...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 28, 2018

                                       DOP VS IPPB போட்டிகள் இனிதே துவக்கம் 
நாடுமுழுவதும் IPPB தனது சேவையை 01.09.2018 முதல் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே IPPB கணக்குகளை தொடங்க அஞ்சல் ஊழியர்களை அதிகாரிகள் வி (மி )ரட்ட தொடங்கி விட்டார்கள் .குறிப்பாக தபால் காரர்கள் மற்றும் GDS ஊழியர்களை இலக்குகளை நிர்ணயித்து IPPB கணக்குகளை பிடிக்க நிர்பந்திக்க தொடங்கிவிட்டார்கள் .IPPB -DOP அடிப்படை ஒப்பந்தமே மார்க்கெட்டிங் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் IPPB பணியாளர்கள் தான் செய்ய வேண்டும் என்று இருக்கும் போது இன்று அஞ்சல் ஊழியர்களை அனுப்புவது ஏற்புடையது தானா ?பல கோட்டத்தில் தபால்காரர் பணியினை COMBINED செய்துவிட்டு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தபால் காரர் IPPB கணக்கு பிடித்து கொடுக்க வாய்மொழி உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன .சில கோட்டங்களில் IPPB மானேஜர்கள் அஞ்சல் ஊழியர்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதாக புகார் கொடுக்க தொடங்கி உள்ளார்கள் .தபால் காரர்களுக்கு கொடுக்கப்பட்ட உபகரணங்கள் நிலையோ அதைவிட மோசமாக இயங்கி வருகிறது .மிக அதிகநேர சுற்றலுக்கு பிறகே ஒவ்வொரு நிலையை கடக்க முடிகிறதாம் .இதுபோக முதல் 100 நாட்களுக்குள் அதாவதுஆகஸ்ட் 20முதல் நவம்பர் 30 குள் இலக்கை எட்டும் அதிகாரிகளுக்கு Foreign Educational Tour to Asia Pacific Postal college, Bangkok Thailand மற்ற ஊழியர்களுக்கு தலைநகரில் ஒரு நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது .அதனால் தான் என்னவோ நாடெங்கிலும் IPPB மார்கெட்டிங்கை அஞ்சல் ஊழியர்களை கொண்டு நடத்திட தீவீரமாக அதிகாரிகள் முனைப்பு காட்டுகிறார்கள் .இது குறித்து மாநிலச்சங்க வாட்ஸாப்ப் குரூப்பில் 
 ஆந்திர மாநில ஒரு குழு பகிர்ந்திட்ட  வாட்ஸ் அப் விவாதங்களின் பகிர்வு. இதோ 
மேலும்  அந்த வியாதி இங்கு வரலாம். நாம்தான் விழிப்புடன் எதிர்க்க வேண்டும். தல மட்டத்தில் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து ஒத்துழையாமை நடத்திட வேண்டும். இப்போதே தோழர்களிடம் எடுத்துச் சென்று எதிர் மனநிலையை ஏற்படுத்துங்கள்.என மாநில சங்கம் எச்சரித்துள்ளது .ஆகவே எல்லாவித கொள்கை முடிவுகளை தீவிரமாக எதிர்த்து போராடும் நமது தமிழ் மாநிலச்சங்கம் மற்றும் ஒருங்கிணைப்புக்குழு இனைந்து சரியான வழிகாட்டுதல்களை ஊழியர்களுக்கு வழங்கினால் நிச்சயம் ஒத்துழையாமை இயக்கம் என்பதை ஒருங்கிணைந்து வெற்றிகரமாக நடத்திடுவோம் என்பதனை தெரிவித்து கொள்கிறோம் .
                    நேற்று கூட  ஒரு GDS ஊழியர்   தற்கொலைக்கு போகும் அளவிற்கு மயிலாடுதுறையில் குட்டி அதிகாரிகளின் கொட்டம் அதிகரித்துள்ளதை நினைக்கும் பொழுது ஒரு ஒன்றுபட்ட இயக்கத்தை தமிழகம் தழுவிய அளவில் நடத்தியாக வேண்டும் (மாநிலச்சங்கத்தின் நேற்றைய அதிவேகதலையீடு பாராட்டுதலுக்குரியது ) .பலகட்டமாக தருமபுரியில் இளைய தோழர்கள் தலைமையேற்று போராடி வருகிறார்கள் .அவர்களுக்கு ஆதரவாக குறைந்தபட்சம் மண்டலஅளவிலாவது கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திடவேண்டும் .அப்பொழுதுதான் போராடும் எந்த கோட்டமும் தனித்து விடப்பட்ட கோட்டமல்ல -தமிழகமே அதன் பின்னால் நிற்கும்  என்பதை நாம் நிலை நிறுத்த வேண்டும் .
                                               அதிகார மமதையில் 
                                               ஆட்டம் போடும் அதிகாரிகளை 
                                              ஆட்டம் காண வைப்போம் 
                                              புதிது புதிதாக கொடுக்கு முளைக்கும் 
                                             குட்டி அதிகாரிகளின் 
                                              கொட்டத்தை அடக்குவோம் 
                                              பரவட்டும் தீ பரவட்டும் -இது 
                                              வார்த்தை அல்ல -தொழிலாளியின் 
                                               வாழ்க்கை என்பதனை நிரூபிப்போம் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment