறிப்பாக குடும்பத்துடன் தங்குவதற்கு அடிப்படை வசதியில்லாத அலுவலகங்களை DE QUARTERS செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நம்மிடம் தெரிவித்துள்ளார்
                                                              வருந்துகிறோம் 
தோழர் மரிய மைக்கேல் GDSMD கீழநத்தம் அவர்கள் 22.08.2018 அன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்கள் என்பதனை    வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம்    அன்னாரது    இறுதி சடங்கு இன்று 23.08.2018 மதியம் நடைபெறுகிறது .தோழரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு நெல்லை       NFPE ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை   

0 comments:

Post a Comment