தலைவர் கலைஞர் மறைந்தார்
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் மறைந்தார் .ஒரு தலைவனுக்குள்ள அனைத்து தகுதிகளையையும் தன்னகத்தே கொண்ட ஒப்பற்ற தலைவர் ..அரசியலுக்கு அப்பாற்பட்டு என்னை ஈர்த்த ஒரு விஷயம் -தொடர் தோல்விகளை கண்டு துவளாது -சோர்ந்துகொண்டிருந்த தம் தம்பிமார்களுக்கு அவர் ஊட்டிய உற்சாகம் என்றும் மறக்கமுடியாது . MGR அரசியல் பிரவேசித்த பிறகு திமுக கண்ட தோல்வி கொஞ்சமல்ல -ஆனால் ஏதும் நடக்காதது போல் அவரது வார்த்தைகள் -கவிதைகள் உடன்பிறப்புகளை உற்சாகம் குறையாமல் காத்தன . உதாரணமாக 1986 அருப்புக்கோட்டை -நெல்லை இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது .அதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கவியரங்கில் கலைஞர் வாசித்த கவிதை வரிகளிலில் சில ...
வெற்றி பெற்ற நாம் இங்கே
வீரவாள் சுழற்றி கொண்டிருக்க
வீணர்களுக்கு என்ன விழா என
ஆணவ குரல் ஒன்று கேட்குதுஅங்கே !
விளக்கம் ஒன்றை அவர்களுக்கும்
உங்களுக்கும் சொல்வேன் நான்
விளக்கை அணைத்துவிட்டு
வீட்டிற்குள் புகுந்த திருடன்
அகப்பட்டதை சுருட்டி கொண்டு
அகப்படாமல் ஓடியதைப்போல்
அருப்புக்கோட்டை நெல்லை தொகுதியை
வென்று விட்டனர் .........
மேலும்
மறைந்திருந்து மானமிகு
வாலியை வீழ்த்திய
மாண்புமிகு ராமச்சந்திரனை
மாவீரன் என்று போற்ற
மகாகவி கம்பனே தயங்கினானான் என்றால்
மாண்டாலும் வெற்றி வாலிக்குதானே !
ஆண்டாளும் அவன் தம்பி
சுக்கிரவனுக்கு தோல்விதானே !
இலக்கிய நய மிக்க வரிகளுக்கும் குறைவிருக்காது
மன்றமொன்றில் இசைவாணர்
கீத மழை பொழிகின்றார்
மக்களெல்லாம் மதுகுடித்த
வண்டுபோல் மயங்குகிறார்கள்
மேலும் சிலர் ஆர்வமோடு
பத்துப்பாட்டு பாடு என்கிறார்கள்
பாடுகிறேன் -என்ன தொகை தருவீர்கள் என்றார்
எட்டுத்தொகை தருவோம் என்றார்
எந்தன் பத்துப்பாட்டுக்கு எட்டுத்தொகையா ?
இது எனக்கு குறுந்தொகை என்றார்
நானுறு தருவீர்களா ?
அதுவும் அகத்தில் நானுறு
புறத்தில் நானுறு ......
நீண்ட துயில் கலந்தெழுந்தேன்
நெடுநெல் வாடை பட்டதாலே !
தலைவர் கலைஞர் அவர்களுக்கும் நம் தலைவர் NCA அவர்களுக்கும் இருந்த உறவு -தொடர்பு என்பதும் சாதாரனதுஅல்ல .நமது மாநில மாநாடுகளில் கலந்து கொண்டு கலைஞர் சிறப்பித்தார்கள் என்பதெல்லாம் பொன்னான வரலாறு .தலைவர் NCA அவர்கள் பேரறிஞர் அண்ணா கலைஞர் அவர்களுடனும் அண்ணன் பாலு தலைவர் NCA அவர்கள் கலைஞர் அவர்களுடனும் இருக்கும் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன .அந்தளவிற்கு தமிழகத்தில் அஞ்சல் மூன்று தனது ஆளுமை செலுத்தியிருக்கிறது என்று நினைக்கும் போது எத்தனை பெருமை நமக்கிருக்கிறது
திராவிட தலைவர் கலைஞர் அவர்கள் மறைவிற்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை நெல்லை NFPE சார்பாக தெரிவித்து கொள்கிறோம்
தோழமையுடன்SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment